Saturday, August 15, 2009

சுதந்திர தினம் 2009

தேடிக் சோறுநிதந் தின்று

பல சின்னஞ் சிறு கதைகள் பேசி

மனம் வாடித் துன்பமிக உழன்று

பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிக் கிழப்பருவம் எய்தி

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்

பல வேடிக்கை மனிதரைப்போலே

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?

அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,

அகத்திலே அன்பினோர் வெள்ளம்,

பொறிகளின் மீது தனியரசாணை

பொழுதெலாம் நினது பேரருளின்

நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்

நிலைத்திடல் என்றிவை யருளாய்

குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்

குலவிடு தனிப்பரம் பொருளே!

யார்க்கும் குடியல்லேன் யானென்ப

தோர்ற்தனன் மாயையே! உன்றன்

போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்

உன்னை-மாயையே!

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்!. என்றன்

காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.

சுப்பிரமணிய பாரதி (1936)

------------------------------------------------------------------------------------------

சுதந்திர தினமான இன்று, ஒரு சுதந்திர ஒரு போராட்ட தியாகியையாவது

நினைவு செய்வோம்.

சுதந்திர தின வாழ்த்துக்கள்.........


Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger