Tuesday, September 15, 2009

பிச்சைப்பாத்திரம் - 2

சட்டப்பூர்வமான பார்வை

The Beggary Prevention Act-ன் படி பிச்சையெடுப்பது குற்றம் என அறியப்படுகிறது. ஆனாலும் இந்தியாவில் இது ஒரு இன்டஸ்ட்ரி போல ஆகிவிட்டது. பிச்சைக்காரர்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்கும் சமூக நலத்துறை அதிகாரிகள் கூட உடல் ஊனமானவர்களை விட்டு விடுகிறார்கள், மறுபக்கம் உடல் ஊனமானவர்கள் ஏறத்தாழ அனைவருமே பெக்கர் மாபியாவிற்காக பிச்சை எடுப்பவர்கள். இது தானாகவே, பெக்கர் மாபியாவை ஊக்குவிப்பது போலகிவிடுகிறது. ஊடல் ஊனமுற்ற அல்லது ஊனப்படுத்தப்பட்ட பிச்சைக்காரர்கள் மற்றவர்களை விட அதிகமாக பிச்சை பெறுபவர்கள் மேலும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க யாரும் தயாரில்லாத போது பெக்கர் மாபியாவிற்கு அவர்களை கண்காணிக்கவும் அவசியமில்லாமல் போய் விடுகிறது.

அண்மைக்காலங்களாக வரும் செய்திகளும் பெக்கர் மாபியாவின் செயல்கள் பெருகி வருவதாக அறிவிக்கிறது. ஆனாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை.


அரசு சாரா அமைப்புகள்

இந்த நேரத்தில் அரசு சாரா அமைப்புகளையும், அவர்களின் நடவடிக்கைகளையும் பாராட்டியே ஆக வேண்டும்.

முக்கியமாக இந்த பிரச்சனைகளை தீர்க்க, அரசினை நடவடிக்கை எடுக்க சொல்லி தொல்லை கொடுத்துக் கொண்டு இருப்பது இவர்களே இவர்கள் மட்டும்தான்.

பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமியரின் நலனுக்காக அவர்களை மீட்டு மறுவாழ்வளிக்க முனையும், இவர்கள் நிதி வசதிக்காக அரசாங்கத்திடம் போராட வேண்டியுள்ளது. அரசு வாக்குறுதி மட்டும் தர, இவர்கள் பெரும் வசதி கொண்ட செல்வந்தர்களிடம் கையேந்துகிறார்கள்.



NGOக்களின் நடவடிக்கைகள் ஓரளவிற்கு வெற்றியும் பெறுகிறது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க அவர்கள் இன்றளவும் போராடி வருகிறார்கள். அவற்றுள் குறிப்பிடத்தக்க அமைப்பு ஜனசேவா சிசுபாவன். கேரளாவில் இயங்கும் இவ்வமைப்பு குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவர்க்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதைப்போல் இன்னும் பல அமைப்புகள் இக்கொடுமைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கின்றன.

என்ன முடிவு???

பெக்கர் மாபியா என்பது ஒரு சிக்கலான பெரிய குற்றவாளிகளின் தொடரமைப்பு. மனிதத்தன்மையின்றி குழந்தைகளை தாக்கி, சித்திரவதை செய்து அங்கஹீனமாக்கி பிச்சையெடுக்க வைக்கிறார்கள்.

சுருக்கமாக உயிர்களை தீயிலிட்டு, அதில் குளிர் காய்கிறார்கள்.

இப்பிரச்சனைக்கு நடைமுறையாக ஒரு தீர்வு வேண்டும்.

6 comments:

வானம்பாடிகள் said...

அரசாங்கம் எப்போது நேரத்துக்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது? அருமையான பகிர்வு. நன்றிங்க

தியாவின் பேனா said...

ம்.... ம்.... ம்.... ம்.... !!!!

கதிர் - ஈரோடு said...

அருமையான இடுகை...

வால்பையன் said...

இப்பிரச்சனையில் தலைடிய வேண்டிய அதிகரமையங்கள்(காவலர்கள்) இதற்கு துணை போவதால், அரசு சாரா அமைப்புகள் கூட தலையிட தயங்குகிறது!

புலவன் புலிகேசி said...

நல்ல பகிர்வு...இதைப் பற்றி நானும் என் இடுக்கையில் எழுதியுள்ளேன். http://pulavanpulikesi.blogspot.com/2009/09/blog-post_13.html

வெண்ணிற இரவுகள்....! said...

நல்ல இடுக்கை இதை படிபவர்கள் ஒரு பிச்சைக்கார குழந்தையை தத்து எடுத்து படிக்க வைக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.இது வெறும் எழுத்தக்களில் மட்டும் இல்லாமல் நாமெல்லாம் செயல்களில் இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger