Friday, September 11, 2009

பிச்சைப்பாத்திரம்

வரும் காலங்களில் பிச்சைக்காரர்களை காண்பது, காண்பதற்கரிய காட்சியாய் இராது. விகாரமான முகங்களையும், சோர்ந்து போன உடலையும் அல்லது சிறியதும் பெரியதுமான காயங்களுடனும், அழுக்கான ஆடைகளுடனும் குழந்தைகளும் பெரியவர்களும் கார் கதவுகளை சூழ்ந்து கொள்வதை இப்போது எல்லா இடங்களிலும் காண முடிகிறது. சாலை சிக்னல்களிலும், கோயில்களின் வாசல்களிலும் இம்மனிதர்களை தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

வருத்தப்படுகிற வகையில், பிச்சையெடுப்பது நம் நாட்டில் “பணம் கொழிக்கும் ஒரு துறையாகவே மாறி வருகிறது”. எது எப்படியோ, நம் கண்முன்னால் தெரியும் ஒவ்வொரு பிச்சைக்காரர்களின் பின்னாலும், சங்கிலித் தொடர் போல ஒரு மாபெரும் கூட்டம் உள்ளது உண்மையே.


அரசாங்கத்தால் “பெக்கர் மாபியா” என்று அறியப்படும் இக்கூட்டம் தங்களது சொந்த நலனுக்காக எந்த ஒரு கீழ்த்தரமான செயலையும் செய்யும் அளவுக்கு கொடியவர்கள். சக மனிதர்களையும், குழந்தைகளையும் காயப்படுத்தி அவர்களை கட்டுப்பாட்டிற் கொண்டு வந்து பிச்சையெடுக்க வைப்பதோடு அவர்களை கண்காணிப்பதும பெக்கர் மாபியாவைச் சேர்ந்கவர்கள்தாம்.



சமீபத்தில் வெளிவந்த “நான் கடவுள்” மற்றும் ஆஸ்கர்களை அள்ளிய ஸ்லம் டாக் ஆகிய திரைப்படங்களில் சொல்லப்பட்ட பெக்கர் மாபியாவானது உண்மையில் எவ்வளவு கொடுமையானது என்பது ஒரு சில NGOக்களுக்குத் தெரியும்.

ஒரு பிச்சைக்காரனை எந்த அளவிற்கு கொடுமைப்படுத்துகிறார்களோ அந்த அளவிற்கு அவனது சம்பாதிக்கும்(?) தகுதி அதிகமாகிறது என்பதே பெக்கர் மாபியாவின் தாரக மந்திரம். இவ்வாறு ஒரு பிச்சைக்காரனின் Earning Capacity அதிகமாக்கப்பட்டு வீதியில் விடப்படுகிறான்.



பிச்சை(த்துறை?) யைப் பற்றிய சில உண்மைகள்

ஒரு பிச்சைக்காரனின் வருமானம் பெக்கர் மாபியாவால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு குழுவிலிருக்கும் அனைவருக்கும் ஒரு பங்கு வழங்கப்படுகிறது. (may be it could be 70:30 between the begger mapia and beggers)

ஒருசில மனிதர்கள் (நல்ல உடல்நிலையிலிருந்தாலும்) பிச்சையெடுக்க தாமாக முன்வருகிறார்கள். அதற்குக் காரணம் இதில் ஒரு நல்ல வருமானம்(?) இருப்பதால்தான் என்று கூறுகிறார்கள்.

ஒரு நல்ல நாளில் (திருவிழா அல்லது சமய புனித நாள்களில்), கோயில் வளாகத்தில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனுக்கு சராசரியாக ரூ.250 வரை கிடைப்பது அவர்களுக்கு ஒரு குறிப்பிடத்தகுந்த வருமானம்.

ஆச்சர்யப்படும் வகையில், நகர்பகுதியில் பெருகிவரும் பிச்சைக்காரர்களைப் பற்றி அறிந்திருந்தும் அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிடத் தக்க நடவடிக்கை இல்லை.

மஹாராஷ்டிர மாநில அரசின் அறிக்கையின்படி மும்பை நகரில் உள்ள மொத்த பிச்சைக்காரர்களின் ஆண்டு வருமானம் ரூ.180 கோடிகள் ($3.6 Million).

பெக்கர்ஸ் மாபியா பயன்படுத்தும் வழிமுறை

பெக்கர்ஸ் மாபியாவின் வன்முறைத்தனமான வழிமுறைகளுக்கு அளவுகோல் கிடையாது. அவர்களின் தொழில் யுக்திகள் ஒன்றும் புரிந்து கொள்ள கடினமானது கிடையாது. ஒரு நல்ல திடமான, சுறுசுறுப்பான மனிதனுக்கு, எத்தனைபேர் பிச்சை போடுவார்கள்? எனவே, பெக்கர் மாபியாவிலிருக்கும் பிச்சைக்காரர்கள் அடித்து, துன்புறுத்தப்பட்டு, காயப்படுத்தி பார்ப்பவர்களுக்கு அருவறுப்பு கலந்த sympathyயை உருவாக்குகிறார்கள். மக்களும் அவர்களுக்கு மற்ற பிச்சைக்காரர்களை விட அதிகமாக கொடுக்கிறார்கள்.



பிச்சைக்காரர்களில் பாதிக்கும் அதிகமானோர் சிறுவர் சிறுமியர். அவர்களில் நிறைய பேர் சிறு வயதிலேயே கடத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு நாட்கணக்கில் உணவு கொடுக்காமல், அவர்களை உணவுக்காக கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வீறிட்டு அழும் நிலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அழும் குழந்தைகள் மற்றொரு பிச்சைக்காரனால் கோயிலுக்கும், ரோட்டின் சிக்னல்களுக்கும் கொண்டுசென்று பிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களைப்பார்க்கும் மக்கள் தானாகவே பாக்கெட்டில் கை வைத்து விடுகிறார்கள்.

சிறு வயது முதலே சரியான உணவும், போஷாக்கும் இல்லாமல் வளரும் இச்சிறுவர்கள் இரத்தசோகை போன்ற உடல் அமைப்பை பாதிக்கும் நோய்களின் தாக்கத்தில் எளிதில் வீழ்ந்து விடுகிறார்கள். அவர்களின் உடலும் உழைக்க ஏற்றவாரு இல்லாமல் போய் விடுகிறது. மேலும் தொடர்ச்சியான வெயில் அவர்களின் தோலை கடினமாக, கருமையாக மாற்றிவிடுகிறது.

விளையாட்டுப் பள்ளிகளிலும், தொடக்கப்பள்ளிகளிலும் படிக்க வேண்டிய வயதை உடையவர்கள், மக்களுக்கு தொல்லை கொடுத்து பிச்சையெடுக்கும் வழிமுறைகளை பயில்கிறார்கள். விதவிதமாக முக பாவனைகளையும், வார்த்தைகளையும் சொல்லி பிச்சையெடுத்து, அன்றைய வசூலினை பெக்கர் மாபியாவிடம் கொடுக்கிறார்கள்.



இதுவரை பார்த்தவைகளுக்கு மேலாக, அந்த பெக்கர் மாபியா, சிறுவர்களை street life என்று சொல்லப்படுகின்ற பிளாட்பார்ம் வாழ்க்கைக்கு அடிமைப்படுத்துகின்றனர். மும்பை¸ பெங்களூர் போன்ற ஒரு சில நகரங்களில் இது போன்ற சிறுவர்கள் போதைமருந்துகளுக்கு அடிமைகளாகியிருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால்தான் பெக்கர் மாபியாவிலிருந்து NGOக்களால் மீட்கப்படும் சிறுவர்கள் மீட்பு முயற்சிகளுக்கு ஒத்துழைக்காமல் இருக்கின்றனர். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம், அவர்கள் மீண்டும் பிளாட்பார்ம் வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.

இத்தகைய கொடிய தொழிலில் ஈடுபடும் பெக்கர் மாபியா இப்போது இதுவரையில்லாத அளவு அதிகமானவர்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

இவர்களால் உடல் ஊனமான பிச்சைக்காரர்கள் நம் தலைநகரில் (டெல்லி) மட்டும் 12000 பேர்.

இன்னும் கொடுமையான விஷயம் என்னவெனில் பெட்ரோல், ஆசிட் போன்றவற்றைப்பயன்படுத்தி குழந்தைகளை காயப்படுத்துவது.

மேற்சொன்ன முறைக்கு குழந்தைகள் வாங்கப்படுகிறார்கள். பராமரிக்கவியலாத பெற்றோர், அனாதை சிறுவர்கள் போன்றோரை தத்து எடுப்பது போன்று இவ்வாறு செய்கின்றார்கள்.

“a nine-year old boy, was found squirming in pain when a local Beggar Mafia leader poured petrol over him, lightened a match stick and threw it on his body and left him over there.”

“In the Indian state of Tamil Nadu, one such three-year old child whose left leg from thigh to foot was burnt with acid, oozing pus from the acid burns was found begging in by the roadside. She was eventually rescued with the help of police and is currently under the care of a welfare organisation.”


தொடர்வோம்.......

15 comments:

வால்பையன் said...

ஸ்லம்டாக் மில்லியனர்,
நான் கடவுள்

போன்ற படங்களில் இந்த திழிலை தோலுரித்து காட்டியிருப்பார்கள்!

ஆனால் சில கெளரவ பிச்சைகாரர்கள் அதையெல்லாம் கண்டு கொள்வதில்லை!

நேசமித்ரன் said...

சிந்திக்க வைக்கும் பதிவு !

Cable Sankar said...

அருமையான் பதிவு அகல்விளக்கு.. மேலும் தொடருஙக்ள் வாழ்த்துக்கள்.

கதிர் - ஈரோடு said...

கனமான, ஆழமான இடுகை... தொடர்ந்து இதை எழுதுங்கள்

தியாவின் பேனா said...

வித்தியாசமாக தரவுகள் திரட்டி எழுதியுள்ளிர்கள் தொடர்ந்து எழுதுங்கள்

நிலாமதி said...

முதன்முதலாய் உங்கள் பதிவை பார்வையிடுகிறேன். ...உங்கள் அகல் விளக்கு பிரகாசிக்க என் வாழ்த்துக்கள். நிலாமதி

வானம்பாடிகள் said...

நல்ல விளக்கமான இடுகை. பணி தொடர பாராட்டுக்கள்

அகல் விளக்கு said...

வால்பையன்
நேசமித்ரன்
Cable Sankar
கதிர் - ஈரோடு
தியாவின் பேனா

வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி...


//நிலாமதி said...
முதன்முதலாய் உங்கள் பதிவை பார்வையிடுகிறேன். ...உங்கள் அகல் விளக்கு பிரகாசிக்க என் வாழ்த்துக்கள். நிலாமதி//

முதல் வருகைக்கு நன்றி நிலாமதி.

//வானம்பாடிகள் said...
நல்ல விளக்கமான இடுகை. பணி தொடர பாராட்டுக்கள்//

நன்றிங்க சார்.

தேவன் மாயம் said...

சமூகப் பிரச்சினையை அக்கரையுடன் சொல்லி இருக்கிறீர்கள்!!!

தேவன் மாயம் said...

தமிழ்மணம், தமிலிஷில் இணையுங்கள்!!

தேவன் மாயம் said...

இவர்களால் உடல் ஊனமான பிச்சைக்காரர்கள் நம் தலைநகரில் (டெல்லி) மட்டும் 12000 பேர்.

இன்னும் கொடுமையான விஷயம் என்னவெனில் பெட்ரோல், ஆசிட் போன்றவற்றைப்பயன்படுத்தி குழந்தைகளை காயப்படுத்துவது.
///

படிக்கவே கஷ்டமா இருக்குங்க!!

அகல் விளக்கு said...

நன்றி தேவன்மாயம் அவர்களுக்கு...

//தேவன் மாயம் said...
தமிழ்மணம், தமிலிஷில் இணையுங்கள்!!//

விரைவில் இணைகிறேன்.

தொடரும் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி.

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

blogpaandi said...

கடவுளே இவர்களை கொடியவர்களிடமிருந்து காப்பாற்று.

ஊடகன் said...

மிகவும் நல்ல பதிவு...
உங்கள் சமுதாய பணி தொடர வாழ்த்துக்கள்..........

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger