Wednesday, November 4, 2009

பிடித்தவையும். பிடிக்காதவையும் - 10 - தொடர் பதிவு





கவிதைகளாய் கவர்ந்த  தியா அவர்களின் அன்பிற்காகவும். பதிவுலகில் நான் பெற்ற முதல் அன்புத்தோழர் முரளிகுமார் அவர்களின் அன்பான அழைப்பிற்காகவும் இந்த இடுகை.

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்

2.
இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3.
ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் :- தமிழகத்தில் இதுவரை இல்லை.
பிடிக்காதவர்:- இப்போதுள்ள அனைவரும்.

நடிகர்

பிடித்தவர் :- கமலஹாசன் 
பிடிக்காதவர் :- சின்னத்தளபதி, புரட்சித்தளபதி, இளைய தளபதி என இப்பட்டியல் நீளும்

இயக்குனர்

பிடித்தவர் :- மணிரத்தினம்.
பிடிக்காதவர் :- பேரரசு. டி.ஆர்.டெரர்.

கவிஞர்

பிடித்தவர் :-  பாரதி
பிடிக்காதவர் :- அப்படி யாரும் இல்லை, ஒவ்வொருவரின் கவிதையிலும் நாம் ஏதோவொரு விதத்தில் நிச்சயம் பாதிக்கப்படுவோம். ஏனென்றால் கவிதை என்பதே ஏதோவொரு பாதிப்பிலிருந்து வந்து நம்மை பாதிப்பதுதான்.


தொழிலதிபர்

பிடித்தவர் :- சாந்தி துரைசாமி, சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர். (பார்வையற்றோர், உடல் ஊனமற்றோருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வாழ்வு கொடுத்துக் கொண்டிருப்பவர்)
பிடிக்காதவர் :- குடும்பத்தோடு தொழில் நடத்தி கொள்ளையடிப்போர் அனைவரும்.

நடிகை

பிடித்தவர் :- நந்திதா தாஸ்
பிடிக்காதவர் :- த்ரிஷா

இசையமைப்பாளர்

பிடித்தவர் :- ஏ.ஆர்.ரகுமான். இளையராஜா
பிடிக்காதவர் :- தேவா,

எழுத்தாளர்
பிடித்தவர் :- பா.ராகவன் (நிலமெல்லாம் இரத்தம. டாலர் தேசம்)
பிடிக்காதவர் :- ரமணிச்சந்திரன்


நான் அழைப்பு விடுத்தவர்கள் :-

இரும்புத்திரை
புலவர் புலிகேசி


வாங்க நண்பர்களே!!!!! 



9 comments:

முரளிகுமார் பத்மநாபன் said...

வாழ்த்துகள் நண்பா, உண்மையில் தொடர்பதிவுகள், நாம் நின்னு ரில்லக்ஸ் பண்னிக்க ஒரு அருமையான வழி, இல்லையா?

நல்லா இருக்கு உங்க பதில்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

ஜீவன் said...

அழைப்புக்கு நன்றி ..! பதிவு போட்டாச்சு ...!

பிரியமுடன்...வசந்த் said...

எல்லாமே நல்லாயிருக்கு பாஸ்..

குப்பன்.யாஹூ said...

nice list

வானம்பாடிகள் said...

நல்ல ரசனை.

பிரபாகர் said...

அய்யா சொன்னதுதான்... நானும்...

பிரபாகர்.

Balavasakan said...

ஹீ ஹீ நான் உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைக்கலாம் எண்டு வந்தா இங்க இன்னொரு தொடர் பதிவு ...
தப்பிட்டீங்க ....
நல்லாருக்கு

தியாவின் பேனா said...

எனது அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி
நல்ல தெரிவுகள்

வால்பையன் said...

நல்லாருக்கு நண்பரே!

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger