Tuesday, November 3, 2009

நானும் தீபாவளியும்

நட்பு என்பது வார்த்தைகளையும், பார்வைகளையும் தாண்டி உணரக்கூடியது.

இதுவரை நான் நேரில் பார்த்திராமல், உணர்ந்த என் அன்பு நண்பர் இரும்புத்திரை அவர்களுடைய அன்பான அழைப்பினை ஏற்று இந்த பதிவு.

1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு?

பெயர் ராஜா ஜெய்சிங். அடுத்து என்ன செய்வது என எப்போதும் யோசித்துக்கொண்டுடிருக்கும் ஒரு சராசரி. கனவாகவே இருக்கும் லட்சியங்களை நேரில் பார்க்க உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவன். வாழ்க்கையை எதிர்கொள்வது எப்போதுமே சாகசம் என வாழப்பழகியவன்.

2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்?

சிறுவயதில் தீபாவளிக்கு முன்தினம் வாங்கிய அனைத்து வெடிகளும் மழையில நனைந்து விட, அதைப்பற்றி கவலைப்படாமல் குப்பையில் கொட்டிவிட்டு வெறும் இனிப்பு, முறுக்குகளுடன் நான் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி என்றைக்கும் மறக்காது.

3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் ?

ஈரோட்டில்தான். குடும்பத்துடன் இருப்பது என்றைக்குமே தீபாவளிதான்.

4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்?

பட்டாசு வெடிக்கும் சிறுவர்கள், தொலைக்காட்சியின் முன்பு பழிகிடக்கும் இல்லத்தரசிகள், உழைப்பிற்கோர் விடுமுறையென உறங்கும் கணவர்கள், நண்பர்களோடு ஊர் சுற்றும் இளைஞர்கள்.

ஏழு நாட்களுக்கு ஒருமுறை என்றிருந்தவர்கள் கூட அன்று மட்டும், ஒரு நாளுக்கு ஏழு முறை என மாறி டாஸ்மாக்கில் குலவையடிப்போர். எப்படியிருந்தாலும் தீபாவளி திருவிழாதான் இங்கே.

5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள்? அல்லது தைத்தீர்க‌ளா ?

அப்பா வாங்கி கொடுத்தது. அதனால் எங்கென்று தெரியவில்லை.

6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?

அம்மாவை இப்படியெல்லாம் தொந்தரவு செய்வதில்லை. இப்போது தீபாவளிக்கு பலகாரக் கடைகள்தான். 

7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?

தொலைபேசிதான், ஆனால் வாழ்த்து அட்டைகள் என்றேனும் கண்ணில் படும்போது ஏற்படும் உணர்வுகளை விவரிக்க இயலாது. அதற்காகவே வாழ்த்து அட்டைகளுடன் தொலைபேசி அழைப்பும் உண்டு. இன்றும் எனக்கு கொடுக்கப்பட்ட அத்தனை வாழ்த்து அட்டைகளும், ராக்கிகளும் என்னிடம் உள்ளன.

8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா? அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா?

அன்று செல்வது அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்கள் வீட்டிற்குத்தான். வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கே முக்கால்வாசி நாள் கரைந்துவிடும்.

9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள்? தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் ?

அப்படி யாருக்கும் தனியெனச் செய்வதில்லை. இருந்தாலும், ஒரு கையில் முறுக்கு மறு கையில் ஊதுவத்தியுடன் பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள். அவர்கள் வெடிப்பதை அதிசயமெனப் பார்த்து பின் வெடிக்காத வெடிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கும் ஏழைச் சிறுவர்கள். அவர்கள் ஏக்கம், பட்டாசும், முறுக்கும் மட்டுமில்லை என எனக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும் நிச்சயம் நான் பட்டாசுகளை வாங்கிக் கொடுத்து விடுவேன். சொல்லப்போனால் தீபாவளியன்று நான் செலவு செய்வது இதற்கு மட்டும்தான். மகிழ்ச்சியென்பது எதிலிருந்தால் என்ன. அதை நம்மால் கொடுக்க முடிந்தால் நிச்சயம் செய்வோம்.

10) நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் இருவர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள்?

ஒரு தொடர் பதிவு எப்போது முடிகிறது. யாரால் தவிர்கப்படுகிறதோ அவர்களோடு அது மறைந்து விடும். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன் தொடங்கிய இந்த தொடர் பதிவு அடுத்த மாதம் வரை தொடருகின்றது. இது அடுத்த தீபாவளி வரை வலையுலகில் உலவுமோ என்ன பயத்தால் (கவனிக்க), எனக்கு முன்பே வலைப்பக்கத்தை தொடங்கி விட்டு இன்று வரை பதிவு எதுவும் போடாமல், அவரின் வலைப்பக்கத்தைப் போல மெளனமாகவே இருக்கும் எனது நண்பர் ஈரோடுவாசி மெளனம் அவர்களையும். புதிய கருத்துக்களுடன் பதியும் உடன்பிறப்பு, தோழி கனிமொழி உதிர்ந்தமலர்கள்  அவர்களையும் அழைக்கிறேன்.

டிஸ்கி : பலர் இப்பதிவை ஏற்கனவே எழுதிவிட்டதாலும், சில நண்பர்கள் தீபாவளி தொடருக்கு அழைக்க வேண்டாமென்று கேட்டுக்கொண்டதாலும் புதிதாக இரு பதிவர்களை அழைத்துள்ளேன். தயவுசெய்து மற்றவர்கள், தவறாக நினைக்க வேண்டாம்.

14 comments:

சி. கருணாகரசு said...

உங்க குணம் எனக்கு பிடித்திருந்தது.....

♠ ராஜு ♠ said...

நல்லா எழுதியிருக்கீங்க பாஸு...!

கவிக்கிழவன் said...

நன்றாக உளது

ஜீவன் said...

//குடும்பத்துடன் இருப்பது என்றைக்குமே தீபாவளிதான்.//

;;)) super

கலையரசன் said...

உங்களை பற்றி மேலும் சில தகவல்கள் .. சுவாரசியம்!!

க.பாலாசி said...

//6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள்? அல்ல‌து வாங்கினீர்க‌ள்?
அம்மாவை இப்படியெல்லாம் தொந்தரவு செய்வதில்லை. இப்போது தீபாவளிக்கு பலகாரக் கடைகள்தான். //

நீங்களும் நம்மளமாதிரிதானா? ரைட்டு நல்ல கொள்கை....

//ஆனாலும் நிச்சயம் நான் பட்டாசுகளை வாங்கிக் கொடுத்து விடுவேன். சொல்லப்போனால் தீபாவளியன்று நான் செலவு செய்வது இதற்கு மட்டும்தான்.//

இந்த பதில் எனக்கு பிடித்திருக்கிறது. ஈரோட்டில் மூவரை பார்த்துவிட்டேன், உங்களை மட்டும் இன்னும் பார்க்கவில்லை. சந்திப்போம்.

வானம்பாடிகள் said...

நல்ல பதில்கள்.

வால்பையன் said...

//சிறுவயதில் தீபாவளிக்கு முன்தினம் வாங்கிய அனைத்து வெடிகளும் மழையில நனைந்து விட, அதைப்பற்றி கவலைப்படாமல் குப்பையில் கொட்டிவிட்டு வெறும் இனிப்பு, முறுக்குகளுடன் நான் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி என்றைக்கும் மறக்காது.//


உங்ககிட்ட கத்துகிறதுக்கு நிறைய விசயம் இருக்கும் போலயே!
சின்ன வயசுலயே இம்புட்டு பொறுமையா!?

Vidhoosh said...

http://vidhoosh.blogspot.com/2009/11/blog-post_04.html

Please accept this gift from me with deep appreciation for your blog.

-vidhya

Balavasakan said...

ஈ ரோடு ல ஈ அதிகமா ...!இருக்குமா சார் ....
சும்மா காமெடி பண்ணினேன்
கோவிச்சுக்காதீங்க ...........

புலவன் புலிகேசி said...

//மகிழ்ச்சியென்பது எதிலிருந்தால் என்ன. அதை நம்மால் கொடுக்க முடிந்தால் நிச்சயம் செய்வோம்.//

பின்னிட்டீங்க தல.......

ஊடகன் said...

இந்த பதிவின் மூலம் உங்களை பற்றி நிறைய விடயங்களை அறிய முடிந்தது.......
நன்றி.......

தியாவின் பேனா said...

நல்லாய் எழுதியுள்ளீர்கள் .
மழை விட்டாலும் தூவானம் (சாரல்) போகலை என்பது இதைத்தானோ?
அருமையான படைப்பு .

அகல்விளக்கு , உங்களுக்கு பத்துக்கு பத்து பகுதியில் இருந்து ஓர் அழைப்பு ஏற்றுக் கொள்வீர்களா ?

http://theyaa.blogspot.com/2009/11/blog-post_04.html

கனிமொழி said...

என்னையும் ஒரு ஜீவனாக மதித்து அழைத்தற்கு நன்றி ராஜா... :-)

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger