Friday, November 6, 2009

மெளனமாய் நான், மழையாய் நீ.


மீண்டும் நான் உன் பிறந்தகத்தில் நுழைகிறேன்.


பொழில் - நம் முன்னோர்கள் நமக்கு நட்டு வைத்த மரங்களுடன் விட்டு வைத்த சொத்து.

நீ பிறந்த போது இந்த வனத்தில் பொழிந்த மழையில் மலர்வாசம் வீசியதாம்.
நீ சிரிக்கும்போது இந்த மரங்களும் மலைகளும் உன்னுடன் சிரித்தனவாம்.
தேவதையாக நம்மக்கள் கண்ணிற்குத் தோன்றினாய்.
வனத்தின் மீதும் இனத்தின் மீதும் நாம் கொண்ட காதல்
நம்மையும் காதலர்களாக்கியது.
காலம் போவதறியாமல் நாம் களித்திருந்தோம்
கூசுகின்ற வெளிச்சம் உன் கண்களுக்கும் உண்டென நீ
எனைக்காணும்போதெல்லாம் நான் கண்டுகொண்டிருந்தேன்.
குளிர்காற்று உன் கேசம் கலைக்கும்போதெல்லாம் அதை 
கோதி விடுவதற்காக நான் கண்விழித்து காத்திருந்தேன்.
உறக்கம் கலைக்காத உன் மூச்சுக்காற்றொலியை 
மிகஅருகில் நான் தினமும் ரசித்துக்கொண்டிருந்தேன்.
வனம் நமக்கு வாழ்வளிப்பதை தினமும் சொல்லி நீ பூரிப்படைய
இவ்வனத்தாயையும் தோழியாக நான் உணர்ந்துகொண்டிருந்தேன்.

மழைக்காலமும் தோன்றியது.
பொழியும் மழைத்துளிகளை எப்போதும் நீ சேகரிக்க முயல்வாய்.
சாரலில் கை நனைக்கும் போது உன் முகத்தில தெரியும் மகிழ்ச்சியைக் காண
மழை பொழியும் போதெல்லாம் அதனுடன் ஓடிவருவேன்.

நீண்டு வளர்ந்த போதி மரத்தடியில்
நீயும் நானும் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு
விடியலை நோக்கி காத்திருந்தோம்.
இவ்வனம் முழுதும் தமிழ்மணம் நிலைத்திருக்கும் என நம்பினோம்.
காலம் நமக்காக கனிந்து கொண்டிருந்தது.
வரும் திங்களையடுத்த பெளர்ணமியை
நமக்கு மணநாளாக நிச்சயித்தோம்.

அன்று நீ ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தாய்
உன் அருகில் வசிக்கும் குழந்தைகளோடு ஒரு குழந்தையாக.
மேகங்கள் கருத்துக்கொண்டிருந்த அவ்வேளையில் -
தொலைவில் எனைக்கண்டு ஓடோடி வந்தாய்
உன் காலடிச்சத்தத்தில் நிசப்தம் கண்டு சருகுகளும் பூக்களாக மாறியிருக்குமோ
என எண்ணிக்கொண்டிருந்தேன்.
நினைவில் மறையவில்லையடி நீ......
செங்குருதிக்குளமாய் என் முன்னே வீழ்ந்திருந்தாய்.
சிதறிய உன்னை சேகரிக்க முடியாமல் நான் சிதைந்துபோனேன்.
நீ சேகரித்த மழை உன்னை கரைத்து
உன் குருதியை இவ்வனமெங்கும் நிறைத்து விட்டது.
அன்று உன்நிலை கண்டிருந்தால் போதிசத்துவனும் 
தன் கண்ணீரை அம்மழையில் கரைத்திருப்பான்.

நீ வைக்கும் அடுத்த காலடிகள் கண்ணிவெடிகளின் மீதென்பது அறியாமல் 
என்னைப்பார்த்து சிரித்த அந்த கணம்
நினைவகலக்கூடதென நித்தம் வேண்டுகிறேன். 
அதன் மூலம்தான் நான் என் நெஞ்சுரத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறேன்.
 

நீ சேகரிக்கும் மழைத்துளிகள் இன்று சிதறி வீணாகின்றன.
நான் உனக்கு பரிசளிக்க நினைத்த இப்பொழில்காடுகள்
இன்று பரிதவித்துக் கொண்டிருக்கின்றன.

சூரியனும் இன்று என்னைப் பார்க்க விரும்பாமல்
முகில்களில் மறைய முனைகிறான்.
நீரின்றி உய்யாத இப்பொழில் - நீயின்றி
என்னை நினைத்துப் பார்க்கவும் மறுக்கிறது.

மீண்டும் மழைக்காலம்.
மெளனமாய் நான்;. மழையாய் நீ. 29 comments:

வானம்பாடிகள் said...

படம் அருமை. கவிதை இன்னும் அருமை.

தியாவின் பேனா said...

அருமை விஷயத்தை விளக்க கையாண்ட படங்களின் தெரிவு அருமை

கதிர் - ஈரோடு said...

//நீ வைக்கும் அடுத்த காலடிகள் கண்ணிவெடிகளின் மீதென்பது அறியாமல்
என்னைப்பார்த்து சிரித்த அந்த கணம்//

வரி அழகாயிருக்கேனு ரசிக்கிறது...

வலிக்கிறதே என துடிப்பதா...

வால்பையன் said...

உங்களுக்குள் இப்படி ஒரு கவிஞனா!?

துபாய் ராஜா said...

ஒரு நெகிழ்ச்சியான குறும்படத்தையே கண்முன் கொண்டு வந்துவிட்டீர்கள்...

கண்களையும்,மனதையும் கலங்கச் செய்த கவிதை... மவுனமாக்கியது என்னையும்...

கவிக்கிழவன் said...

சிறப்பாக உளது

அத்திரி said...

நல்லாயிருக்கு கவிதையும், படமும்

புலவன் புலிகேசி said...

படத்துடன் கவிதை அருமை நண்பரே..அந்தத் தொடர்பதிவு எழுதிட்டேன்...http://pulavanpulikesi.blogspot.com/2009/11/10.html

க.பாலாசி said...

//நீ சேகரிக்கும் மழைத்துளிகள் இன்று சிதறி வீணாகின்றன.
நான் உனக்கு பரிசளிக்க நினைத்த இப்பொழில்காடுகள்
இன்று பரிதவித்துக் கொண்டிருக்கின்றன.//

அழகிய வரிகள்...அதிகமாய் ஏக்கங்கள் கலந்து.

கவிதை ஆதங்கத்துடன்.

வெண்ணிற இரவுகள்....! said...

அற்புதம் நண்பா ..........
உன் தலைப்பே கவிதை போல் உள்ளது .................
நண்பா

ஸ்ரீ said...

அருமை.

முரளிகுமார் பத்மநாபன் said...

ராஜா, வாழ்த்துக்கள், ரொம்ப நல்லா இருக்குங்க. கவிதை, ஈழம், சிறுகதை அல்லது மூன்றுமே. படிக்க படிக்க கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஈழதமிழ் காதலர்கள் கண்முன்னே வருகிறார்கள். இது சரியா? தவறா தெரியவில்லை.

தொடர்ந்து எழுதுங்க.

நிலாமதி said...

அழகான் கவிதை......தாயக நினைவுடன்.

கலையரசன் said...

பெருசுதான்..இருந்தலும் ரசிக்கும்படி இருந்தது!!

தேவன் மாயம் said...

வைக்கும் அடுத்த காலடிகள் கண்ணிவெடிகளின் மீதென்பது அறியாமல்
என்னைப்பார்த்து சிரித்த அந்த கணம்
நினைவகலக்கூடதென நித்தம் வேண்டுகிறேன்.
அதன் மூலம்தான் நான் என் நெஞ்சுரத்தைக் கூட்டிக்கொண்டிருக்கிறேன்///

மனம் கனத்துப்போகிறது!!!

Toto said...

ந‌ல்ல‌ க‌விதை.. அதை விட‌ போட்டோக்க‌ள் ரொம்ப‌ பிர‌மாத‌ம்.. பொருத்த‌மும் கூட‌.

-Toto
www.pixmonk.com

கனிமொழி said...

கவிதை மிக மிக மிக அருமை ராஜா...
எந்த வரிகள்னு குறிப்பாக சொல்ல முடியவில்லை, முழுமையாக அழகாக உள்ளது...

ஊடகன் said...

ரொம்ப நல்லாருக்கு......
காலத்துக்கு ஏற்ற கவிதை...........

இரசிகை said...

sirappaayullathu...:)

பூங்கோதை said...

செங்குருதிக்குளமாய் என் முன்னே வீழ்ந்திருந்தாய்.
சிதறிய உன்னை சேகரிக்க முடியாமல் நான் சிதைந்துபோனேன்.
வரிகள் நெஞ்சைச் சிதைக்கின்றன...அருமை

archchana said...

//படிக்க படிக்க கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் ஈழதமிழ் காதலர்கள் கண்முன்னே வருகிறார்கள். இது சரியா? தவறா தெரியவில்லை.//
கன்னத்தில் முத்தமிட்டால் இன் கருப்பொருள் பிழை . ஆனால் இக் கவிதை யின் கரு நாம் நிஜத்தில் சந்தித்தது. ....வலிக்கிறது..........

kavya said...

arumai!! manam kasinthu pokirathu..padiththu mudikayil..

சுடுதண்ணி said...

உணர்வுகளைக் கசிய வைக்கும் பதிவு. பின்னீட்டிங்கன்னு சொல்லக்கூட முடியாத அளவுக்கு படித்ததும் மனம் கனத்துப்போகிறது.

அகல் விளக்கு said...

நன்றி

**வானம்பாடிகள் சார்
**தியா
**கதிர் அண்ணா
**வால்ஸ்
**துபாய் அன்பர்
**கவிக்கிழவன்
**அத்திரி
**புலிகேசி
**பாலசி அண்ணா
**வெண்ணிற இரவுகள் கார்த்தி
**ஸ்ரீதர்
**நண்பர் முரளி
**நிலாமதி அக்கா
**கலையரசன்
**தேவன் சார்
**toto
**கனிமொழி
**ஊடகன்
**இரசிகை
**பூங்கோதை
**அர்ச்சனா ??
**காவ்யா
**சுடுதண்ணி
**மைனஸ் ஓட்டளித்த நல்ல உள்ளம்
**ஓட்டளித்த நண்பர்கள்

அனைவருக்கும் நன்றி

tamiluthayam said...

மனதை கசக்கி பிழிகின்றன- ஞாபகங்கள். மழையோடு வடிகிறது... என் கண்ணீரும்

வாத்துக்கோழி said...

சொல்ல்வொன்னாச் சோகத்தை சொல்கின்றன. உன்வரிகள் கண்ணா. என் மகன் வயது உனக்கு.எனா சொல்வது என்றே தெரியவில்லை. மனதை ஏதோ செய்கிறது. வாழ்த்துக்கள்.....

வாத்துக்கோழி said...

உன்னைப்பார்த்துவிட்டு அப்ப்டியே உதிர்ந்த மலர்களுக்குப் போனேன். அப்ப்டியே விக்கித்துவிட்டேன். நன்றி உனக்கு.

ஜீவன்பென்னி said...

//நீ வைக்கும் அடுத்த காலடிகள் கண்ணிவெடிகளின் மீதென்பது அறியாமல்
என்னைப்பார்த்து சிரித்த அந்த கணம்//

இந்த வரிய படிக்கும் போது ஒரு வித பயம் கொள்ளச்செய்யுது.

banuprema said...

I have no clue what you wrote (can't read tamil) but I love anything to do with rain, and your pictures were very cute! tc

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger