Saturday, November 14, 2009

மழலை எனும் மந்திரச்சொல்

மழலை எனும் மந்திரச்சொல் - உலக
உயிர்களனைத்தையும் கட்டிவைக்கிறது.
மனிதம் கூட மீதமின்றி மழலைச் சிரிப்பில் மட்டும்
மனிதனென்றுணர்கிறது.
உள்ளுணர்ந்து அறியாமல், திக்கெட்ட திசையில்
செல்லும் மழலையை
நடக்க கை கொடுத்து
பேச மொழி கொடுத்து
உறங்க மார் கொடுத்து
உயர தோள் கொடுக்கும் மனங்களை நினைக்கிறேன்.





நிலையில்லாமல் வளைந்து நிற்கும் கேள்விக்குறியாய் எதிர்காலம்.


பிச்சை கேட்ட அவளின் மடியில்
உறங்கும் பச்சை குழந்தையும்,
எச்சில் இலையில் உணவை தேடி
அடையும் சிறுவர்களும்,
வயிற்றைத் தட்டி கையேந்தும் சிறுமிகளும்
என்று சிரிப்பார்கள்.







அன்றே தோன்றும் உண்மையான "குழந்தைகள் தினம்".


அதுவரையிலும்


மனிதம் போற்றுவோம். மழலை போற்றுவோம்.

13 comments:

புலவன் புலிகேசி said...

//அன்றே தோன்றும் உண்மையான "குழந்தைகள் தினம்".//

உண்மை நண்பா இதப் பற்றி நானும் ஒரு பதிவில் எழுதியிருக்கிறேன்.

http://pulavanpulikesi.blogspot.com/2009/09/blog-post_13.html

முரளிகுமார் பத்மநாபன் said...

//நிலையில்லாமல் வளைந்து நிற்கும் கேள்விக்குறியாய் எதிர்காலம்// அருமை....

பிச்சைக்காரர்களுக்கு வேலை கொடுத்து பணத்தை சம்பளமாகக் கொடுக்கலாம். பிச்சை வேண்டாம்? கொடுமை.

வானம்பாடிகள் said...

நெகிழவைக்கும் இடுகை. :)

நாய்க்குட்டி மனசு said...

//வயிற்றைத் தட்டி கையேந்தும் சிறுமிகளும்//
"அதெல்லாம் செய்யகூடாதும்மா னு" கட்டி அணைச்சு சொல்ல மனம் நினைக்கும். செயலை நிறுத்த அவசரமாய் காசு கொடுத்து பெரிய மனித வேஷத்தில் கால்கள் நடக்கும்.
ஏழ்மையிலும் சிரிக்கும் அந்த சிரிப்பில் உள்ள அழகு வேறு எதில் உள்ளது!

கவிக்கிழவன் said...

நன்றாக உள்ளது எழுதுங்கள்

Balavasakan said...

நல்லா இருக்கு...

ஸ்ரீ said...

Good.:-)))

சிம்பா said...

மிகவும் நெகிழ்சியான பதிவு.

இரண்டாவது படம் மிகவும் அருமை. சரியான தெரிவு.

கனிமொழி said...

சமுதாயத்தின் இந்த அவல நிலையை என்னவென்று சொல்வது...
இந்த நிலையை நம்மால் முடிந்தவரை மாற்றுவோம்...

கலையரசன் said...

படமும் கவிதையும் சிந்திக்க வச்சிடுச்சுங்க!!

kavya said...

பிச்சை கேட்ட அவளின் மடியில்
உறங்கும் பச்சை குழந்தையும்,
எச்சில் இலையில் உணவை தேடி
அடையும் சிறுவர்களும்,
வயிற்றைத் தட்டி கையேந்தும் சிறுமிகளும்
என்று சிரிப்பார்கள்.
அன்றே தோன்றும் உண்மையான "குழந்தைகள் தினம்".

நெகிழ வைத்த வரிகள்!!

க.பாலாசி said...

நல்ல கருத்துள்ள பதிவு நண்பா....திடீரென உங்களிடம் இந்த பூகம்ப இடுகையை எதிர்பார்க்கவில்லை.

வால்பையன் said...

நல்ல சிந்தனை!

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger