Thursday, November 26, 2009

சில நேரங்களில்

சில நேரங்களில்
கடற்கரை காணும்போது
உடல் நிலைத்து இருந்தாலும்
மனது லயித்து குதித்தோடுகிறது.


சில நேரங்களில்
மழைவரும்போது
மழைச்சாரலில் அடிபடும்
தெருநாய்களுக்காக பரிதாபப்படுகிறேன்


சில நேரங்களில்
கோவிலில் மணியடிக்கும்போது என்னையறியாமல்
கன்னத்தில் போட்டுக்கொள்கிறேன்.


சில நேரங்களில்
ஆயிரம் வேலைகள் அலுவலகத்திலிருந்தாலும்
மதியம் தயிர்சாதம் வேண்டாமென்று
வீட்டில் அடம்பிடிக்கிறேன்.


சில நேரங்களில்
இரவுநேர அலைவரிசையின் பழையபாடல்களில்
தாலாட்டை உணர்ந்து உறங்கி விடுகிறேன்.


சில நேரங்களில்
வளைந்து செல்லும் மலைப்பாம்பாக
தூரத்தில் செல்லும் ரயிலை கண்கொட்டாமல் பார்க்கிறேன்.


சில நேரங்களில்
குதூகலம் நிறைந்த மிரட்சியோடு
வீதிவலம் வரும் யானையைக் கூட ரசிக்கிறேன்.


சில நேரங்களில்
நிலவில் வடை சுடும் பாட்டி
அத்துனை அழகானவள் - என்று
நம்முள் எத்தனை பேருக்குத்தெரியும்


சில நேரங்களில்
எத்தனை பேர் உணர்கிறோம். நம்முள்ளும் ஒரு மழலை இருப்பதை.






டிஸ்கி : நீ இன்னும் வளரவில்லை என்று வரும் பின்னூட்டங்களும் ஆமோதிக்கப்படும்.

38 comments:

ஈரோடு கதிர் said...

சில நேரங்களில்
லயித்து படிக்கும் கவிதை கிடைக்கிறது
இது போல்

புலவன் புலிகேசி said...

நான்தான் முதல்...நல்ல கவிதை தல..

புலவன் புலிகேசி said...

//சில நேரங்களில்
மழைவரும்போது
மழைச்சாரலில் அடிபடும்
தெருநாய்களுக்காக பரிதாபப்படுகிறேன்//

நல்ல பாசமுள்ள மனிதம் தெரிகிறது...

//சில நேரங்களில்
இரவுநேர அலைவரிசையின் பழையபாடல்களில்
தாலாட்டை உணர்ந்து உறங்கி விடுகிறேன்.//

நானும் உறங்கியிருக்கிறேன்.

முதல்னு அடிக்கங்காட்டியும் கதிர் முதலாயிட்டாரு...

தண்டோரா ...... said...

நல்லாயிருக்கு நண்பரே...

க.பாலாசி said...

சிலநேரங்களில்
மட்டுமல்ல
பலநேரங்களிலும்
உங்களிடம்
பிறக்கும் கவிதையை
கண்கொட்டாமல் ரசிக்கிறேன்.

படித்துவிட்டால் தீர்ந்துவிடுமோ
எனும் பயத்துடன்.

நல்ல கவிதை....(நீங்களா வளரவில்லை?...)

முரளிகுமார் பத்மநாபன் said...

ஆம் நண்பா நீங்க இன்னும் வளரவேயில்லை. ஹிஹிஹி

கனிமொழி said...

நல்ல கவிதை ஜெய்..

வானம்பாடிகள் said...

சில நேரங்களில் பஸ்ஸில் போடும்
படங்களால் பாதிக்கப்பட்டு
அய்யோ ராமா என்று அலறி விடுகிறேன்.

நல்லா இருக்கு கவிதை.

சி. கருணாகரசு said...

கவிதை நல்லாத்தான் இருக்கு.... கடைசிவரியில் கிடக்கிறது கவிதையின் கனபரிமாணம்...
வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

நின்று நிதானித்து உங்களை எடை போட நேரம் வாய்த்திருக்கிறது. நல்ல கவிதை .பாராடுக்கள்.

தியாவின் பேனா said...

அருமை யான பதிவு
நல்ல கவிதை
ரசித்துப் படித்தேன்

kamalesh said...

உண்மையில் வரிகள்ள
வளராத ஒரு குழந்தையோட அனுபவமும்,
மொத்த கவிதையில் அனுபவ முதிர்ச்சியும் தெரிது....
ரொம்ப தரமான கவிதை.....
ரசிச்சி படிக்க முடியுது....

Balavasakan said...

//சில நேரங்களில்
எத்தனை பேர் உணர்கிறோம். நம்முள்ளும் ஒரு மழலை இருப்பதை.//

அதே அதே....நானும் அதேதான்..

அகல்விளக்கு said...

நன்றி

** கதிர் அண்ணா
** நண்பர் புலிகேசி
** தண்டோரா தலைவர்
** நண்பர் பாலசி
** நண்பர் முரளி
** கனிமொழி
** வானம்பாடிகள் சார்
** தோழர் கருணாகரசு
** நிலாமதி அக்கா
** தியாவின் பேனா
** நண்பர் கமலேஷ்
** நண்பர் பாலவாசகன்

சுடுதண்ணி said...

அருமை நண்பா :)

//டிஸ்கி : நீ இன்னும் வளரவில்லை என்று வரும் பின்னூட்டங்களும் ஆமோதிக்கப்படும்.
//

:)))))

நட்புடன்

சுடுதண்ணி ;)

அகல்விளக்கு said...

உங்களது இமெயில் கிடைக்கப்பெற்றேன்..

நன்றி சுடுதண்ணி நண்பா...

Anonymous said...

சில நேரங்களில்
மழைவரும்போது
மழைச்சாரலில் அடிபடும்
தெருநாய்களுக்காக பரிதாபப்படுகிறேன்
//

நாய் பொழப்புன்னு சும்மாவா சொன்னாங்க!!

Anonymous said...

சில நேரங்களில்
மழைவரும்போது
மழைச்சாரலில் அடிபடும்
தெருநாய்களுக்காக பரிதாபப்படுகிறேன்///

நாய் பொழப்புன்னு சும்மாவா சொன்னாங்க!

தேவன்மாயம்

பிரியமுடன்...வசந்த் said...

தி பெஸ்ட்...ஒன்...

ஸ்ரீ said...

நல்ல கவிதை .(நீ இன்னும் வளரவில்லை)

அகல்விளக்கு said...

நன்றி டாக்டர் சார்...
(ஒய் அனானி கமெண்டிங்??)

நன்றி வசந்த் நண்பரே..

நன்றி ஸ்ரீ
(தலைவரே நேர்ல பார்த்ததால வளரலன்னு சொல்றீங்களா... ரைட்டு..)

காருண்யா said...

//சில நேரங்களில்
கடற்கரை காணும்போது
உடல் நிலைத்து இருந்தாலும்
மனது லயித்து குதித்தோடுகிறது//

நல்லா இருக்கு கவிதை...

தியாவின் பேனா said...

நல்ல கவிதை

ரோஸ்விக் said...

நீ இன்னும் வளரவில்லை...அது தான் கவிதை அழகாயிருக்கிறது அந்த படத்தைப்போல...:-))

கே.பாலமுருகன் said...

சில நேரங்களில் தற்செயலாக ஆடும் ஊஞ்சலில் சிறிது நேரம் அமர்ந்துவிட்ட போவது போல, எளிமையான கவிதை. வாழ்த்துகள் நண்பா

வால்பையன் said...

சில நேரங்களில்
கவிதைக்கு பின்னூட்டம்
போடலாம்னு தோணுது!

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

சில நேரங்களில்
நல்ல கவிதைகளும்
லேட்டாகத்தான்
நம் கண்களில் தென்படுகிறது.

தமிழ்ப்பறவை said...

ரசித்தேன் அ.விளக்கு...
ஏண்டா வளர்ந்து தொலைத்தோம் எனத் தோணுகிறது...

Anonymous said...

சில நேரங்களில்
உங்களுக்கும் கவிதை வருகிறது

- Mrs.அகல்விளக்கு

அனுஜன்யா said...

நல்லா இருக்கு. திரும்பத் திரும்ப 'சில நேரங்களில்' எழுதாமல் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று பாருங்களேன். எனக்கு இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.

அனுஜன்யா

பூங்குன்றன்.வே said...

நிச்சயமாக நமக்குள் ஒரு குழந்தை மனசும் உண்டு.பல பேருக்குதான் அது தெரிவதில்லை.நல்ல ரசனையுடன் உள்ளது.வாழ்த்துக்கள் !

அகல்விளக்கு said...

நன்றி

** காருண்யா
** தியா
** ரோஸ்விக்
** கே.பாலமுருகன்
** வால்ஸ் தல
** பெயர் சொல்ல விருப்பமில்லை
** தமிழ்ப்பறவை
** Mrs.அகல்விளக்கு
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்... யாருப்பா இது)
** அனுஜன்யா
(//நிறைய வாசியுங்கள். நிறைய எழுதுங்கள். வாழ்த்துகள்.// மிக்க நன்றி)
** பூங்குன்றன்.வே

ரிஷபன் said...

ஆமா.. நீங்க வளரல.. அது எவ்வளவு சந்தோஷமான விஷயம் ஜி தெரியுமா இப்ப இருக்கற அளவுகோல்படி வளர்ச்சினா ரொம்ப கால்குலேட்டிவ்னு அர்த்தமாயிருது.. அது வேணாம்பா.. டச்சிங் கவிதை.

ஜீவன்பென்னி said...

// சில நேரங்களில்
எத்தனை பேர் உணர்கிறோம். நம்முள்ளும் ஒரு மழலை இருப்பதை.//

குழந்தைகள பார்க்குறப்போ ஒரு சந்தோசம் எனக்கு கிடைக்கும். உங்க கவிதை
வரிகள்ல அதற்குண்டான ஏக்கம் இருக்கு. முதல் முறையா உங்க பக்கத்துக்கு வரனான்னு தெரியாது. ஆனா உங்க கவிதைகள் பிடிச்சிருக்கு. என் தளத்திற்க்கு வந்து என்னை பின் தொடர்வதற்க்கு நன்றி.

ஜீவன்பென்னி said...

// சில நேரங்களில்
எத்தனை பேர் உணர்கிறோம். நம்முள்ளும் ஒரு மழலை இருப்பதை.//

குழந்தைகள பார்க்குறப்போ ஒரு சந்தோசம் எனக்கு கிடைக்கும். உங்க கவிதை
வரிகள்ல அதற்குண்டான ஏக்கம் இருக்கு. முதல் முறையா உங்க பக்கத்துக்கு வரனான்னு தெரியாது. ஆனா உங்க கவிதைகள் பிடிச்சிருக்கு. என் தளத்திற்க்கு வந்து என்னை பின் தொடர்வதற்க்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

கவிதையில் லயித்துப்போனேன்...

Chitra said...

சில நேரங்களில்
மழைவரும்போது
மழைச்சாரலில் அடிபடும்
தெருநாய்களுக்காக பரிதாபப்படுகிறேன்
............குழந்தை உள்ளத்தில் கருணை கவிதை.

நாஞ்சில் பிரதாப் said...

கவிதை நல்லாருக்கு... உண்மைதான் எல்லாருக்குள்ளும் ஒரு மழலை இருக்கத்தான் செய்கிறது.

//டிஸ்கி : நீ இன்னும் வளரவில்லை என்று வரும் பின்னூட்டங்களும் ஆமோதிக்கப்படும். //

நீங்க ரொம்ப வளர்ந்துட்டீங்க... :-)

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger