Tuesday, December 29, 2009

காதல் விதைகள் - 1காத்திருக்கும் கணமெல்லாம் கள்ளேறிய சுளையாய்
போதையேற்றிச் செல்கிறது காற்று.

காரணம் வினவினால் உந்தன் ஈரக்கேசத்தை
தழுவி உலர்த்தி வருகிறதாம்.

இரைச்சலினூடே இனிமையாய் கேட்கும் கொலுசொலி
உன்னுடையதோ என எண்ணி

திரும்பிய பொழுது தேவதையாய் கண்டு
சிலிர்த்து விரிந்தது மனம்.

உன் அட்சயப்புன்னகை அமைதியாய் தவழ்ந்து
ஆழ்ந்து சென்றது என்னுள்.

தீண்டிச்செல்லும் விழிகளால் கணக்கின்றி
காதல் விதைகளைத் தூவுகிறாய்.

ஆர்ந்தெழும் கடலலையாய் கட்டுக்குளடங்க
மறுக்கிறது என் காதல்.

மீண்டும் உன்னைக் காணும் கணநேரத்திற்காய்
காத்திருக்கிறது என் கண்கள்.

நேரில்கண்டால் உணர்விழந்து உலரும் நாவால்
மொழிகளின்றி நிற்கிறேன்.

அனைத்துமறிந்தும் அறியாத சாதுவாய் மெளனித்துக்
கடப்பது ஏனென்று சொல்வாய்.


(உரையாடல் கவிதைப் போட்டிக்காக................)

30 comments:

ஈரோடு கதிர் said...

வன்மையாக கண்டிக்கிறேன்

என்னை மாதிரி, வானம்பாடி மாதிரி யூத்துகள்(!!!) எழுதும் கவிதை மாதிரி எழுதியதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் ராஜா

வானம்பாடிகள் said...

/மீண்டும் உன்னைக் காணும் கணநேரத்திற்காய்
காத்திருக்கிறது என் கண்கள்.

நேரில்கண்டால் உணர்விழந்து உலரும் நாவால்
மொழிகளின்றி நிற்கிறேன்.

அனைத்துமறிந்தும் அறியாத சாதுவாய் மெளனித்துக்
கடப்பது ஏனென்று சொல்வாய்./

அருமை அருமை:)

வானம்பாடிகள் said...

/என்னை மாதிரி, வானம்பாடி மாதிரி யூத்துகள்(!!!) எழுதும் கவிதை மாதிரி எழுதியதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் ராஜா/

ரிப்பீட்டே. எல்லாம் பிஞ்சுல பழுத்துறிச்சிங்க. லோகம் கெட்டுப்போச்சு.

ஈரோடு கதிர் said...

//ஈரக்கேசத்தை
தழுவி உலர்த்தி வருகிறதாம்.//

அட அட.... எங்கியோ போயிட்டியே ராசா


//தீண்டிச்செல்லும் விழிகளால் கணக்கின்றி
காதல் விதைகளைத் தூவுகிறாய்//

ய...ம்மா... பின்னுறியேப்பா

//உணர்விழந்து உலரும் நாவால்
மொழிகளின்றி நிற்கிறேன்.//

சான்ஸே இல்லப்பா!

அகல்விளக்கு said...

// ஈரோடு கதிர் said...

வன்மையாக கண்டிக்கிறேன்

என்னை மாதிரி, வானம்பாடி மாதிரி யூத்துகள்(!!!) எழுதும் கவிதை மாதிரி எழுதியதற்காக உங்களை வன்மையாக கண்டிக்கிறேன் ராஜா//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

என்னையும் யூத்துங்க(??!!) க்ரூப்புல சேத்துக்கங்க அண்ணா !!

வால்பையன் said...

அட போட வச்சிடிங்க தல!

நானேல்லாம் என்னைக்கு இந்த மாதிரி கவிதை எழுதி பிகர் கரைக்ட் பண்ணி!

ஊஹும்!

♠ ராஜு ♠ said...

\\வால்பையன் said...
அட போட வச்சிடிங்க தல!
நானேல்லாம் என்னைக்கு இந்த மாதிரி கவிதை எழுதி பிகர் கரைக்ட் பண்ணி!
ஊஹும்!\\

கவலைப்படதீங்க அகல்விளக்கு ராசா..!
இந்த பெருசுகளே இப்ப்பிடித்தான்.
:-)

ஆரூரன் விசுவநாதன் said...

யூத் லிஸ்டில் என் பெயரைச் சேர்க்காத கதிரை வண்மையாக கண்டிக்கிறேன்.


பரவாயில்லைங்க ராஜா, வயசானவங்க போட்டி அதிகமாயிடுச்சு...இனிமே நாம யங் யூத்ன்னு வச்சிக்கலாம்.

வாழ்க "யங் யூத்ஸ்"


கவிதைகள் அருமை

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//கவலைப்படதீங்க அகல்விளக்கு ராசா..!
இந்த பெருசுகளே இப்ப்பிடித்தான்.//

அதை ஒரு மாபெரும் பெருசு சொல்வதை கண்ணடிக்கிறேன்!
(நமீதா நலமா தல)

க.பாலாசி said...

//திரும்பிய பொழுது தேவதையாய் கண்டு
சிலிர்த்து விரிந்தது மனம்.

உன் அட்சயப்புன்னகை அமைதியாய் தவழ்ந்து
ஆழ்ந்து சென்றது என்னுள்.//

நல்ல கவிதை ராஜா...ரசித்து படித்தேன்.

இந்தப்பக்கம் வயசானவங்க கூட்டம் அதிகமாயிடுச்சு. நீங்க கவலப்படாதிங்க.

ஈரோடு கோடீஸ் said...

எல்லாரும் கவிதை எழுதறீங்க! ம்ம் நல்லாத்தான் இருக்கு. ஒரு நா நானும் எழுதப் போறேன், நீங்க அழுகப்போறீங்க!

வாழ்த்துக்கள் அகல்!

இரும்புத்திரை said...

//காரணம் வினவினால்//

இதுக்கு காரணம் வினவா

D.R.Ashok said...

என்னா மாதிரியே இளசா சின்னபையன் மாதிரியே கவித எழுதிறீங்க :)
எழுதுங்க.. எழுதிகிட்டேயிருங்க...

கனிமொழி said...

யாரு ஜெய் அந்த தேவதை????
:-)
கவிதை சூப்பர்....

ஸ்ரீ said...

அருமை.கலக்கல்.

Balavasakan said...

காத்திருக்கும் கணமெல்லாம் கள்ளேறிய சுளையாய்
போதையேற்றிச் செல்கிறது காற்று.

சத்தியமாய் இடித்து இந்த வரிகளே சொல்லுகிறது நீங்கள் யாரோ ஒரு தேவதையிடம் சிக்கிவிட்டீர்கள் என்று ...உண்மை தானே...வாழ்த்துக்கள் நண்பா..?

புலவன் புலிகேசி said...

மௌனித்த பின் எப்படி சொல்வது...நல்ல விதைதான்

நிலாமதி said...

காதலில் விழுந்தால் காத்திருக்கத்தான் வேண்டும். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..

VELU.G said...

//பய புள்ள சிக்கிட்டாப்ள போல,
மாட்னா சீக்கிதாம்லே //


- நல்ல கவிதைநயம், அருமையான வெளிப்பாடு, தொடரவும். வாழ்த்துக்கள்

ரிஷபன் said...

நேரில்கண்டால் உணர்விழந்து உலரும் நாவால்
மொழிகளின்றி நிற்கிறேன்.

அப்புறம் கவிதை மழையாய் பொழிவதற்கா..?!

J J Reegan said...

//அனைத்துமறிந்தும் அறியாத சாதுவாய் மெளனித்துக்
கடப்பது ஏனென்று சொல்வாய். //

அருமை:-))))

சி. கருணாகரசு said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

ஸ்ரீ said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

kamalesh said...

கலர் புல்லா இருக்கு...கலக்குங்க புதுவருட வாழ்த்துக்கள்....

வானதி said...

எங்கேயோ மாட்டிகிட்டிகள் என நினைக்கிறேன்

வாழ்த்துக்கள்

$$அனைத்துமறிந்தும் அறியாத சாதுவாய் மெளனித்துக்
கடப்பது ஏனென்று சொல்வாய்$$

எப்படி இப்டியெலாம்

காதல் வள்ளுவனோ
:))

சி. கருணாகரசு said...

நேரில்கண்டால் உணர்விழந்து உலரும் நாவால்
மொழிகளின்றி நிற்கிறேன்.//

உண்மைத்தான்!

//அனைத்துமறிந்தும் அறியாத சாதுவாய் மெளனித்துக்
கடப்பது ஏனென்று சொல்வாய்.//

நியாயமான கேள்விதான்

பாராட்டுக்கள்...... தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்!

அகல்விளக்கு said...

நன்றி

** கதிர் அண்ணா
** வானம்பாடிகள் அண்ணா
** வால்ஸ்
** டக்ளஸ் தல
** ஆருரன் சார்
** பாலாசி அண்ணா
** கோடிஸ்
** அரவிந்த் (இப்போ மட்டும் எப்படிப்பா கமெண்ட் போட்டீங்க)
** அசோக் அண்ணா
** கனிமொழி
** பாலா
** sri அண்ணா
** புலிகேசி தல
** நிலாமதி அக்கா
** குணா அண்ணா
** வேலு சார்
** ரிஷபன் அண்ணா
** ரீகன் அண்ணா
** கருணாகரசு சார்
** கமலேஷ் சார்
** வானதி (இப்போதான் வழி தெரியுதா?)

padma said...

nice
all the best

சக்தியின் மனம் said...

வெற்றி பெற வாழ்த்துகள்

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger