Wednesday, January 13, 2010

காதல் விதைகள் - 2




காலங்கள் மாறினாலும் மனிதர்தம் காதல்
மட்டும் மாறாதிருப்பது ஏனோ


துணையின் வருகையும் கணநேர பார்வையும்
எதிர்நோக்கா காதலுண்டா


ஒவ்வொரு வருகையும் வெயில்நேர மழைச்சாரலாக
மனதை நனைத்துப் போகின்றது


இதழோரப்புன்னகை என்னை இன்னும் ஆழமாக
இழுத்துச்செல்கிறது காதலில்


பேசும்போது உன்விரல்கள் காற்றில் எழுதுவது
என்ன காதலா கவிதையா


காதலென்றால் சொல்லிவிடு - கவிதைவரிகளில்
வடித்து விடுகிறேன் அதனை


ஆம் என்றுரைக்க நீயிருந்தாலும் காதலை
சொல்ல என்னால் இயலவில்லை


மீண்டும் உன் விழிகள் பார்க்கையிலென் 
மெளனம் கூடித்தான் போகிறது 


சொல்லாத காதல்கணங்கள் வலியோடு கூடிய
சுகமென்பது உண்மை போலும்


காதலென்றும் வினோத வலிதான் - அதன்
வீரியம் விழிகளில் தெரிவதில்லை

23 comments:

தேவன் மாயம் said...

காதலென்றும் வினோத வலிதான் - அதன்
வீரியம் விழிகளில் தெரிவதில்லை//

வலி உண்மைதான்!!

தேவன் மாயம் said...

காதல் வலிம் பிறருக்குப் புரியாதுதான்!!!

கனிமொழி said...

:-)
கவிதை அருமை...
ம்ம்ம்ம் தொடருங்கள்...

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

அருமை


இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

வால்பையன் said...

//
காலங்கள் மாறினாலும் மனிதர்தம் காதல்
மட்டும் மாறாதிருப்பது ஏனோ//

இனப்பெருக்கம் உயிரின் கட்டாயம் ஆதலால்!

சிவாஜி said...

//
காலங்கள் மாறினாலும் மனிதர்தம் காதல்
மட்டும் மாறாதிருப்பது ஏனோ//

உயிரின் இயல்பு காதல்! ஆதலால் கட்டாயம் இனப்பெருக்கம்!

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

நிலாமதி said...

அழகான கவிதை....நிறைய நல் மாற்றங்கள் தெரிகிறது உங்கள் பதிவுகளில்..இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

butterfly Surya said...

பேசும்போது உன்விரல்கள் காற்றில் எழுதுவது
என்ன காதலா கவிதையா/// அருமை.

பொங்கல் நல்வாழ்த்துகள்.

பிரியமுடன்...வசந்த் said...

ஃபீல்......

தைத்திருநாள் வாழ்த்துக்கள்.......

வானம்பாடிகள் said...

அசத்துறா! இனிய பொங்கல் வாழ்த்துகள்.

cheena (சீனா) said...

அன்பின் அகல்விளக்கு

இனிய காதல் கவிதை - வலியோடு கூடிய சுகம் - அனைத்துக் காதலர்களும் உணர்ந்தது - அனுபவித்தது

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

VELU.G said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்

T.V.Radhakrishnan said...

அருமை

Balavasakan said...

காதலென்றும் வினோத வலிதான் - அதன்
வீரியம் விழிகளில் தெரிவதில்லை


நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நண்பா.. தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Sangkavi said...

//சொல்லாத காதல்கணங்கள் வலியோடு கூடிய
சுகமென்பது உண்மை போலும்//

நிச்சயம் உண்மை, அழகான கவிதை நண்பரே...

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது நண்பரே..
அதிலும்

பேசும்போது உன்விரல்கள் காற்றில் எழுதுவது
என்ன காதலா கவிதையா


இந்த வரிகள் மனதில் நிற்கின்றன!!

ஆரூரன் விசுவநாதன் said...

//காதலென்றும் வினோத வலிதான் - அதன்
வீரியம் விழிகளில் தெரிவதில்லை //


சரியான வரிகள்...மிகவும் ரசித்தேன்

வானதி said...

//காதலென்றும் வினோத வலிதான் - அதன்
வீரியம் விழிகளில் தெரிவதில்லை//

நல்ல கவிவரிகள் நண்பா

உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ஸ்ரீ said...

பொங்கல் நல்வாழ்த்துகள்.

சி. கருணாகரசு said...

காதல்.... அழகாய்தானிருக்கிறது...

உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

சட்டு புட்டுனு ஒரு பொண்ண காதலிக்க ஆரம்பி ராஜா

D.R.Ashok said...

ரொம்ப லேட்டா வந்துட்டேனோ... நல்லயிருக்கு ராஜா காதல் ;)

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger