Monday, January 18, 2010

தலைக்கவசத்திலும் ஆபத்து





விபத்துக்களின் போது தலையில் பலத்த அடி படுவதால்தான் அதிகளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்பதால் சமீபகாலமாக இரண்டு சக்சர வாகனத்தில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. ஆங்காங்கே சிக்னல்களில் ஒலிப்பெருக்கி மூலமாக தலைக்கவசம் அணியச்சொல்லி வற்புறுத்தி வந்த காவல் துறையினர் தற்போது தலைக்கவசம் அணியாமல் வலம்வரும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்துக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி நிகழும் சிறு சிறு விபத்துக்களில் வாகனத்திலிருந்து தவறி விழுபவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் தப்பி வருவது மறுக்கவியலாத ஒன்று.

இரண்டு வாரங்களுக்கு முன் ஈரோட்டில் ஏற்பட்ட ஒரு விபத்தில் சிக்கிய வாலிபர் தலையில் பலத்த அடி பட்டு உயிரிழந்திருக்கிறார். இத்தனைக்கும் அவர் தலைக்கவசம் அணிந்திருந்தும் மரணம் ஏற்பட்டிருக்கிறது. உயிர் காக்க வேண்டிய தலைக்கவசம் அவர் தலையில் நன்றாக அழுந்தி பெரிய வெட்டுக்காயத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர் தலையில் இருந்து தலைக்கவசத்தை கழற்ற முடியவில்லை. வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்திற்கு அவர் அணிந்திருந்த தரமற்ற போலி தலைக்கவசம்தான் காரணம் என்பது கசப்பான உண்மை.

தலைக்கவசம் கட்டாயப்படுத்தப்பட்ட உடனே தலைக்கவச விற்பனையாளர்கள் பாடு கொண்டாட்டம் ஆகிவிட்டது. தலைக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தும் கடைசி நாள் வரையிலும் கடைகளில் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது. ஆனாலும் அதிக அளவில் விற்பனை ஆனதென்னவோ போலி தலைக்கவசங்கள்தான். குறைந்த விலையும், வண்ணங்களும் தான் அவை அதிக அளவில் விற்பனையாவதற்கு காரணம் என்று விற்பனையாளர் ஒருவரே கூறினார்.

தற்போது ஐ.எஸ்.ஐ தரச்சான்று முத்திரை இல்லாத தலைக்கவசங்களை அணிந்து வாகனம் ஓட்டி காவலரிடம் பிடிபட்டால் முதலில் தலைக்கவசத்தை ஆராய்ந்து அவை உடைக்கப்படுகின்றன. எனது நண்பர் ஒருவரும் தரமில்லா தலைக்கவசத்துடன் சென்று காவலரிடம் பிடிபட்டார். சாதாரணமாக கீழே போட்டதற்கே அவர் தலைக்கவசம் சிதறுதேங்காய் போல சிதறி விட்டது. அதிகமாக இதைத்தானே விற்பனை செய்கிறார்கள். பிறகு ஏன் உடைக்கிறார்கள் என அவர் என்னிடம் கேட்டது நியாமாகத்தான் பட்டது.

தலைக்கவசம் கட்டாயம் என்று அறிவிப்பு வந்தபின் இரண்டே நாட்களில் ஆங்காங்கே சாலையோரங்களில் புதிதாக தலைக்கவச விற்பனையாளர்கள் முளைத்தனர். நான் தலைக்கவசம் வாங்கும் முன்னர் அவர்கள் விற்பனை செய்யும் தலைக்கவசத்தை வாங்குவதற்காக பார்த்தேன். அவர்கள் விற்கும் பெரும்பாலான தலைக்கவசங்கள் ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாதவை. அவற்றின் பெட்டியில் முத்திரை இருந்தாலும் தலைக்கவசத்தில் இல்லை. சிலவற்றில் பேட்ஐ் போலவும் ஸ்கிரீன் பிரிண்டிங் செய்யப்பட்டிருந்தது. என் நண்பர் வாங்கிய ஒரு தலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ முத்திரை ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருந்தது (அதுதான் பின்னர் உடைக்கபட்டது). இத்தலைக்கவசங்கள் ரூ.350 லிருந்து ரூ.600 வரை விற்கப்படுகிறது. ஒரு விற்பனையாளரிடம் நான் ஐந்து தலைக்கவசங்களை வாங்குவதாய் பேரம் பேசியபோது அவர் இறுதியாக ஆயிரம் ரூபாய்க்கு இறங்கி வந்து ஆச்சர்யப்படுத்தினார். இத்தகைய தலைக்கவசங்களில் பயன்படுத்தியிருக்கும் உள்பக்க தெர்மாகோல் மிக லேசாகவும் தரமில்லாமலும் இருக்கும். நம் விரலால் சிறிது அதிகமாக அழுத்தினாலும் பிய்த்துக் கொண்டு விரல் உள்ளே சென்றுவிடும். வெளிப்பக்க பூச்சில் நிறைவு வேலைகள் சரியான அளவிற்கு செய்யப்பட்டிருக்காது. இன்னும் நிறைய விஷயங்களில் தரமான தலைக்கவசங்களிலிருந்து இவை வேறுபட்டிருக்கும். தற்போது காவலர்கள் பந்தயங்களில் பயன்படுத்தும் தலைக்கவசங்களைப்போல வண்ணப்பூச்சு கொண்ட தலைக்கவசங்களை தவறாமல் தரச்சான்று உள்ளதா என ஆராய்கிறார்கள். உண்மையில் கட்டாயத்திற்காக தலைக்கவசத்தை பயன்படுத்தாமல் பாதுகாப்பிற்காக பயன்படுத்துவதே நன்று.

தலைக்கவசத்தை பாதுகாப்பிற்காக அணிந்தாலும், தரமற்ற தலைக்கவசங்கள் நம் பாதுகாப்பினை பறித்து விடும். சிலநேரங்களில் மரணத்திற்கு கூட அது காரணமாகலாம். தலைக்கவசங்களை கட்டாயத்திற்காக பயன்படுத்துவோர் பெரும்பாலும் தரமற்ற தலைக்கவசங்களையே வாங்குகின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதற்காக ஆபத்தான முயற்சியில் ஈடுபடுவதை தவிர்த்து தரமான தயாரிப்புகளை பயன்படுத்துவோம்.

டிஸ்கி : தரமற்ற தலைக்கவசங்கள் பயன்படுத்துவோரை பிடிக்கும் காவல்துறை நண்பர்கள், அவற்றை விற்றுக்கொண்டிருந்த சாலையோர விற்பனையாளர்களை கண்டித்திருந்தால் இப்போது இப்படி ஒரு சிக்கல் இருந்திருக்காது. ஆனாலும் என்ன செய்வது, மனசாட்சி பேத்துகிறது.

24 comments:

கும்க்கி said...

காவலர்கள் தரமானவர்களா...?

:--))

வானம்பாடிகள் said...

தரமற்ற தலைக்கவசங்கள் ஒரு புறம். தரமானது கூட முறைப்படி அணியாமல், போட்டுக்கொண்டு ஓட்டுவது போடாமல் ஓட்டுவதை விட ஆபத்தானது. தலைக்கவசம் போட்டால் தலையில் அடி படாது என்பது உத்திரவாதமில்லை என்றாலும் ஆபத்துக்கான வாய்ப்புகள் வெகுவாக குறையும். முறையாக அணிந்தால்.

ஈரோடு கதிர் said...

இதுபோல் தலைக்கவசம் உடைந்து தலையில் குத்தி மரணம் நிகழ்வது வெகு அபூர்வம்...

சாலையோரம் வறுத்த வேர்கடலை போல் தலைக்கவசம் விற்கப்படுவதை கண்டு கொள்ளாத அரசாங்கம் குறித்து என்ன சொல்ல

நல்ல அலசல் ராஜா

க.பாலாசி said...

மிக நல்ல இடுகை ராசா. சில ஐ.எஸ்.ஐ.. தலைக்கவசங்களும் இதுபோல் தரமற்றதாகவே இருக்கிறது. எது போலியான முத்திரை என்று கண்டறிவதே கடினமாக உள்ளது.

கமலேஷ் said...

நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு பதிவு...உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி...

Sangkavi said...

இதோ போல் ஒரு சம்பவம் இரு வாரங்களுக்கு முன்பு கோவை சரவணம்பட்டி அருகே
நடந்தது.. மிகவும் பயனுள்ள பதிவு..

ஆரூரன் விசுவநாதன் said...

nice one

shortfilmindia.com said...

நம்ம ஊர்ல எப்பவுமே இப்படித்தாங்க.. தும்பை விட்டு வாலை பிடிப்பாங்க

கேபிள் சங்கர்

தாமோதர் சந்துரு said...

//டிஸ்கி : தரமற்ற தலைக்கவசங்கள் பயன்படுத்துவோரை பிடிக்கும் காவல்துறை நண்பர்கள், அவற்றை விற்றுக்கொண்டிருந்த சாலையோர விற்பனையாளர்களை கண்டித்திருந்தால் இப்போது இப்படி ஒரு சிக்கல் இருந்திருக்காது. ஆனாலும் என்ன செய்வது, மனசாட்சி பேத்துகிறது.\\

இதைத்தான் காவல்துறை முதலில் செய்ய வேண்டும். நல்ல பதிவு

Chitra said...

குறைந்த விலையில் கிடைப்பதற்காக ஆபத்தான முயற்சியில் ஈடுபடுவதை தவிர்த்து தரமான தயாரிப்புகளை பயன்படுத்துவோம். ......... எல்லாத்துக்கும் அரசாங்கம் மட்டும் காரணம் ஆகாது என்று தெரிகிறது.

தாராபுரத்தான் said...

தலை யான தகவல்.வணக்கமுங்க.

துளசி கோபால் said...

நல்ல பதிவு. பலருக்கும் பயன்.

புதுசா எந்த விதிகள் வந்தாலும் அதிலும் போலிகளை நுழைச்சுப் பணம் பார்த்துக்கும் ஈன புத்தித்தான்.

இந்தமாதிரி தரம்கெட்ட தயாரிப்புகளுக்கு அனுமதி கொடுப்பதே முதல் தப்பு.

பேநா மூடி said...

நல்ல இடுகை.., ஆனால் நம்ம ஊரில் பூலிகளே அதிக வரவேற்ப்பை பெறுகிறது...

ஜீவன்பென்னி said...

நான் தலைக்கவசத்தின் உதவியால் உயிர் தப்பினேன். நல்ல பயனுள்ள இடுக்கை.

புலவன் புலிகேசி said...

தரமற்ற தலைக்கவசங்கள் சாலை ஓரங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். நம் மக்களும் போலிசுக்கு பயந்து குறைந்த விலைக்கு வாங்கி கட்னேஎன போட்டுவருகிறார்கள்.

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்லதொரு பதிவு.

துபாய் ராஜா said...

நல்லதொரு சமூக அக்கறையுள்ள பதிவு.

hayyram said...

இன்னிக்கு தினமலர்ல போலீஸே ஹெல்மெட் போடலன்னு காட்டிருக்காங்க. என்னத்த சொல்ல.

அன்புடன்
ராம்
www.hayyram.blogspot.com

பட்டாபட்டி.. said...

இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு
ஒருமுறை தலைகவசத்தை மாற்றவேண்டும்..
( அதன் உறுதித் தன்மை 2 வருடங்களுக்குப்
பின் குறைய ஆரம்பிக்கும்.. இது சிங்கையில்
ஓட்டுனர் உரிமம் வாங்கும் பொழுது , எனது பயிற்சியாளர் சொன்னது.. )

அகல்விளக்கு said...

நன்றி....

**கும்க்கி அண்ணா (அதுதான் தெரியவில்லை அண்ணா :-)))

** வானம்பாடிகள் அண்ணா
** கதிர் அண்ணா
**பாலாசி
**கமலேஷ்
**சங்கவி
**ஆருரன் அண்ணா
**சங்கர் அண்ணா
**சந்துரு
**சித்ரா அக்கா
**தாராபுரத்தார்
**துளசி கோபால்
**பேனா மூடி
**ஜீவன்பென்னி
**புலிகேசி நண்பா...
**ரிஷான் ஷெரிப்
**ராஜா அண்ணா
**ஹேராம்
**பட்டாபட்டி சங்கத்தலைவர்...

அனைவருக்கும் நன்றி...

கும்க்கி said...

என்னங்க சார் இது...எல்லோருமே உங்களுக்கு அண்ணன்களா..?
நானே காண்வெண்டுல அட்மிஷன் கேட்டுட்டிருக்கேன்...என்னையும் அண்ணன் போட்டுட்டிங்களே....

உங்களைவிட சின்ன ப்ரேம் கண்ணாடிதான் போட்டிருக்கேன்....
:-))

அகல்விளக்கு said...

தலைவரே...

அண்ணா-னு சொன்னாதான் நம்மளையும் யூத்துன்னு ஒத்துக்குவாங்க...

:-)

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

"வேகா" போன்ற தரமான ஹெல்மெட்டுகள் அணிவதே நல்லது. என்னுடையது 1600 ரூபாய். ஆனால் அதே போன்று போலி, அதே வேகா ஸ்டிக்கர் உடன், 600 ரூபாய்க்கு கிடைக்கிறது. கண்டுபிடிப்பது மிக சிரமம்.. மக்களுக்கு வேண்டும் விழிப்புணர்வு.. அரசு எப்போதாவது மக்கள் நலன் கருதி(!?!)ஒரு சட்டம் கொண்டு வந்தால் அதை நமக்காக என்று மதித்து அதைப் பின்பற்ற வேண்டும் இல்லையேல், அரசை இனிமேல் குறை கூறாமல் இருக்க வேண்டும்.ஏனெனில் நமக்கு அதற்கு அருகதை இல்லை. உணரும் போதே மாற்றங்கள் நிகழ்கின்றன. அதே போன்று பின் பக்கம் பார்க்கும் கண்ணாடி இல்லாமலும் வண்டி ஓட்டுவது தவறு..

ஆ.. அப்புறம் என்னையும் அண்ணன்கள் பட்டியலில செத்துராதீங்க..

நன்றி..

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நல்ல பதிவு.
கட்டாய தலைக்கவச ஆணை சமீபத்தில் திருப்பூரையும் ஆட்டுவித்தது.
திருமண மண்டபங்களை வாடகைக்கு பிடித்து சிறப்பு விற்பனை செய்தனர்.
ரூ 200க்கும், 300க்கும் கூட விற்கப்பட்டன. சாலைவிதிகள் உட்பட அனைத்து
அரசு ஆணைகளையும், அவற்றின் நோக்கத்தை உணராமல், கட்டாயத்திற்காக
பின்பற்றுவதால் நிகழும் விபரீதங்கள் இவை.

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger