Tuesday, January 26, 2010

மழையும் மழலையும்
மாலை வெயிலை மறைத்து தூரும்
சாரல் மழையின் சிதறிய துளிகள்
வீழ்ந்ததென்னவோ தண்ணீர் துளிகளாய்.

எட்டாத போதும் எக்கி நின்று,
மழைமாமணிகளை விருப்பமாய் கோர்த்து
விளையாடுகிறாள் மழலை ஒருத்தி.

சன்னல் கண்ணாடி மழையின் ஓவியமாய்
விரலால் தீட்டத்தீட்ட அழித்துப்போகும் தூரல் பார்த்து
பற்கள் கடிக்க பொய்க்கோபம் காட்டுகிறாள்.

வெட்டிய மின்னலில் வெளியெல்லாம் ஒளிர
அலறிய மழலை அடைக்கலம் புகுந்தது
பயமறியா தன் பொம்மையிடம்.

அதிர்ந்த இடிகள் அடங்கும்வரை அணைத்துக்கொண்டு
வேண்டுகிறாள் பொம்மையிடம் - என்னவென்று புரியவில்லை
அந்த பொம்மைக்கும் கூட.

நிற்கப்போகும் மழையின் கடைசித் தூரல்களில்
பயத்துடன் கால் வைத்தவள் நிமிர்ந்து புன்னகைக்கிறாள்.
விரிந்த அவள் கைகள் வேண்டுவது என்னவென்று அறியாமல்.

நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா….

30 comments:

கனிமொழி said...

//நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா….
//

:-)
good lines jai...
keep going...

ஈரோடு கதிர் said...

........
கூடவே கவிதை அழகு ராஜா

D.R.Ashok said...

இத படிச்சுட்டு பின்னூட்டம் போடாமல் போவது அழகா?

பிரபாகர் said...

மழை அழகா
மழலை அழகா
ராஜா கேட்க,
கேட்டதோடு
கோர்த்தெடுத்த
கற்பனையை
கிண்டிவிடும்
கவிதையும் அழகு...

வாழ்த்துக்கள் ராஜா.
(கதிர் சொன்னதை கொஞ்சம் சுத்தி வளைச்சி சொல்றேனோ?)

முரளிகுமார் பத்மநாபன் said...

யோவ் பின்றய்யா..

மழை அழகு, மழையொடுகூடிய எதுவும் அழகுக்கு அழகு சேர்ப்பதுதான். :-)

ராமலக்ஷ்மி said...

உங்கள் கவிதைதான் அழகு:)! வாழ்த்துக்கள்!

முனைவர்.இரா.குணசீலன் said...

மழை அழகு
மழையை விட மழலை அழகு
இவை இரண்டையும் இயைபு படுத்திய தங்கள் கவிதை பேரழகு!

முனைவர்.இரா.குணசீலன் said...

அலறிய மழலை அடைக்கலம் புகுந்தது
பயமறியா தன் பொம்மையிடம்.

அதிர்ந்த இடிகள் அடங்கும்வரை அணைத்துக்கொண்டு
வேண்டுகிறாள் பொம்மையிடம் - என்னவென்று புரியவில்லை
அந்த பொம்மைக்கும் கூட.//கற்பனை அழகு நண்பா..

Dr.எம்.கே.முருகானந்தன் said...

"நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா…."
சுவைத்தேன் உங்கள் வரிகளை.

Chitra said...

நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா….
...................very beautiful lines. கண்முன் காட்சி விரிந்த போது, அதுவும் அழகாய் தெரிந்தது, கவிதையை போல.

துபாய் ராஜா said...
This comment has been removed by the author.
துபாய் ராஜா said...

அருமை. அட்டகாசம். தூள். அசல். கவிதை.கவிதை.

//மாலை வெயிலை மறைத்து தூரும்
சாரல் மழையின் சிதறிய துளிகள்
வீழ்ந்ததென்னவோ தண்ணீர் துளிகளாய்.

எட்டாத போதும் எக்கி நின்று,
மழைமாமணிகளை விருப்பமாய் கோர்த்து
விளையாடுகிறாள் மழலை ஒருத்தி//

//நிற்கப்போகும் மழையின் கடைசித் தூரல்களில் பயத்துடன் கால் வைத்தவள் நிமிர்ந்து புன்னகைக்கிறாள்.

விரிந்த அவள் கைகள் வேண்டுவது என்னவென்று அறியாமல்.

நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா….//

ஆரம்பம் முதல் இறுதி வரை வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தொடுத்திருப்பது அழகோ அழகு.

வாழ்த்துக்கள் தம்பி.

க.பாலாசி said...

//நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா….//

kavithaiyudam 3mm azhagu raja... supper...

தமிழ் உதயம் said...

எல்லாமே அழகு தான். அழகுக்குள் போட்டி வேண்டாமே.

ஜெகநாதன் said...

சாரலாயிருக்கு மனசு..! வாழ்த்துக்கள் அகல்விளக்கு!!

வானம்பாடிகள் said...

மழலையும் மழையும் இரண்டுமே அழகு

ஆரூரன் விசுவநாதன் said...

அழகோடு அழகை, அழகாக சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ராஜா

ரேவதி சீனிவாசன் said...

ரொம்ப அருமை.மழை, மழலை இரண்டுமே அழகு, இவற்றை இனைத்து எழுதிய உங்கள் கவிதை இன்னும் அழகு...

புலவன் புலிகேசி said...

மழையழகா மழலையழகா...தூறும் போது மழை அழகு அதில் விளையாடும் போது மழலை அழகு...சூப்பர் தல

henry J said...

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் !!! said...

{{{{{ நிற்கப்போகும் மழையின் கடைசித் தூரல்களில்
பயத்துடன் கால் வைத்தவள் நிமிர்ந்து புன்னகைக்கிறாள்.
விரிந்த அவள் கைகள் வேண்டுவது என்னவென்று அறியாமல்.

நிற்கப்போகும் மழை அழகா…
நின்றுகொண்டிருக்கும் மழலை அழகா…. }}}}}


அருமையான வரிகள் !
அற்புதமான சிந்தனை வாழ்த்துக்கள் !

ஈரோடுவாசி said...

கவிதை அருமை வாழ்த்துக்கள் ராஜா.

Balavasakan said...

கவிதை அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\அலறிய மழலை அடைக்கலம் புகுந்தது
பயமறியா தன் பொம்மையிடம். //

அழகாச் சொன்னீங்க :)

தூரல் தூறும் என்று தானே சொல்வார்கள்.. \\மறைத்து தூரும்// என்பதில் பெரிய ற வரனும் பாருங்க..

ஜெரி ஈசானந்தா. said...

கடைசி இரு வரிகளில் நானும் நனைகிறேன்.

கண்ணகி said...

மிச்சம் வைக்காமல் எல்லோரும் சொல்லிட்டாங்க. அழகு.அழகு.

தியாவின் பேனா said...

குழந்தையின் அழகுக்கு நிகர் உலகில் எதுவுமில்லை நண்பா
ஆனால்
உங்களின் கவிதையும் அழகுதான்

அகல்விளக்கு said...

நன்றி

**கனி
**கதிர் அண்ணா
**அசோக் அண்ணா
**பிரபா அண்ணா
**முரளி
**ராமலக்ஷ்மி
**குணா அண்ணா
**முருகானந்தன் அண்ணா
**சித்ரா அக்கா
**ராஜா அண்ணா
**பாலாசி அண்ணா
**தமிழ் உதயம்
**ஜெகநாதன் அண்ணா
**பாலா அண்ணா
**ஆருரன் அண்ணா
**ரேவதி
**புலிகேசி நண்பா
**ஹென்றி (ரைட்டு)
**சங்கர்
**ஈரோடுவாசி
**பாலாவாசகன் நண்பர்
**முத்துலட்சுமி அக்கா
**ஜெரி ஈசானந்தா அண்ணா
**கண்ணகி அக்கா
**நண்பர் தியா

அனைவருக்கும் நன்றி...

kavya said...

அழகான கவிதை!!மழை வருகின்ற(அந்த விகடன் கவிதை) உங்கள் கவிதைகள் யாவும் மனதை தொட்டுச் செல்கின்றன.வாழ்த்துக்கள்.!!

அகல்விளக்கு said...

நன்றி காவ்யா....
:)

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger