Friday, February 12, 2010

காதல் விதைகள் - 3



சினம் கொண்டு திட்டினாலும் - அன்பாய்
தீண்டும் உன் பார்வை

ஆறுதல் தேடியலையும்போது அரவணைத்து
இன்முகம் காட்டும் உன் மனது.

காரணம் ஏதுமின்றி களிப்புற வைக்கும்  
உன் ஒற்றைப் புன்னகை

நித்தம் நித்தம் கேசம் கலைத்து
விளையாடிய உன் விரல்கள்

பொறுமை கொண்டு விருந்தாய்  
இனிக்கும் உன் மொழி

யாவும் இன்றில்லை எனும்போது ஏனோ
வலித்துக் கொல்கிறது காதல்

மெலிதாய் சிரிக்கும் மழலைகள் முகத்தில்
தெரிவது எல்லாம் நீதான்

விடுத்த உன்சுவாசம் இன்னும் என்னை
சுற்றிக் கொண்டிருக்கிறது

வீசும் காற்றாய் காதல் மணத்தை
பரப்பிக் கொண்டிருக்கிறாய்

ஆதலால்தான் உன் நினைவாக நான்
காற்றை நேசிக்கிறேன்

19 comments:

நிலாமதி said...

காதல் மணம் என்றும் வீச வாழ்த்துக்கள்.

கமலேஷ் said...

அழகான வலியுடன் ஒரு கவிதை வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

என்னத் தல இவ்வளவு வலிகளை நிரப்பி எழுதிட்டீங்க..? நல்லா இருக்கு

சி. கருணாகரசு said...

காரணம் ஏதுமின்றி களிப்புற வைக்கும்
உன் ஒற்றைப் புன்னகை//

கலக்கலான வரிகள்... தொடருங்க...

ஈரோடுவாசி said...

சினம் கொண்டு திட்டினாலும் - அன்பாய்
தீண்டும் உன் பார்வை

நல்லா இருக்கு தல வாழ்த்துக்கள்...

க.பாலாசி said...

//யாவும் இன்றில்லை எனும்போது ஏனோ
வலித்துக் கொல்கிறது காதல்//

//ஆதலால்தான் உன் நினைவாக நான்காற்றை நேசிக்கிறேன்//

சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க ராசா... எல்லாம் சரியாயிடும்...

மிக ரசித்தேன்.

தமிழ் உதயம் said...

அழகான காதலுக்காக அழகான கவிதை.

பிரேமா மகள் said...

பிப்ரவரி 14 வந்தா போதுமே,, ஆளாளுக்கு கிளம்பிருவீங்களே?

வானம்பாடிகள் said...

உன்பங்கு துண்டு போட்டியா ராசா:)). நல்லாருக்கு.

அன்புடன் அருணா said...

/ஆதலால்தான் உன் நினைவாக நான்காற்றை நேசிக்கிறேன்/
இது நல்லாருக்கு!

V.A.S.SANGAR said...

காரணம் ஏதுமின்றி களிப்புற வைக்கும் உன் புன்னகை


வாவ் சூப்பர் நல்ல வரிகள்

ஸ்ரீராம். said...

காற்று விடு தூதா..?

நினைவுகளுடன் -நிகே- said...

காதல் மணம் என்றும் வீச வாழ்த்துக்கள்.

ரிஷபன் said...

காற்றை நேசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவனாய்...

கனிமொழி said...

:-)
mmmmm
nadakkatummmmmmmmmm

அபுஅஃப்ஸர் said...

நல்லாயிருக்கு கவிதை காற்றை நேசிக்கும் அழகு

பேநா மூடி said...

நல்லா இருக்குங்க தல..,

அகல்விளக்கு said...

நன்றி

**நிலாமதி அக்கா....
**கமலேஷ்
**புலிகேசி
**கருணாகரசு அண்ணா
**ஈரோடுவாசி
**பாலாசி
**தமிழ் உதயம்
**பிரேமாமகள்
**பாலா அண்ணா
**அன்புடன் அருணா
**சங்கர்
**ராம்
**நினைவுகளுடன் நிகே
**ரிஷபன்
**கனிமொழி
**அபுஅஃப்ஸர்
**பேநாமூடி

அனைவருக்கும் நன்றி...

இரசிகை said...

:)

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger