Thursday, February 4, 2010

அவன்….சரிந்த மலைத்தொடர்
அசாதாரண காற்று
தெளிந்த ஓடை
அசையும் நாணல்கள்
அனைத்தும் தாண்டி நடந்துகொண்டிருந்தான் அவன்.

நகரத்து வாசம் முழுமையாய் ஆட்கொண்டிருந்த போதும் விட்டுச் சென்ற சொந்தங்களைக் காண்பது எவ்வளவு சந்தோஷம் என்பது அவன் முகத்தில் தெரிந்தது. உச்சி தாண்டி சூரியன் சுட்டெரித்தாலும் உஷ்ணம் உடலுக்கு தெரியாததை அவன் வியப்பாகவே உணர்ந்தான். ஓங்கி நிற்கும் மரங்கள் இன்ன இன்ன வகையென்று பகுத்துக்கூறிய அவனது கடந்தகால மனது இப்போது அனைத்தும் மறந்ததையெண்ணி வருத்தத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

பனைமரத்து ஓலைக் குடில்கள், மூங்கிலில் செய்த கதவுகள், பச்சிலைகளின் வாசம், ஓடைகளின் சலசலக்கும் சப்தம், மரத்தடி கட்டில், கயிறுகளை திரிக்கும் சிறுவர்கள், பாய் வேயும் பெண்கள் அனைத்தும் அவன் நினைவிற்கு வந்து கொண்டிருந்தது.

காலம் மனிதர்களை எவ்வளவு மாற்றுகிறது. முதன் முதலில் அரசு அறிவித்த பேருந்தின் வருகை. பேருந்தில் சென்ற முதல் பயணம். பள்ளி முடிந்து இரவு வீடு திரும்பும்போது பேருந்தில் போட்ட குட்டித்தூக்கம், பாட்டியின் கதைக்கு தூக்கத்தில் உம் கொட்டியது, ஆனால் இப்போது வேலை செய்வது நகரத்தில்.

இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இப்போது மக்கள் எப்படி இருப்பார்கள்.

அவன் எதிர்பார்த்தது போலவே நிறைய மாற்றங்கள். பள்ளி சென்றுகொண்டிருந்த குழந்தைகள். சைக்கிளில் சென்ற ஆட்டுக்காரர். மேலும் வெளியூர்காரர்களைப் பார்க்கும் மிரட்சிப் பார்வை இப்போது இல்லை. அந்த இடத்தை பொறுத்தவரை இது மிகப்பெரிய முன்னேற்றம்.

விட்டுச்சென்ற பேருந்து நான்கைந்து மைல்கள் தொலைவில் எறும்பைப் போல் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது மலையின் ஒரு பகுதியில் தெளிவாகத்தெரிந்தது. பெருமூச்சை விடுத்து செல்ல ஆரம்பித்தான்.

சித்தனேஸ்வரன் கோவில் வந்து விட்டது. மரத்தடியில் ஜடாமுடியுடன் இரண்டு சாமிகள் வயிற்றை எக்கி உட்கார்ந்திருந்தனர். அவன் கடந்து செல்வதை இறுதிவரை அவர்கள் பார்க்கவே இல்லை.

சாமியார் ஓடை குறுக்கே வந்தது. கணுக்கால் அளவு தண்ணீர் அனைத்து காலநிலையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒடையின் பின்னே குடில்களும், ஆங்காங்கே மனிதர்களும் தலைகாட்ட ஆரம்பித்தனர். பார்த்த மாத்திரத்தில் கட்டிப்பிடித்து வரவேற்ற நண்பனைப் பார்த்து அவனும் உற்சாகம் கொண்டு ஓட ஆரம்பித்தான்.

சுள்ளிகளைக் கொண்டு அடுப்பெரித்துக்கொண்டிருந்த பாட்டி கண்கள் இடுக்கி பார்த்து கண்டு கொண்டாள். ஏடாகூடமாய் ஏதோதோ முணுமுணுத்தவள் ஆசிர்வாரம் செய்துவிட்டு “சீரங்கனை பாத்துட்டு வந்துருங்கப்பா” என்றார்.

சீரங்கன்தான் இரண்டு தலைமுறைகளாய் எல்லோரையும் வழிநடத்தும் தலைவர். அவன் முதன்முதலாய் நகரத்துக் போகப்போகிறான் என்று தெரிந்ததும் ஆளாய் பறந்து தடுக்க முயன்றவர். எப்படியோ அவருக்கும் கடுக்காய் கொடுத்துவிட்டு காணாமல் போனவன்தான் அவன். இப்போது மீண்டும் வந்திருக்கிறான்.

சீரங்கன் குடிலுக்கு வெளியே கொம்புள்ள மான் ஒன்று மரத்தில் கட்டப்பட்டு மிரட்சியோடு பார்த்துக்கொண்டிருந்தது. அருகில் வந்தவனிடம் கோயிலுக்கா என்று கிசுகிசுத்தான். ம்ம் என்று தலையசைத்தான் அவன்.

பார்த்த உடனே வித்தியாசமாய் சிரித்தார் சீரங்கன். போன போக்குல அப்படியே போய்ட்டீங்க… திரும்ப வரமாட்டிங்கன்னுல்லாம் நினைச்சேன். முறுவலித்தார்.

“பலி கொடுக்கப்போறிங்களா”. நிதானமாய் கேட்டான். அவர் முகம் கருத்தது. “சாமி விசயத்துல தலையிடாத” என்றார். “காட்டுலாக்கா ஆளுங்க இதெல்லாம் பண்ணக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கல்ல” சற்று சத்தமாகவே கேட்டான். “படிச்சிட்டீங்கன்னாலே இப்படித்தான்டா, சாமிக்கு கோவம் வந்தா நம்ம குடி இருக்காது. தெரியுமில்ல”.

பேச்சு அதிகமாக அதிகமாக ஒரு கட்டத்தில் கட்டவிழ்த்து விடப்போனவனை பிடித்து தூக்கியெறிந்தார் சீரங்கன். அதற்குள் அடிபொடிகள் அவனை பிடித்து விட்டனர்.

“பலிக்கு பின்னாடி மானும் இருக்காது அது தோலும் இருக்காது. கொண்டுபோய் வித்துடுவாங்க. உங்களுக்கு தெரியுமா”. கத்திக்கொண்டிருந்த அவனை யாரும் கண்டுகொள்வதாய் இல்லை. “துச்சிக் குடிசைக்குள்ள போடுங்க நாளைக்கு பலிக்கு பின்னாடி பேசிக்கலாம்” என்றார் சீரங்கன். பரிவாய் வந்த நண்பனும் “நான்தான் அத பிடிச்சிட்டு வந்தண்டா. ஏன் சாமிக்கு கொடுக்க வேண்டாங்கிற” புரியாமல் கேட்டான்.

மான்களை பலிகொடுத்தால் மறுநாள் அந்த செத்த மான் அங்கு இருக்காது. சாமி கொண்டு போய் விடுமாம் (). சாமி கொண்டு போகாவிட்டால் சனத்துக்கு தீங்கு வருமாம். அவனுக்கு தெரிந்தவரைக்கும் இதுவரை சாமி மானை தவறவிட்டதேயில்லை. காட்டிலாக்காவுக்கு கூட பங்கு இருப்பதாய் அவன் அறிந்திருந்தான்.

இராத்திரி உணவு கொண்டுவந்தவள் வித்தியாசமாகப் பார்த்தாள். துச்சிக்குடிசைக்கு வெளியில் பூட்டு வேறு.

மறுநாள் அதிகாலை

கொட்டாவியுடன் வந்ந சீரங்கன் பலிமானைக்காணாமல் கோபத்துடன் அவனைத் தேடினான். துச்சிக்குடில் திறந்திருப்பதைப் பார்த்து முதுகுத்தண்டு சில்லிட நின்றான்.
காவலை மீறி கட்டுடைத்து காணாமல் போயிருந்தான் அவன்.
“அய்யோ… சாமிக்கு கோவம் வந்திரும்டா” அலறிய சீரங்கன் ஆட்களுடன் ஓடினான் சித்தனேஸ்வரன் கோவிலுக்கு.
அவள் மெலிதாய் புன்னகைத்தாள்.
மலையின் மறுபுறம்…
காடுகளை தழுவிக்கொண்டிருந்த வெள்ளைப்பனியை கிழித்துக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான் அவன்.

17 comments:

Té la mà Maria - Reus said...

very good blog, congratulations
regard from Reus Catalonia
thank you

கனிமொழி said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஜெய்...

Chitra said...

விறுவிறுப்பான கதை. கதை சென்ற விதம், அருமை.

வானம்பாடிகள் said...

அருமை. பர பரன்னு இருக்கு.:)

கவிக்கிழவன் said...

நல்லா எழுதி இருக்குது குடி குடி வரிகள் சிறந்த அர்த்தங்கள்

கும்க்கி said...

அடங்கப்பா....
கட்டலோனியாவுலருந்தெல்லா ரசிகருங்கடா சாமீ....
அவருக்கு மீ த பர்ஸ்ட்ட்டு யாரும் சொல்லித்தரலயாட்டு இருக்கு...

துபாய் ராஜா said...

அழகான கதை.அருமையான கருத்து.
அவன் நல்லவன். வாழ்த்துக்கள் ஜெய்.

Balavasakan said...

அருமையான கதை!!!

க.பாலாசி said...

வார்த்தைப்பிரவாகங்கள் அருமை...ரசித்தேன்...

கடைசியா அந்த மான அவன் தூக்கிட்டு ஓடிட்டானோ??? (ஹி..ஹி...)

முனைவர்.இரா.குணசீலன் said...

சிறு சிறு நிகழ்வுகளையும்
சொல்ல வந்த கருத்தையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் நன்றாகவுள்ளது நண்பரே.

ஈரோடு கதிர் said...

தம்பி.... சூப்பர் ராஜா

புலவன் புலிகேசி said...

அசத்திபுட்டீங்க தல..என்ன சொல்றதுன்னே தெரியல..நல்ல நடையில் நல்ல கதை..

banuprema said...

My mom read it for me, and It sounded great! I missed my village in India! Take care!

பேநா மூடி said...

ரொம்ப நல்லா இருக்கு

அகல்விளக்கு said...

நன்றி....

**Té la mà Maria - Reus
(நெசமாவே புரிஞ்சுதான் சொன்னீங்களா)

**கனிமொழி
**சித்ரா அக்கா
**வானம்பாடிகள்
**யாதவன்
**கும்க்கி (ஹிஹி விடுங்க அண்ணா...)
**ராஜா அண்ணா
**பாலவாசகன்
**பாலாசி அண்ணா
**குணசீலன் அண்ணா
**கதிர் அண்ணா
**புலிகேசி
**பேநா மூடி
** thanks banu prema
(got ur message. Convey my gratitude to your mother)

ஸ்ரீராம். said...

புலி(கேசி) சுட்டி வந்தேன். மானைப் பார்த்தேன். மிரண்ட விழிகளை திறந்து விட்டு அந்த மானை ஓட விட்டு விட்டீர்கள். அள்ளித தந்த பூமி என்று பாட ஆரம்பித்து அந்த மானைப் பாருங்கள் அழகு என்று முடித்து விட்டீர்கள்.

cheena (சீனா) said...

அன்பின் அகல்விளக்கு

பலி கொடுப்பவர்களும் மாறப்போவதில்லை - எதிர்ப்பவர்களும் மாறப்போவதில்லை. எனன் செய்வது

கதை அருமை - நடை இயல்பு - அவளே காரணம் அவன் ஒடூவதற்கு .......

நல்வாழ்த்துகள் அகல்விளக்கு
நட்புடன் சீனா

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger