Tuesday, February 23, 2010

மிச்சமிருக்கும் சிலர்...


வீட்டு வாசலை நோக்கி ஒரு வெற்றுப்பார்வையை வீசினாள். அசாத்தியமான நிசப்தம் வீடெங்கும் தேங்கியிருந்தது. கலங்கிய கண்களை தேய்த்துக் கொண்டிருந்தாள் அவள் அன்னை. 'இப்ப ஏன் கண்ண கசக்குற...?' அப்பாவின் உறக்கம் கலைக்காமல் மெலிதாய் கடிந்தாள் அவள்.

வாட்டுகின்ற வறுமை வீட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் அப்பட்டமாக தெரிந்தது. உழைத்துக்கொண்டிருந்த ஒரு மனிதனும் படுத்து விட்டதால் நொடித்துப் போயிருந்தாள் அவள் அன்னை. என்ன செய்வது, மிச்சம் மீதி இருந்த பணம் அத்தனையும் மருத்துவமனைக்கு கொடுத்தாயிற்று. இப்போது புதிதாக இப்படியொரு பிரச்சனை வேறு...

வேறு வழியில்லை என்று நினைத்தவள் ஆறாவது நாளாக இன்றும் கிளம்ப ஆயத்தமானாள். வாசலில் காத்திருந்த ரப்பர் செருப்பை தூசி தட்டி காலில் மாட்டிக்கொண்டு சைக்கிளை நோக்கி நகர்ந்தாள்.

இன்றோடு அது நடந்து பத்து நாளாகிவிட்டது. வாடகைக்கு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அப்பாவின் அன்றைய விபத்து குடும்ப சூழ்நிலையை இன்னும் இருட்டுக்கு தள்ளிவிட்டிருந்தது.

அவசரமாக சவாரி பிடிக்கச் சென்ற போது, பிடிக்காமல் போன ப்ரேக்கினால் தடுமாறிய அவர் சாலையோர கடையொன்றை இடிக்க, தவறி கீழே விழுந்த அவர் காலின் மீது கனமான தூண் ஒன்று விழ.... அவ்வளவுதான். தூளான காலுக்கு கட்டு ஒன்றைப் போட்டுவிட்டு கட்டிலில் தஞ்சமடைந்து விட்டார். ஏதோவொரு பெயர் அறிந்திராத ஆவணம் இல்லையென்று அந்த ஆட்டோவை அரசாங்கம் அப்போதே தள்ளிக்கொண்டு போக, இப்போது மாட்டிக்கொண்டதோ இவர்கள்தான்.

ஐந்தும் பத்துமாக சேர்த்தது போக, வட்டிக்கு வாங்கி அந்த ஆட்டோவை இரண்டாம் உபயோகமாக வாங்கியிருந்தார் அவள் அப்பா. இப்போது வட்டிக்கடன் கழுத்தை நெறிக்க ஆரம்பித்து விட்டது.

இவளும் துணிந்து முதன் முதலாக வட்டார போக்கவரத்து அலுவலகம் சென்றாள். ஒன்றும் புரியாமால் அலுவலகத்தை சுற்றி சுற்றி வந்து ஒன்றிரண்டு பேரின் உதவியால் வழிமுறைகளை புரிந்து கொண்டபோது மணி பனிரெண்டைத் தாண்டியிருந்தது. மீண்டும் நாளை காலைதான் விண்ணப்பங்கள் தரப்படும்.

கண்காணித்த ஒருவனோ அவளிடம் உதவுவதாக்கூறி நான்கு இலக்க எண்களில் பணம் கேட்க பரிதாபமாய் நொந்து கொண்டாள்.

அவரைப்பாருங்கள், இவரிடம் கேளுங்கள் என்று அடுத்த நாள் முழுவதும் அலைகழிக்க, அரசு அலுவலகங்களின் சூட்சுமங்களை அவள் உணர ஆரம்பித்திருந்தாள். தரகர்களை மட்டும் உடனே கவனித்த அரசு ஊழியர்கள் பாவம் இவளைத்தான் அலைய விட்டு விட்டனர்.

எப்படியோ கால் கடுக்க நின்று கடைசியில் விண்ணப்ப ஒப்புதலை வாங்கிவிட்டாள். இறுதியாக விண்ணப்பம் சரி பார்க்கப்பட்டு சான்றிதழ் கிடைத்து விட்டால் போதுமென்ற நிலையில் விண்ணப்பம் சரிபார்க்க அந்த அதிகாரி கேட்ட லஞ்சத் தொகை தொண்டையை அடைத்தது.

'இருக்கா இல்லையாம்மா....'

எதுவும் சொல்லத்தோன்றாமல் மெளனமாய் நின்றாள் அவள். அந்த நீண்ட மெளனம், அவளின் இயலாமையை இலகுவாய் எடுத்துரைத்தது.

'நான் கிளம்புற நேரமாச்சு, நீங்க எதுவும் கொண்டு வரலின்னா நாளைக்கு கொண்டு வாங்க...' சொல்லிவிட்டு கிளம்பினார் அந்த அலுவலர்.

'ச்சீய்...என்ன உலகமடா இது....' நொந்து கொண்டாள் அவள்... வீட்டில் இதைப்பற்றி சொல்ல எதுவுமில்லை என்று தோன்றியது அவளுக்கு. சொன்னாலும் பணம் இப்போதைக்கு தயார் செய்வது இயலாது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.

நாளை எப்படியாவது அந்த அதிகாரியிடம் தன் நிலையை எடுத்துக் கூறி உதவும்படி கேட்பது என முடிவெடுத்தாள்.

மறுநாள் காலையில் அந்த அதிகாரி தரகர்களை கவனிக்க ஆரம்பிக்க இவள் காத்திருக்க ஆரம்பித்தாள். அலுவலக விதிப்படி, அதிகாரி சரியான நேரத்திற்கு கேண்டின் செல்லும்போது இவளும் இதுதான் சமயம் என்று பின்தொடர்ந்தாள். எப்படியோ அவரிடம் அவள் தன் நிலையை எடுத்துச் சொல்ல அவரின் பக்கத்து மேசை அதிகாரியோ காபியை சூப்பிக்கொண்டே சிரித்தான். 'அதெல்லாம் முடியாதும்மா... நான் கேட்குறது எனக்கு மட்டும்தான், இதுக்கும் மேல சர்ட்டிபிகேட்டு கொடுக்க என் மேலதிகாரி தனியா வாங்குவாரு... உங்க வண்டிய எடுத்துத் தர்ற அதிகாரி அவருக்குன்னு தனியா வாங்குவாரு... எல்லார்கிட்டயும் இதையே சொல்ல முடியுமா உன்னால.... பேசாம ஏதாவது ஏஜண்ட் மூலமா வாங்க... உடனே வாங்கிறலாம்..." ஒரே பதிலை சொன்னார்.

கண்கள் கலங்க ஆரம்பித்தன அவளுக்கு. நீங்கல்லாம் மனுசங்களா எனத்தொடங்கி என்ன என்னவோ சொல்லி வசைபாட வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ஆனாலும் முடியவில்லை. காரணம் எலும்புக்கூடாகிப்போன பழைய பேருந்தின் அருகில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த அந்த வண்டி... "நாளைக்கு வாம்மா பேசிக்கலாம்.." என்ற அதிகாரியிடம் ஒன்றும் பேச முடியாமல் வீடு திரும்பினாள்.

வேறு வழியில்லை என்று நினைத்தவள், இன்றும் அலுவலகம் நோக்கி போய்க்கொண்டிருந்தாள். மீண்டும் அந்த அதிகாரி முன்னே மெளனமாய் நின்றாள்.

'இங்க பாரும்மா நான் கூட கையெழுத்து போட்டுத்தர்றேன். ஆனா என் மேலதிகாரி முடியாது சொன்னா அப்புறம் வருத்தப்படாதீங்க' என்றவாரே அவளின் விண்ணப்பங்களை வாங்கி பார்க்கலானார்.

ஒரு கோபப்பார்வையை அவள் மேல் உதிர்த்துவிட்டு சான்றிதழ் வழங்கும் மேலதிகாரியின் அறைக்குள் சென்றார் அவர். அவசர அவசரமாக தன் பர்ஸ்சை எடுத்து ஒரு 1000 ரூபாயை அந்த விண்ணப்பத்தினுள் வைத்தவர் பவ்யமாக மேலதிகாரியின் மேசையில் வைத்து விட்டு வெளியேவந்தார். 'அவர் சர்டிபிகேட் தந்தா வாங்கிக்குங்க. இல்ல கிளம்புங்க...' என்றவாரே அவளை அடுத்த செக்சனுக்கு விரட்டினார். பக்கத்து மேசையிலிருக்கும் அதிகாரியிடம் 'காசு இல்லாம வந்துட்டாங்க...' என வசைபாடியவாரே வராந்தா நோக்கி நகர்ந்தார். செல்பேசியை எடுத்து போன் செய்தவர் மறுமுனையாளரிடம் கூறினார் 'என் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தங்க சீஸ் வண்டி எடுத்துட்டுப் போக வர்றாங்க... கொடுத்து அனுப்புங்க குமார் சார்... பணம் எதுவும் வாங்க வேண்டாம்.'

எதுவுமறியாமல் மேலதிகாரியின் அறை வெளியே அமர்ந்திருந்தாள் அவள், சான்றிதழ் தரமாட்டாரோ என்ற பயத்தோடு.........

33 comments:

வானம்பாடிகள் said...

வாவ். அருமைய்யா ராஜா:)

க.பாலாசி said...

கதை நல்லாருக்கு ராசா...அந்த அதிகாரி கண்முன்னாடி நிற்கிறார்.....

Chitra said...

'என் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தங்க சீஸ் வண்டி எடுத்துட்டுப் போக வர்றாங்க... கொடுத்து அனுப்புங்க குமார் சார்... பணம் எதுவும் வாங்க வேண்டாம்.'


..........அருமை....... !

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு

கும்க்கி said...

கதைகளை ரிவர்ஸில் படிக்கும் பழக்கம் எனக்கு ஜெய்..

நல்லாருக்கு.

ஆமா லீவ் நாட்கள்ல செல்பேசிய அணைச்சுட்டு...எங்கய்யா போய்ட்டீங்க...?

க.பாலாசி said...

//கும்க்கி said...
கதைகளை ரிவர்ஸில் படிக்கும் பழக்கம் எனக்கு ஜெய்..//

ராசா இதுக்குத்தான் உண்மையை வெளிய சொல்லக்கூடாதுன்னு சொல்றது....

புலவன் புலிகேசி said...

தல...சூப்பரா இருக்கு...அவர்களுக்குள்ளும் கொஞ்சம் ஈரம் இருக்கத்தானே செய்கிறது..

வால்பையன் said...

பொதுவாகவே மனிதர்கள் நல்லவர்கள் தான்!

பிரபஞ்சனின் கதையை படித்தது போன்றொரு அனுபவம் தல!

பிரபாகர் said...

நல்லவர்கள் இன்னமும் ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது. நல்லாருக்கு ராஜா...

பிரபாகர்.

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

கதையின் நடை வெகு அழகாய்!!!

கனிமொழி said...

கதை ரொம்ப நல்லா இருக்கு ஜெய்...
இன்னும் எதிர்பார்கின்றோம்...
:-)

ஈரோடுவாசி said...

கதை சூப்பரா இருக்கு தல......

க.இராமசாமி said...

அருமை. அருமை.

kavya said...

story was touching...Nice

ஸ்ரீ said...

அருமை.

ஸ்ரீராம். said...

இங்கேயும் மனிதர்கள்...இதயம்தான் உள்ளவர்கள்...
அருமை.

பழமைபேசி said...

நேர்த்தியா இருக்கு!

ஈ ரா said...

ரொம்ப இயல்பா நன்றாக இருந்தது... வாழ்த்துக்கள்

பேநா மூடி said...

நல்லா இருக்கு

♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

கதை அருமை . பகிர்வுக்கி நன்றி!

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா இருக்கு. நல்லாருக்கு.

தியாவின் பேனா said...

அருமை

தியாவின் பேனா said...

அருமை

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்குங்க.... சில நேரங்களில்.... அலுவலகத்தில்... கடவுளும் வேலை செய்வார்?!

DREAMER said...

கதை மிகவும் அருமை...

-
DREAMER

மங்குனி அமைச்சர் said...

//அவசர அவசரமாக தன் பர்ஸ்சை எடுத்து ஒரு 1000 ரூபாயை அந்த விண்ணப்பத்தினுள் வைத்தவர் பவ்யமாக மேலதிகாரியின் மேசையில் வைத்து விட்டு வெளியேவந்தார். 'அவர் சர்டிபிகேட் தந்தா வாங்கிக்குங்க. இல்ல கிளம்புங்க...' என்றவாரே அவளை அடுத்த செக்சனுக்கு விரட்டினார். பக்கத்து மேசையிலிருக்கும் அதிகாரியிடம் 'காசு இல்லாம வந்துட்டாங்க...' என வசைபாடியவாரே வராந்தா நோக்கி நகர்ந்தார். செல்பேசியை எடுத்து போன் செய்தவர் மறுமுனையாளரிடம் கூறினார் 'என் சொந்தக்காரப் பொண்ணு ஒருத்தங்க சீஸ் வண்டி எடுத்துட்டுப் போக வர்றாங்க... கொடுத்து அனுப்புங்க குமார் சார்... பணம் எதுவும் வாங்க வேண்டாம்.' //

சூப்பர் சார்

பிரேமா மகள் said...

nice story

Anonymous said...

ஒரு மனிதனோட எதார்த்தம் சூப்பர்ங்க...

அகல்விளக்கு said...

நன்றி...

**வானம்பாடிகள் அண்ணா
**க.பாலாசி அண்ணா
**Chitra அக்கா
**அண்ணாமலையான்
**கும்க்கி அண்ண்ண்ணா... :-)
**புலவன் புலிகேசி
**வால் தல
**பிரபாகர் அண்ணா
**ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
**கனிமொழி
**ஈரோடுவாசி
**க.இராமசாமி
**காவ்யா
**Sri அண்ணா
**ராம்
**பழமைபேசி
**ஈ.ரா.
**பேனாமூடி
**சங்கர்
**விக்னேஷ்வரி அக்கா..
**தியா
**கருணாகரசு அண்ணா
**Dreamer
**மங்குனி அமைச்சர்
**பிரேமாமகள்
**இந்திரா கி. சரவணன்

அனைவருக்கும் நன்றி...

ஜீவன்பென்னி said...

கதை நல்லாயிருக்கு, வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

நன்றி ஜீவன்....

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

இரசிகை said...

nalla manushanga irukkuraanga.....:)

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger