Wednesday, March 10, 2010

எனக்குப் பிடித்த 10 பெண்கள் - தொடர்பதிவு...


என்னையும் ஒரு பதிவராகக்  கருதி தொடர்பதிவு எழுத அழைத்தஇளந்தென்றல்அவர்களுக்கு நன்றி...

தொடர்பதிவின் நிபந்தனைகள்


உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,
வரிசை முக்கியம் இல்லை.,
ஒரே துறையில் பல பெண்மணிகள் நமக்கு பிடித்தவர்களாக இருக்கும்,
இந்த பதிவுக்கு வெவ்வேறு துறையில் பத்து நபர்கள்.

Nidia Williams

இவங்களோட புகைப்படம் எங்கிட்ட இல்லை… அதுதான் ரொம்ப வருத்தமா இருக்கு…
எங்கயோ காட்டுக்குள்ள ஆடு மேய்ச்சிகிட்டு இருந்த ஒரு சின்னப்பையன கையப்புடிச்சு கூட்டிட்டு போய் இதுக்கு பேரு கம்பியூட்டரு… இதுதான் மவுசுன்னு அ, ஆ சொல்லிக்கொடுக்கிற மாதிரி சொல்லிக்கொடுத்தவங்க… திரும்ப ஆஸ்திரேலியா போய்ட்டாங்க… என்னோட பர்ஸ்ட் கம்பியூட்டர் வாத்தியாரம்மா……

Mother Teresa 

இவங்கள மாதிரி திரும்ப இன்னொருத்தர் கிடைப்பாங்களான்னு தெரியல. சேவை செய்வதை மட்டுமே வாழ்க்கையென நினைத்த ஒரு மகோன்னதர்… எத்தனையோ நபர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றிய பெருமையுடையவர். அதை பெருமையென்று எண்ணாத தன்மையே அவரை இன்னும் பெருமைப்படுத்துகிறது…

Helen keller 

தளராத ஒருவர்… இந்த இரண்டு வார்த்தை அறிமுகம் போதும். இவரை நினைக்கும் போதெல்லாம் உடல் சிலிர்ப்பதை உணர முடிகிறது... பத்தொன்பது மாத குழந்தையாக இருந்த போது ஏற்பட்ட காய்ச்சலால் இவரது கண்பார்வையும், கேட்கும் திறனையும் முற்றிலுமாக இழந்தார். ஆனாலும் தளராமல் படித்து பட்டம் பெற்றார்... தன் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்ற மக்களுக்காக வாதாடினார்.

Rosa parks 

உண்மையைச் சொல்லப்போனால் முதற்தீக்குச்சியை உரசியவர் இவர்தான்… அந்த தீ இன்றளவும் நமைத்துப் போகாததுதான் இவரின் வெற்றி… தான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையை  விட்டுத்தர மறுத்த இவரின் செயலும், இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கும் கருப்பின மக்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆரம்பமாக இருந்தது...

Florence Nightingale 

சின்ன வயசில படிச்சேன்… ‘கைவிளக்கேந்திய காரிகை’ அப்படின்னு சொல்லி எங்க தமிழ் வாத்தியாரம்மா பிளேடு போட்டுகிட்டே ஆரம்பிச்சாங்க… ஆனா அவங்க முடிக்கும்போது பிரம்மிப்பா இருந்துச்சு.. இப்படியும் ஒருத்தங்க இருந்தாங்களான்னு… செவிலியர்களின் சேவைக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாதுன்றது ரொம்ப உண்மை... உலகம் முழுவதும் இவரது பிறந்த நாள்தான் செவிலியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.


புரோட்டின் உட்கவருதல் மற்றும் டி-ஜி-எஃப் பீட்டா- கண்டுபிடிப்பிற்கு காரணமான உயிரியலாளர். கேன்சர் பாதிப்பை குறைப்பதற்கும், காயங்கள் மற்றும் எலும்பு முறிவிலிருந்து மீண்டு வருவதற்கும் பயன்படும் அருமருந்தைக் கண்டுபிடித்தவர். இன்று கோடிக்கணக்கான உயிர்கள் விரைவாக காப்பாற்றப்பட காரணமான ஒருவர்…

Irom Sharmila 

இவரைப்பற்றி கேள்விப்பட்ட பின் மனஉறுதிக்கு யாரை குறிப்பிடுவது என்று தெரியவில்லை… மணிப்பூரின் இரும்புப்பெண்மணி… AFSPA சட்டத்தை வடகிழக்கு பிராந்தியங்களிலிருந்து நீக்க வேண்டி போராடிவருகிறார். அவர் விரைவில் வெற்றி பெற வேண்டும்…

Virginia Woolf

கடந்த நூற்றாண்டின் சிறந்த பெண்ணிய கட்டுரைகளை எழுதியவர்… (A Room of One’s Own மற்றும் Three Guineas). இறுதியில் ஓல்ஸ் நதிக்கரையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்… போர் பற்றிய இவரது எழுத்து இன்னும் செவியில் சுற்றிக்கொண்டிருக்கிறது…

Sangamitra

புத்த மத பிக்குனியா வாழ்ந்த சாம்ராட் அசோகருடைய மகள்… இவங்கள ஏன் பிடிச்சிருக்குன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியல… ஆனா ஏதோவொன்னு இவங்ககிட்ட இருந்திருக்கு….

 

இவரது உணர்வப்பூர்வமான, கவிதை ததும்பும் விளம்பரப்படங்கள் நிச்சயம் நம் மனதை பாதிக்கும்… துளியும் விரசமில்லாமல் சில விநாடிகளில் ஒரு குறும்படத்தையே காட்டிவிடும் வல்லமை இவரிடம் இருந்தது… இவரும் ஒரு வலைப்பதிவர்தான். ஆனால் இப்போது இவர் இல்லை… இணையத்தில் இவரது வலைப்பூ மட்டும் மெளனமாக உலவிக்கொண்டிருக்கிறது…

அவ்வளவுதாங்க....
அடுத்து ஒரு ஐந்து பேர கூப்பிடனுமில்ல....

நண்பர் முரளிகுமார் பத்மநாபன்... (எழுதுங்க நண்பா... ஆவலோடிருக்கிறேன்)...

தோழி கனிமொழி (வருங்காலத்தில பெரிய ஆளாகி அந்த பத்து பேர்ல ஒருத்தங்கள வரப்போறாங்க...)

நண்பர் ஈரோடுவாசி (நண்பா... தயவுசெய்து எழுதுகிறீர்களா....)

நண்பர் இரும்புத்திரை அரவிந்த் (தல... யார் அந்த பத்து பேர்...)

நண்பர் சேட்டைக்காரன் (அந்த பத்துப் பேர்ல ஸ்ரேயா கன்பார்ம்...)

29 comments:

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

//உங்களின் சொந்தகாரர்களாக இருக்க கூடாது.,//

இப்படிச் சொல்லிட்டாய்ங்களே!

பழமைபேசி said...

//நண்பர் ஈரோடுவாசி (நண்பா... தயவுசெய்து எழுதுகிறீர்களா....)//

இஃகிஃகி!

Chitra said...

very nice list.

ஜெட்லி said...

Sangamitra.....

நிறைய தெரியாத பெயர்கள்..
தெரிந்து கொண்டேன்...
நன்றி,,

சேட்டைக்காரன் said...

ஆஹா! அழைத்து விட்டால் வராமல் இருப்பேனா? ஆனால், இதில் ஸ்ரேயா வர மாட்டார் அண்ணே! :-))) நன்றி!

ஈரோடு கதிர் said...

பலர் எனக்கு புதியவர்கள்....

Nidia Williams குறித்து விபரமாக எழுதுங்கள்

வெள்ளிநிலா ஷர்புதீன் said...

உலகளாவிய பிரபலங்களை தெரிந்து கொள்ளவதில் மிக ஆவலாக உள்ள எனக்கு யாசின் அஹ்மத் ஒரு புதிய அழகான அறிமுகம். நன்றி! என்னுடைய தொடர்பதிவு இங்கு வரை வந்ததற்கு மகிழ்ச்சி !

http://vellinila.blogspot.com/2010/03/10.html

பிரேமா மகள் said...

சில பேர் பற்றி.. அவங்க எந்த துறையைச் சார்ந்தவங்க என்ற தகவலே இல்லையே? இது இருந்தால் மற்றவர்களும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்..

சசிகுமார் said...

நம்பள தான் யாரும் கூப்பிட மாட்டேங்குறாங்க சரி நமக்கு தெரிஞ்சத சொல்லுவோம்.இதில் அறிவியலுக்காக தன் இன்னுயிரை ஈண்ட கல்பனா சாவ்லா,வீர பெண்மணி ஜான்சிராணி பெயரையும் சேர்த்திருக்கலாம் அக்கா. நல்ல பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

எந்த தீக்குச்சின்னு எழுதியிருந்தா நல்லாயிருந்திருக்கும்...


//பிரேமா மகள் said...
சில பேர் பற்றி.. அவங்க எந்த துறையைச் சார்ந்தவங்க என்ற தகவலே இல்லையே? இது இருந்தால் மற்றவர்களும் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வார்கள்..//

அதே....

D.R.Ashok said...

சங்கமித்ரா :)

யாதவன் said...

good selections.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

ஒவ்வொரு பெண்களை பற்றியும் தனியாக பதிவு எழுதும் படியான தேர்வு..

முரளிகுமார் பத்மநாபன் said...

என்ன ராஜா இது? இவ்வளவு அமர்க்களமாக ஒரு பதிவைபோட்டுவிட்டு தொடர வேறு கூப்பிட்டிருக்கிறீங்கள்...?

நிறைய யோசிக்கனும் போலவே....

banuprema said...
This comment has been removed by the author.
புலவன் புலிகேசி said...

அர்மையான தெரிவுகள் நண்பா...தெரேசாவைப் பிடிக்காமல் யாரும் இருக்க முடியாது.

மாதேவி said...

அறியாத சிலர் பற்றி தெரிந்து கொண்டேன்.நன்றி.

லதானந்த் said...

பிடித்த பத்துப் பெண்களில் ஒருத்தர்கூடத் தமிழர் அல்லரா? மிக நன்று

Sivaji Sankar said...

பரிட்சயமற்ற முகங்களை அறிமுகம் செய்து வைத்தால் நல்லா இருக்கும் தலைவரே..

அறிவன்#11802717200764379909 said...

அண்ணாச்சி,
இந்தியாவுல இருக்குற யாரும் உங்க கண்ணுக்கு,கருத்துக்கு சிக்கலியா?

...

இரசிகை said...

remba nallaayirunthathu.....thambi:)

ithil niraya per yenakku puthusu...

கனிமொழி said...

Done jai... Yezhuthidalam :-)

vidivelli said...

யாரைப் பார்த்தாலும் பெண்ணைப் பற்றித்தானே எழுதிறீங்களே...........
நன்று...........
பிடிச்சிருக்கு.........

அக்பர் said...

உங்கள் தேர்வு அருமை.

அனைவரும் எனக்கும் பிடித்தமானவர்களே.

ஹுஸைனம்மா said...

உங்களின் இந்தப் பதிவிலிருந்து சில விவரங்கள் என்னுடைய இந்தப் பதிவில் வெளியிட்டுள்ளேன், ஆட்சேபிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்!!

மின்னல் said...

அன்னை தெரசா.....
அனைத்து பதிவர்களின் பிடித்த பெண்கள் வரிசையில் உள்ளவர்.இதில் ஆச்சிரியபடுவதுக்கு ஒன்றும் இல்லை

Sangkavi said...

Very Good Selection....

அகல்விளக்கு said...

நன்றி...

** பழமைபேசி
** சித்ரா அக்கா
** ஜெட்லி
** சேட்டைக்காரன்
** கதிர் அண்ணா
** ஷர்புதின்
** பிரேமா மகள்
** சசிகுமார்
** பாலாசி அண்ணா
** அசோக் அண்ணா
** யாதவன்
** திருநாவுக்கரசு பழனிச்சாமி
** நண்பர் முரளி
** புலிகேசி
** மாதேவி
** லதானந்த்
** சிவாஜி சங்கர்
** அறிவன்
** இரசிகை
** கனிமொழி
** விடிவெள்ளி
** அக்பர்
** ஹீசைனம்மா
** மின்னல்
** சங்கவி
** Thank you banuprema

அனைவருக்கும் நன்றி...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger