Friday, March 5, 2010

திருக்கரங்கள்புதுவளாகம் திறக்க ரிப்பன் வெட்டும்
அமைச்சர்...

புதுத்தொழில் சிறக்க குத்துவிளக்கேற்றும்
நடிகை...

அண்டம் செழிக்க ஆசி வழங்கும்
சாமிகள்...

யாரிடமும் காணப்படவில்லை.

சேற்றில் புதுநாற்று நடும் பெண்ணின்
'திருக்கரங்கள்'...


***********************************************************************************

சாலையில் மோதிய வாகனங்கள்
முறைத்துக்கொண்டு நின்றன..

இடித்த இருவரும் இறுமாப்புடன்
சண்டையிட்டனர்...

பார்த்துக்கொண்டிருந்த அனைவரும்
செய்வதறியாது விலகினர்...

யாரும் விளங்கிக்கொள்ளவில்லை...

இடையே பறந்த பட்டாம்பூச்சியையும்,
அதை துரத்தி ஓடிய சிறுமியின் மனநிலையையும்...

33 comments:

சசிகுமார் said...

நல்ல பயனுள்ள பதிவு, தொடர்ந்து மேலும் பல பயனுள்ள தகவல்களை தரவும்

வானம்பாடிகள் said...

பின்னிட்ட ராஜா. ரெண்டும் அருமை!

க.பாலாசி said...

முதல்:
மிக..மிக..மிக...நல்ல கவிதை ராசா....

(ஆமா நீங்க குத்துவௌக்கு ஏத்துற நடிகையோட கைய மட்டுமா பாக்குறீங்க ??? )

இரண்டாவதும் சிறப்பு...

(அடிச்சவங்கிட்ட காசு வாங்குறதுக்குதான ரெடியா இருப்போம்...)

தொடரவும்....

Sivaji Sankar said...

இருக்கரங்களும் நன்று நண்பரே..

D.R.Ashok said...

:)

முரளிகுமார் பத்மநாபன் said...

இரண்டாவது கவிதை என்னவோ செய்கிறது நண்பா, அட்டகாசம்

Chitra said...

சேற்றில் புதுநாற்று நடும் பெண்ணின்
'திருக்கரங்கள்'...

.......... மிகவும் அருமையான கவிதைகள். சூப்பர்.

ஈரோடு கதிர் said...

ஆஹா..

அசத்தல் தம்பி

பிரேமா மகள் said...

பட்டாம் பூச்சியும்.. குட்டிப் பெண்ணும்.. அருமைங்க...

பிரேமா மகள் said...

பட்டாம் பூச்சியும்.. குட்டிப் பெண்ணும்.. அருமைங்க...

அண்ணாமலையான் said...

மிக அருமையான பதிவு.. வாழ்த்துக்கள்...

தேவன் மாயம் said...

சிறுமியின் மனநிலை அருமை!!

திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). said...

ரண்டும் நல்லாருக்கு நண்பா..

கண்ணகி said...

முதல்...யதார்த்தம்...

இரண்டாவது...கவிதைமனசு.....

தம்பி.... said...

superp......

மின்னல் said...

எனக்கு முதல் கவிதை தான் ரொம்ப பிடிச்சுஇருக்கு நண்பரே

jaffer erode said...

ராஜா...

பட்டாம் பூச்சியும்.. குட்டிப் பெண்ணும்..

இதுக்காகவே என் ஓட்டு

கனிமொழி said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ஜெய்...
:-)

keep going.....

ஸ்ரீ said...

அருமை.

ஜெரி ஈசானந்தா. said...

திருக்கரங்கள் செதுக்கி இருக்கிறது

ஸ்ரீராம். said...

இரண்டுமே அருமை..இரண்டாவது அருமையோ அருமை. படமும்..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இரண்டாவது சூப்பர்.. இன்பம் நாளைக்கு வரும் அதற்க்காக இன்றைக்கு போராடுவோம் என்பவர்கள் மத்தியில், இன்பத்தை இன்றே அனுபவிக்கும் குழந்தைகளின் செயலைக் கவனிக்கக் கூட நேரம் இருப்பதில்லை..

எங்கோ போய்க கொண்டிருக்கிறோம்...


நன்றி..

புலவன் புலிகேசி said...

//யாரிடமும் காணப்படவில்லை.

சேற்றில் புதுநாற்று நடும் பெண்ணின்
'திருக்கரங்கள்'...//

நச் தல...

தியாவின் பேனா said...

நல்ல பதிவு

அகல்விளக்கு said...

நன்றி...

** சசிகுமார்...
** பாலா அண்ணா...
** பாலாசி அண்ணா...
** சிவாஜி சங்கர்...
** அசோக்...
** முரளிகுமார்...
** சித்ரா அக்கா...
** கதிர் அண்ணா...
** லாவண்யா...
** அண்ணாமலையான்...
** தேவன் அண்ணா...
** திருஞானசம்பத்...
** கண்ணகி...
** தம்பி...
** மின்னல்...
** ஜாபர் அண்ணா...
** கனிமொழி...
** ஸ்ரீ அண்ணா...
** ஜெரால்டு அண்ணா...
** ஸ்ரீராம்...
** பிரகாஷ்...
** புலவன் புலிகேசி...
** தியா...

அனைவருக்கும் நன்றி...

DREAMER said...

இரண்டு கவிதையும், அருமை. கவிதையைப் போலவே 2 கவிதைக்கும் பொதுவாக புகைப்பட்டமும் (அழகான கரம் பட்டாம்பூச்சியை தாங்கியதுபோல்) அருமை...

-
DREAMER

DREAMER said...

இரண்டு கவிதையும், அருமை. கவிதையைப் போலவே 2 கவிதைக்கும் பொதுவாக புகைப்பட்டமும் (அழகான கரம் பட்டாம்பூச்சியை தாங்கியதுபோல்) அருமை...

-
DREAMER

ரோகிணிசிவா said...

superb , awesome !

அகல்விளக்கு said...

நன்றி ஹரீஷ்...

நன்றிங்க டாக்டர்...

தியாவின் பேனா said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்...

vidivelli said...

அருமை........நல்லாயிருக்குங்க..

புதிய அபிமானி.........
நம்ம பக்கமும் வந்திட்டு போங்களன்!!!!

இரசிகை said...

2-vilakkume prakaasamaa irukku...

neenga yetriyathuthaane...:)

cheena (சீனா) said...

அன்பின் அகல்விளக்கு

அருமை அருமை - கவிதை அருமை - திருக்கரங்களில் சிறந்ததென சேற்றில் நாற்று நடும் கரங்களைக் குறிப்பிட்டது மகிழ்வினைத் தருகிறது

சிறுமி பட்டாம்பூச்சி மனநிலை - வித்தியாசமான சிந்தனை - நடந்து கொண்டிருக்கும் நிக்ழ்வினிகுத் தொடர்பில்லாடஹ் ஒன்றினை நினைத்தது நன்று நன்று

நல்வாழ்த்துகள் ராஜா

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger