Wednesday, April 14, 2010

கடவுளும், நானும்


எத்தனையோ மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேர்ந்தது கோவிலுக்குச் செல்ல வேண்டுமென்ற அம்மாவின் அழைப்பு. தீவிர ஆத்திகனாக இல்லாத போதும் ஆலயங்களுக்குச் செல்வது எனக்கு எப்போதுமே உறுத்திக் கொண்டிருக்கும் நிகழ்வு. அங்கு செல்வதால் மன அமைதி கிடைக்கும் என்பதில் எனக்கு என்றுமே உடன்பாடு இருந்ததில்லை. கோயிலின் திருவிழாக்காலத்தில் மட்டும் உடன் வர அழைப்பதால் நானும் செல்வது வழக்கமாகிவிட்டது. அம்மாவை கோவிலில் விட்டு விட்டு அங்கு இருக்கும் கடைத்தெருக்களில் சுற்றி அப்பளம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது உள்ளே எனக்கான அர்ச்சனை நடந்து கொண்டிருக்கும்.திருவிழா என்றுமே அழகானதுதான். கொளுத்தும் வெயில் காலத்தில் ரோட்டை மறைத்துப் போடப்பட்டிருக்கும் பந்தலில் கீழே, கடந்து செல்லும்போது வீசும் சிலநொடி தென்றலுக்காகவே அவ்வழியில் செல்வதுண்டு. குடும்பம் சகிதமாக கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தருணங்கள் மக்களுக்கு வாய்ப்பது திருவிழாக் காலங்களில்தான்.

ஆனால் நமது பார்வையில் திருவிழா ஒரு வித்தியாசமான ஒன்றுதான். அலுவலகத்தின் அருகிலேயே கோயில் இருப்பதால் செல்லும் வழியில் திருவிழாக்கூட்டத்தின் கலர்களைப் பார்ப்பது காலைப்பணிகளில் ஒன்றாகி விட்டதால் அங்கு மட்டும் வண்டியின் வேகம் குறையும். ஆனால் உடன் வரும் உத்தமர்கள் கோயிலின் முன் வந்ததும் கையை விடுத்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள். அப்போது எதிர்பாராமல் எதிர்ப்படுபவர் மீது இடித்து விட்டால் அவ்வளவுதான். அவர்கள் பக்தியின் வீரியம் வாய் வழி வெளிப்பட்டு விடும்.

மஞ்சள் நீர் ஊற்ற வரிசையில் நிற்கும் போது 'எதற்காகவும் இவ்வளவு நேரம் நின்றதில்லை' என்பதுதான் என் பேச்சாக இருக்கும். முன் பின் நிற்கும் சில பெண்கள் கால் வலியினால் காலை மாற்றி மாற்றி ஒற்றைக்காலில் நிற்கும் போது சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து வாங்கிக் கட்டியுமிருக்கிறேன்.அன்றும் எப்போதும் போல, கட்டாயப்படுத்தி கோவிலினுள் அழைக்காமல் அவர் மட்டும் செல்ல திருவிழாக் கடைத்தெருவில் மெல்ல நுழைந்து சென்றுகொண்டிருந்தேன். அன்று வெயிலின் தாக்கம் மிகுவாய் ஓங்கியிருந்தது. ஆங்காங்கு குளிர்பானக் கடைகளும், பழக்கடைகளும் தென்பட்டாலும் மனது கரும்புச்சாறு அரைக்கும் கடையைத்தான் தேடியது. கரும்புச்சாறு குடிக்கும்போது ஏற்படும் உடலுக்கும் மனதுக்குமான குளிர்ச்சி வேறுவகையான குளிர்பானங்கள் தராது என்பது உண்மைதான். அலுவலகத்திலும் தேநீருக்குப் பதிலாக இதை வாங்கிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. ஒரு தம்ளர் வாங்கிக் குடித்ததும் வெயில் சிறிது நேரம் கண்களுக்கு இதமாகத் தெரிந்தது.

வீட்டிற்கு வாங்கிச்செல்வதற்காக தீர்ந்து போன தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துவிட்டு காத்திருந்தேன். மெதுவாய் கையை பிடித்து அண்ணா... அண்ணா... என்று ஒரு சிறுமி இழுத்துக் கொண்டிருந்தாள். முற்றிலுமாக பழுப்பேறிய தலைமுடியுடன், வியர்வையில் நனைந்திருந்தாள். ஒருவிதமான கரகரத்த குரலுடன் அவள் அழைத்த தொனியே மனதைக் குடைந்தெடுத்தது. கையிருக்கும் பத்தையைா இருபதையோ திணித்து விட்டு சென்றிருக்கலாம். ஏதோவொன்று தோன்ற கையில் வாங்கிய கரும்புச்சாற்றை அவளிடம் தந்து விட்டு நகர்ந்தேன்.

கோவிலுனுள்ளே சென்ற அம்மா திரும்பிவர, அவர்களுடன் கடைத்தெருவில் சுற்ற ஆரம்பிக்கும்வரை நினைவில் அகலாமலிருந்தது அந்த சிறுமியின் முகம். சிறுவனாய் நான் அடம்பிடித்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கிய கடைத்தெருவில் இன்று அவள் கடவுள் உருவம் பொறித்த கழுத்தணிகளை வாங்கிக் கொண்டிருந்தாள். எனக்கும் ஒன்று தர மெலிதாய் சிரித்து அணிந்து கொண்டேன்.

வீட்டிற்குச் செல்ல வண்டியை கிளப்பிய சமயம், சாலையோர சுற்றுச் சுவரின் நிழலில் அமர்ந்திருந்தாள் அச்சிறுமி. அவளைவிட வயதில் சிறிய குழந்தை ஒன்றிற்கு கரும்புச்சாற்றை ஊட்டிக்கொண்டிருந்தாள். குடிக்கும் போது, வெயிலில் கருத்த அக்குழந்தையின் கழுத்து வழி வழிந்து கொண்டிருந்தது கரும்புச்சாறு. 

ஏனோ மனது கனத்தது. இல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".
41 comments:

Chitra said...

ஏனோ மனது கனத்தது. இல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".

...... மனதை பிசைய வைத்து விட்டீர்கள்........ கடவுள், எங்கும் இருக்கிறார் - ஆனால், நாம் எதிர் பார்க்கும் - பில்ட்-அப் கொடுக்கும் உருவத்தில் இல்லை.
good one!

VELU.G said...

//திருவிழாக்கூட்டத்தின் கலர்களைப் பார்ப்பது காலைப்பணிகளில் ஒன்றாகி விட்டதால் அங்கு மட்டும் வண்டியின் வேகம் குறையும். ஆனால் உடன் வரும் உத்தமர்கள் கோயிலின் முன் வந்ததும் கையை விடுத்து கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள்.//

இரண்டுமே வேறு வேறு நல்ல பணிகள்.
ஒரே இடத்தில் நிகழ்வதால் இரண்டையும் கம்பேர் செய்து குழப்பிக்கொள்ளக்கூடாது.

துபாய் ராஜா said...

கடைசி வரிகளில் கலங்க வைத்தது பதிவு.அன்பே சிவம். கடவுளை கண்டுவிட்டாய் தம்பி.

தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரை விசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ரோகிணிசிவா said...

karumbu saaru indru inithirukkum kooduthalaai ......

JKR said...

சக வலைபதிவர்களுக்கும் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் எமது இணையதளம் சார்பாக இனிய புது வருட வாழ்த்துக்கள் MULLAIMUKAAM.BLOGSPOT.COM

ஜீவன்பென்னி said...

அன்பே சிவம் வசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகின்றது.

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஈரோடு கதிர் said...

மனது கனத்துப்போச்சு ராஜா

சேட்டைக்காரன் said...

மனசு உங்களுக்கு மட்டும் கனக்கவில்லை; வாசித்து முடித்தபோது எங்களுக்கும் தான்.

பிரபாகர் said...

ராஜா!

கதிர் சொன்னது தான் நானும்!

பிரபாகர்...

அண்ணாச்சி said...

அருமையான பதிவு,
பகிர்வுக்கு நன்றி

க.பாலாசி said...

//ஏதோவொன்று தோன்ற கையில் வாங்கிய கரும்புச்சாற்றை அவளிடம் தந்து விட்டு நகர்ந்தேன். //

என்னமோ போங்க...பின்னிட்டீங்க... எழுத்துல தெரியுது அச்சிறுமியின் ஏக்கம்... முடிக்கும்பொழுது தெரியுது அவளும் கடவுள்தானென்று....

நேத்து அவ்வழியா வரும்போது கரும்புச்சாறு பார்த்தேன்.. ஆனா குடிக்கணும்னு தோணல... ப்ப்ப்ச்ச்ச்ச்.....

ஜெய் said...

/// அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்" ///

அன்பே சிவம் படத்துல ரெண்டு மணி நேரத்துல சொன்னத, ரெண்டே நிமிஷத்துல சொல்லிட்டீங்க..

தாராபுரத்தான் said...

கடவுளும் நானும்......இல்லை..நானும் கடவுளும்..தலைப்பை மாத்து ராசா.

கண்ணகி said...

கடவுள் இப்படித்தான் வெளிப்படுவார்..

புலவன் புலிகேசி said...

சபாஷ் ராஜா...இது தான் கடவுள்..மற்றவை வெறும் கல்...

grs said...

மனிதம் இருக்கும் வரை கடவுள் வாழ்ந்து கொண்டே இருப்பார்

திருநாவுக்கரசு பழனிசாமி said...

நெகிழ்ச்சியான பதிவு மற்றும் புகைப்படங்கள்...அருமை

தாமோதர் சந்துரு said...

நல்லதொரு பதிவு.

//அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".\\

உண்மைதான்.

தாமோதர் சந்துரு said...

நல்லதொரு பதிவு.

//அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".\\

உண்மைதான்.

பிரேமா மகள் said...

திருவண்ணாமலை அருணாசல ஈஸ்வரர் கோயிலில் தங்க தேரை ஒன்றரை கோடி செலவு பண்ணி புதுப்பிக்கறாங்களாம்.. எத்தனை பெரு தெருக் கோடியில் படுக்க இடம் இல்லாம இருக்காங்க மக்கா...

என்னிக்கி இந்த உலகம் திருந்த போகுது?

முனைவர்.இரா.குணசீலன் said...

ஏனோ மனது கனத்தது. இல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".


அருமை நண்பா..
உண்மைதான்!!

ILLUMINATI said...

wow.....
just wow....

கனிமொழி said...

TRUTH....

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

/////திருவிழா என்றுமே அழகானதுதான். கொளுத்தும் வெயில் காலத்தில் ரோட்டை மறைத்துப் போடப்பட்டிருக்கும் பந்தலில் கீழே, கடந்து செல்லும்போது வீசும் சிலநொடி தென்றலுக்காகவே அவ்வழியில் செல்வதுண்டு. குடும்பம் சகிதமாக கடைத்தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கும் தருணங்கள் மக்களுக்கு வாய்ப்பது திருவிழாக் காலங்களில்தான். ///////


மிகவும் ரசித்து எழுதி இருக்கீங்க ! ஆனால் பதிவின் தலைப்புதான் எங்கோ இடிக்கிறது சற்று மாற்றுங்க .

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

ஸ்ரீராம். said...

அழகு.
கடவுளை கோவிலில்தான் பார்க்க வேண்டுமென்பதில்லை. நாம் விரும்பும் வடிவங்கள் அனைத்திலும் கடவுள் உண்டு.அன்பு, அழகு, இயற்கை, ஏழையின் சிரிப்பு, கருணை,....

கிராமத்தான் said...

கல்லிலோ உருவத்திலோ கடவுள் இல்லை..மனித நேயம்தான் உண்மையான கடவுள்

sweet said...

நீ இப்படி மொக்கை போட்டு மனித நேயம் என்று சொல்லி விடுவதால் மட்டும் உன் அம்மா கோவிலுக்கு போவதை நிறுத்த போறாங்களா? மாத்தி யோசி தம்பி

நமக்கும் மேல சக்தி இருக்கு என்று உனக்கு புரியாத வரை நீ இப்படி மொக்கை போட வேண்டியது தான்...

இப்படிக்கு அடுத்தவர்களின் நம்பிக்கைகளை காயப்படுத்தாத சராசரி பெண்

மதுமிதா.

ப்ரின்ஸ் said...

உங்கள் கண்கள் திறக்கபட்டிருக்கின்றன. இனி அந்த கண்கள் தினமும் கடவுளை காணும் .... வாழ்த்துக்கள்

Anonymous said...

அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்"

நல்லா சொல்லியிருக்கீங்க அகல் வாழ்த்துக்கள்

அப்புறம் உங்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ்ல இருந்து கமெண்ட் போட்டா புடிக்காதாமே உண்மையா?

:D

-நந்தினி

Srimathi said...

வித்தியாசமான நடை நல்லாருக்கு

Virutcham said...

அந்த கரும்புச் சாரை கொடுத்த நீங்க அந்த நேரத்திலே அந்த சிறுமிக்கு கடவுள். அந்த கடவுளை(உங்களை) அங்கே தோன்ற செய்த உங்க அம்மா கடவுள். கரும்புச் சாறு மொத்தத்தையும் தானே குடிக்காமல் தன தம்பிக்கோ தங்கைக்கோ கொடுத்த அந்த சிறுமி கடவுள்.
அஹம் பிரம்மாஸ்மி, தத்வ மசி.

கோவில் ஒன்று இல்லை என்றால் இந்த ஒருங்கிணைப்பு கிடைக்காமல் போகலாம். அந்த இடத்திலும் shopping complex, multi storeyed concrete buiding உருவாகி பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே உரியதாக ஆகலாம்.

நீங்கள் பார்த்த திருவிழாவில் சிறு சிறு வியாபாரங்கள் செய்து பிழைப்பவர்களும் அந்த சிறுமியின் கையேந்தும் நிலைக்கு போகலாம்.

கடவுள் மனிதனின் பண்ட மாற்றலில் வெளிப் படுவார்.

http://www.virutcham.com

அண்ணாமலை..!! said...

அருமையான.. பதிவு!

Anonymous said...

//ஏனோ மனது கனத்தது. இல்லை இல்லை என்று நினைத்திருந்தேன். அம்மழலையின் தாய்மையில் தெரிந்தது "இல்லையெனப்படும் கடவுள்".//

அந்த அன்புக்கு பேர் தானே கடவுள்...கோயிலுக்குள் போகவில்லை என்றாலும் உங்களுக்காக வெளியே வந்திருக்கிறார் கடவுள் உங்கள் நேயத்தை சோதிக்க....

இளமுருகன் said...

கனமான பதிவு.அன்பே சிவம்

இளமுருகன்
நைஜீரியா

கண்மணி/kanmani said...

இதைப் புரிந்து கொண்டால் மதச் சண்டைகளே வராது.
அன்பே கடவுள்.அது சிவனோ யேசுவோ.....அல்லாவோ

அகல்விளக்கு said...

நன்றி...

**சித்ரா அக்கா
**வேலு அண்ணா (வாழ்த்துக்கள் அண்ணா.. :))
**ராஜா அண்ணா
**ரோகிணி அக்கா
**JKR
**ஜீவன்பென்னி
**கதிர் அண்ணா
**சேட்டைக்காரன்
**பிரபாகர் அண்ணா
**அண்ணாச்சி
**பாலாசி அண்ணா
**ஜெய்
**தாராபுரத்தான்
**கண்ணகி அக்கா
**புலிகேசி
**GRS
**திருநாவுக்கரசு பழனிச்சாமி
**தாமோதர் சந்துரு
**பிரேமாமகள் அக்கா
**Dr.குணசீலன் அண்ணா
**ILLUMINATI
**கனிமொழி
**பனித்துளி சங்கர்
**ஸ்ரீராம்
**கிராமத்தான்
**மதுமிதா அக்க்கா...
(நான் அடுத்தவர் எண்ணங்களை காயப்படுத்தவில்லை அக்கா... எனது எண்ணவோட்டத்தைதான் கூறினேன்... நீங்கள் கூறும் மொக்கை என்பதன் அர்த்தத்தை எனக்கு மெயில் செய்யுங்கள். :))

** பிரின்ஸ்
** நந்தினி (ஏன் இந்த கொலவெறி... :))
** Srimathi
** விருட்சம்
** அண்ணாமலை
** தமிழரசி அக்கா
** இளமுருகன்
** கண்மணி அக்கா

அனைவருக்கும் நன்றி...

சசிகுமார் said...

நண்பரே உண்மை உண்மை உண்மை அனைத்தும் உண்மையே

அகல்விளக்கு said...

நன்றி சசி...

கவிதன் said...

அன்புக்கு இணை வேறேது? பகிர்ந்தளிக்கும் எண்ணம் அந்தச்சிறு குழந்தைக்கு இருக்கிறது போல் நிறைய பெரிய மனிதர்களுக்கு இல்லை....

தரமான பதிவு .... பாராட்டுக்கள் ராஜா!

அகல்விளக்கு said...

நன்றி

கவிதன்...

cheena (சீனா) said...

அன்பின் அகல்விளக்கு

தாய்மையின் வடிவில் கடவுள் வெளிப்படுகிறார். இன்னும் பலப்பல வடிவங்களில் காட்சி தருபவரே கடவுள்.

நல்ல சிந்தனை - கதை - நன்று நன்று
நல்வாழ்த்துகள் அகல்விள்ககு
நட்புடன் சீனா

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger