Thursday, April 22, 2010

தேவதை விழிக்கும் தருணங்கள்



கொஞ்சமாய் உறக்கம் கலைக்கும்
பிஞ்சுக் கால்களின் ஸ்பரிசத்தில்,
என் கனவுகளை அலங்கரிக்கிறாள்
அந்த தேவதை...

புகைப்படம் எடுக்கக் கருவியெடுத்தால்
சிரித்து முன்நிற்கும் சிறுமியிடமும்,
நாணி ஒதுங்கும் சிறுமியிடத்தும்
ஒருசேரத் தோன்றி நிற்கிறாள்...

மணிகள் விற்கும் சிறுமியிடத்தில்
தோன்ற மறுத்தவள், மணிகளை வாங்கியதும்
வெள்ளைப் புன்னகையாய் தோன்றி நிறைகிறாள்...

எங்கோ ஒருநாள் எதிர்பாரா நேரத்தில்
வணக்கம் சொல்லி வரவேற்றாள்
இரட்டை உருவாய், மழலை சிரிப்பாய்...




தேவதை விழிக்கும் தருணங்கள்... 

26 comments:

VELU.G said...

//கொஞ்சமாய் உறக்கம் கலைக்கும்
பிஞ்சுக் கால்களின் ஸ்பரிசத்தில்,
என் கனவுகளை அலங்கரிக்கிறாள்
அந்த தேவதை...
//

நல்ல நடை

கவிதை அழகு

இசை said...

:)

சேட்டைக்காரன் said...

படத்துக்காக கவிதையா, கவிதைக்காகப் படங்களா? சிறப்பான பதிவு!!

பிரேமா மகள் said...

ராசா... சூப்பரு..... தேடிப் புடிச்சிருக்கீங்க.. வார்த்தைகளை...

ஈரோடு கதிர் said...

அழகு...

படங்கள் கூடுதல் அழகு

கவிதன் said...

அருமை!!!

ரோகிணிசிவா said...

//மணிகள் விற்கும் சிறுமியிடத்தில்
தோன்ற மறுத்தவள், மணிகளை வாங்கியதும்
வெள்ளைப் புன்னகையாய் தோன்றி நிறைகிறாள்...//-அழகு !!!

பிரபாகர் said...

ராஜா,

புகைப்படங்களோடு கூடுதல் அழகு உங்களின் அருமையான கவிதை!

பிரபாகர்.

வானம்பாடிகள் said...
This comment has been removed by the author.
Sangkavi said...

//புகைப்படம் எடுக்கக் கருவியெடுத்தால்
சிரித்து முன்நிற்கும் சிறுமியிடமும்,
நாணி ஒதுங்கும் சிறுமியிடத்தும்
ஒருசேரத் தோன்றி நிற்கிறாள்...//

அழமான, அழகான வரிகள்....

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு ராஜா.:)

க.பாலாசி said...

ராசா... அசத்துறீங்க... கொஞ்சநேரத்துல அசந்துட்டேன்... படமும் மிகச்சிறந்த தேர்வு.... வார்த்தைகள் மனசுல நிக்குதுங்க.....

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

நல்லா இருந்ததுங்க, உண்மையாவே!!

கனிமொழி said...

Nice jai... ;)

Chitra said...

கவிதையும், புகைப்படங்களும் அருமையாக இருக்குங்க. பாராட்டுக்கள்!

ஹேமா said...

படத்துக்காக எழுதியதாய் நினைக்கிறேன்.
அருமை.படங்களும் கூட.

Ananthi said...

அருமையா இருக்கு..!!

கண்ணகி said...

எங்கெங்கும் அழகைத்தேடும் மனசு...

கண்ணகி said...

எங்கெங்கும் அழகைத்தேடும் மனசு...

முனைவர்.இரா.குணசீலன் said...

கவிதை அருமையாகவுள்ளது நண்பா..

அண்ணாமலை..!! said...

ரசித்தேன் கவிதையை!

Priya said...

வாவ், அழகான கவிதை! படங்களும் கொள்ளை அழகு!

D.R.Ashok said...

:)

Balavasakan said...

ஆமாம் நன்றாக இருந்தது அகல் விளக்கு..!!

தமிழரசி said...

தேவதைகள் சிந்திய உயிர்பூக்கள் அழகிய புன்னகையின் கோர்வையாய் கவிதை வரிகள்...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பதிவர்கள் கவனத்திற்கு - (எல் நீனோ EL NINO) !!! http://wwwrasigancom.blogspot.com/2010/04/16-el-nino.html

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger