Tuesday, May 4, 2010

உதிரும் இலைகள்...உதிரும் இலைகளினிடையே ஊடுருவி அவற்றை அழகாய் கலைத்து விளையாடிக் கொண்டிருக்கும் வாடைக்காற்றின் இறுதி உலாக்காலம் இரசனையற்ற மனிதர்களையும் நிறுத்திப் பார்க்க வைத்துவிடும். சுவாசம் கூட தானாகவே காற்றை அதீதமாய் உள்ளிழுத்து ஆனந்தப்பட வைக்கும். தேன்சிட்டுக் குருவிகளும், வானம்பாடிப் பறவைகளும் தொடங்கி கதிர்க்குருவிகளும், கருங்காடைகளும் ஆனந்த நர்த்தனமிடும் காலம். கோடைக்கும் குளிருக்கும் இடையே மரங்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காலம், இலையுதிர்க்காலம்.

வாடைக் காற்றின் மெல்லிய உஷ்ணம் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு குளிர்காற்றாக மாற்றும் வித்தை யாரிடம் அகப்பட்டிருக்கும், மரங்களிடமா, உதிரும் இலைகளிடமா?? யார் அறிவார்?..... பச்சை, இளம்பச்சையாகும். அது மேலும் கருத்து பழுப்பாகும். மரங்கள் இலைகளை விடுவிக்கும்... பாதையில் விழும் இலைகளை காற்று கலைத்துப்போடும்...

மீண்டும்... மீண்டும்...

இன்று மலைக்காடுகள் மயக்கும் வனப்பைப் பெறும். பறவைகள் ஒலி புன்னகையை சிதற வைக்கும். மாலைகள் மனதை சாந்தப்படுத்தும். 
நாளை மீண்டும்... மறுநாள் மீண்டும்...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... யார் சொன்னது இங்கு இலையுதிர்க் காலம் இல்லையென்று... மரங்களும் மனிதமும் இருக்கட்டும். இருந்தால் நாமும் உணர்வோம் மரங்களின் மொழியை...

மரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா...? வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...?

இல்லை... இல்லவே இல்லை... அவற்றின் பிரேதங்களை விற்பதில் குறியாக உள்ளனர்...

திரளும் விழிநீரை மறைத்துக் கேட்டாள் என் தோழி... "உயிர்களைக் கொல்வது பாவமில்லையா...??"

21 comments:

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////மரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா...? வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...? ///////////////

அப்படி நாம் உணர்ந்திருந்தால் இன்று இயற்கையின் முகவரி தொலைந்திருக்காது . மிகவும் அவசியமான பதிவு . சிந்திக்க தூண்டியது . பகிர்வுக்கு நன்றி

ரோகிணிசிவா said...

//வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...? இல்லை... இல்லவே இல்லை... அவற்றின் பிரேதங்களை விற்பதில் குறியாக உள்ளனர்...//

superb akhal,
nalla elutheerkeenga,inimelavathu namma konjam care edukanum pasumaiyai kaapatra,
avsiyamana,akaraiyaana idugai !

க.பாலாசி said...

//மரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா...? வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...? //

கூனச்செய்யும் வார்த்தைக் கட்டமைப்புகள்...

உணரவைக்கும் ஒத்திசையில் உங்களுக்கும் எனக்கும்கூட பங்கிருக்கிறது.

மனிதத்திற்கும் மரங்களுக்குமான பிணைப்பை உணர்த்திய விதம் அழகு...

வானம்பாடிகள் said...

/ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... யார் சொன்னது இங்கு இலையுதிர்க் காலம் இல்லையென்று... மரங்களும் மனிதமும் இருக்கட்டும். இருந்தால் நாமும் உணர்வோம் மரங்களின் மொழியை... /

poetic.

Chitra said...

கவித்துவமாக கருத்துக்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

D.R.Ashok said...

:(

kk said...

இன்னாமா! உள்குத்தா .

இப்ப மானாட்டுக்கு வெட்ற மரத்தப் பத்திதான சொல்ற
எதிர்ப்புனா அது வெளிப்படியா இருக்கனும் தலீவா

அது வுட்டுப்போட்டு மொழி வளக்குறாங்கன்னு கலர் போட்டு கூவக்கூடாது

ஸ்ரீராம். said...

நல்ல கருத்தை நயமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்...

ஈரோடு கதிர் said...

கனமான மனதை கவித்தனமாக வடிக்கும் வல்லமை

சேட்டைக்காரன் said...

இதயத்தின் அடித்தளத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பிய வார்த்தைப் பிரவாகம்!

சே.குமார் said...

முதல் முறை உங்கள் தளம் வந்தேன். அருமையான பதிவு.
மரங்களை வெட்டாமல் இருக்கும் மனநிலை நமக்கிருந்தால் இயற்கை தொலைந்திருக்காது.

அரசியல் கூட்டத்திற்காக கூட்டமாய் மரங்களை வெட்டும் அரசியல்வாதிகள் நம் நாட்டில்தானே இருக்கிறார்கள்.

கமலேஷ் said...

விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு பதிவு....உங்களின் சமூக அக்கறையுள்ள பதிவிற்கு என் தலை தாழ்ந்த வணக்கங்கள், மற்றும் வாழ்த்துக்கள்...

புலவன் புலிகேசி said...

//வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...?
//

நச் தல..எல்லோரும் உணரும் நாள் வரும்..விழிப்புணர்வு பதிவுக்கு மிக்க நன்றி..

ஆரூரன் விசுவநாதன் said...

//வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...? //

well done raja

பிரேமா மகள் said...

திரளும் விழிநீரை மறைத்துக் கேட்டாள் என் தோழி... "உயிர்களைக் கொல்வது பாவமில்லையா...??"


மரங்களை விட‌
மனிதர்கள் உயர்ந்தவர்களா?
இல்லை..
மரங்கள் இறந்த பிறகும்
பல நாட்கள்
பல வருடங்கள்
வைத்திருக்க முடியும்.
மனிதர்களை??????????????


சிறுவயதில்.. என் பள்ளி.. தகவல் பலகையில் படித்தது...

இப்போது நியாபகத்திற்குவருகிறது..

கனிமொழி said...

சொல்லவந்ததை கவித்துவமாக, அழகாக, சொல்லி இருக்கீங்க, ஜெய்...

thenammailakshmanan said...

இடுகை அருமை அகல்விளக்கு...

தேன்சிட்டுக் குருவிகளும், வானம்பாடிப் பறவைகளும் தொடங்கி கதிர்க்குருவிகளும்//

மூணு ப்ளாகர்ஸை பறவை ஆக்கிட்டீங்க.. நன்றி

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//மரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா...? வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...? //

உணரும் காலம் வந்து கொண்டே இருக்கிறது..

நல்லதொரு பதிவு.. நன்றி..

அண்ணாமலை..!! said...

சமுதாயத்திற்குத் தேவையான பதிவுதான் நண்பரே!

அகல்விளக்கு said...

நன்றி...

**பனித்துளி சங்கர்
**ரோகிணி அக்கா
**பாலாசி அண்ணா
**பாலா சார்
**சித்ரா அக்கா
**அசோக் அண்ணா
**கேகே (நீங்களும் வெளிப்படையாகவே கமெண்ட் போட்டிருக்கலாமே... அனானியாக ஏன்?? அதுதான் காரணம் நண்பரே)
**Sriram
**கதிர் அண்ணா
**சேட்டைக்காரன்
**சே.குமார்
**கமலேஷ்
**புலிகேசி
**ஆருரன் அண்ணா
**பிரேமா அக்கா
**கனிமொழி
**தேனம்மை அக்கா
**பிரகாஷ்
**அண்ணாமலை

அனைவருக்கும் நன்றி...

cheena (சீனா) said...

அன்பின் அகல்விளக்கு
இலைய்திர் காலம் பற்றிய வர்ணனை அருமை அருமை

இறுதி வரிகள் நச்சென்று இருக்கின்றன

நல்வாழ்த்துகள் அகல் விளக்கு
நட்புடன் சீனா

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger