Wednesday, May 12, 2010

கொடுத்த பல்பும், வாங்கிய பல்பும்...

வழக்கம்போல நேத்தும் பத்து மணி பரிட்சைக்கு ஒன்பதரை மணிக்கு கிளம்பினேன். எப்பவுமே ஒரு பக்கம் வறண்டு போய் கிடக்குற பெட்ரோல் டேங்க்க ஓப்பன் பண்ணி ஒன்றக்கண்ணால உள்ள ஒரு லுக்கு விட்டு எங்காவது பெட்ரோல் தென்படுதான்னு பாத்தேன். ஒரு ஓரமா காய்ஞ்சு போன குட்டை மாதிரி கொஞ்சூண்டு இருந்துச்சு. இது போதுண்டா போய்ட்டு திரும்பி வந்துறலாம்னு முடிவு பண்ணி பைக்க ஸ்டார்ட் பண்ணினேன்.

வீட்ல இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து பத்தடி கூட போகல அதுக்குள்ள பாத்தா கொஞ்சம் தூரத்துல நாலஞ்சு மாம்சுங்க கூட்டமா நின்னுகிட்டு இருந்தாங்க. அவ்வளவுதாண்டா மாட்டினடா ராசான்னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டு கொஞ்சம் வண்டிய ஸ்லோ பண்ணினேன். என்னதான் ரூல்ச மணிமணியா பின்பற்றினாலும் லைசன்ஸ் வாங்காதது பெரிய தப்புத்தான். ஒரு வருசமா யார் கையிலயும் மாட்டாதவன்ற பேரு பத்து செகண்ட்ல போகப்போகுதேன்னு நினைச்சுகிட்டே அவங்கள நெருங்கினேன். எதிர்பார்த்தா மாதிரியே ஒருத்தர் நடுவுல வந்து வண்டிய நிப்பாட்டச் சொல்லி கையக் காட்டினார். கொஞ்சம் அசால்டா வண்டிய ஓரங்கட்டினவுடனே சின்ன மீச ஒருத்தர் சொன்னார். 

"தம்பி என்னய ரயில்வே ஸ்டேஷன்கிட்ட ட்ராப் பண்ணிடு" ன்னார்.. அடக்கிரகமே இதுக்குப்போயா கழிஞ்சோம். விடு விடு வெளியக் காட்டாதன்னு உள்ளுக்குள்ள சொல்லிட்டு சரிங்க சார்னு மண்டைய ஆட்டினேன். நல்லவேள வேற எதுக்காவது நிப்பாட்டி அத எடு இத எடுன்னு கேட்டிருந்தாங்கன்னா இன்னிக்கு எக்ஸாமு கோவிந்தா.. கோகோவிந்தா தான்.

அவர ஏத்திகிட்டு கொல்லம்பாளையம் தாண்டி போகும்போதுதான் பாத்தேன். ரயில்வே மேம்பாலம் கிட்ட இன்னோரு குரூப் மாம்சுங்க அந்த வழில வர்ற எல்லா பைக்கையும் ஓரம் கட்டிட்டு இருந்தாங்க. இது என்னடா சோதனயாப்போச்சு நினைச்சப்ப பின்னாடி உட்காந்திருந்த மாம்சு அவங்கள பாத்து அசால்டா கை ஆட்டினார். அவங்களும் கையாட்டிட்டு என்னய விட்டுட்டாங்க. தப்பிச்சிட்டடா மவனேன்னு ஆக்சிலேட்டர கொஞ்சம் அதிகமாவே முறுக்கி சர்ர்ன்னு எஸ்கேப்...

ரயில்வே ஸ்டேஷன்ல அவர இறக்கி விட்டுட்டு ரொம்ப "நன்றிங்க சார்"னு சொன்னேன். "நீயேம்பா சொல்ற. அத நான்தான சொல்லோணும்..." ன்னாரு அவரு. சிரிச்சிகிட்டே நான் வர்றேன் சார்னு கழண்டு வந்துட்டேன். யோசிச்சுப் பாத்தா உண்மையாவே யாரு யாருக்கு உதவி பண்ணிணா...

***********************************************************************************

மொத்த வயசுப்பசங்களும் ஜொள்ளு விட்டுட்டு நிக்கிற இடம் அது. அந்த இடத்தை தெரியாத காலேஜ் பசங்க ஈரோட்ல நிச்சயம் யாரும் இல்லைன்னு சொல்லலாம். ஏன்னா அங்க இருக்குறது பாப்புலரான ஒரு லேடிஸ் காலேஜ். என்னோட எக்ஸாம் சென்டர் இப்போ அந்த காலேஜ்தான். முதன்முதலா அந்த காலேஜிக்கு உள்ளாற போகப் போறேன். ஒரு வாரம் அங்கதான் பரிட்சை எழுதப்போறேன். நினைக்கும் போதே புல்லரிச்சுச்சு. அவ்ளோ ஆர்வம் எனக்கு... எக்ஸாம் எழுதுறதுல.

கூடப்படிக்கிற ஒரு பத்து பசங்களையும் சேத்துகிட்டு எந்த புளோர்ல நமக்கு எக்ஸாமுன்னு கண்டுபிடிக்கவே கால் மணிநேரம் ஆயிடுச்சு. எங்களோட எக்ஸாம் ஹால் நாலாவது புளோர்ல. ஒவ்வொரு படியா மேல ஏறிப் போறதுக்குள்ள நாக்கு வறண்டு நுரை தள்ளிடுச்சு. மேல போன உடனே முதல் வேலையா ஒரு லிட்டர் தண்ணிய காலி பண்ணினேன்.

அப்புறம் வழக்கம் போல தெரிஞ்சதுக்கு பதில் தெரியாததுக்கு கதைன்னு எழுதிட்டு இருக்கும்போதுதான் அது நடந்தது. வெளிய குடிச்ச ஒரு லிட்டர் தண்ணியும் கொஞ்சம் கொஞ்சமா உள்ளார இறங்கி அடி வயித்த அழுத்த ஆரம்பிச்சது. சரி எப்படியாவது அட்ஜஸ் பண்ணலாம்னு பாத்தா  அட்ஜஸ் பண்ண முடியாத அளவு அவசரமாயிடுச்சு. செஷன் பிரேக்குல பசங்க ஒரு நாளு பேர கூட்டிட்டு கைத்தாங்கலா போனப்ப தான் தெரிஞ்சது மருந்துக்கு கூட அங்க ஒரு ஜென்ஸ் டாய்லெட் கிடையாதுன்னு.

இவ்ளோ பெரிய காலேஜ் கட்டினாய்ங்களே ஒரு டாய்லெட் கட்டினாங்களா-ன்னு கடுப்பாயிடுச்சு. அடுத்த பத்து நிமிஷத்துல திரும்பவும் ஹால்குள்ள போகணும். அதுக்குள்ள நான் எங்க 'போறது'. திரும்பிப்பாத்தா லேடிஸ் டாய்லெட். பிரேக் டைம்ல நிறைய பொண்ணுங்க போய்ட்டு வந்துகிட்டு இருந்தாங்க. வேற வழியே இல்லை. பிரேக் முடிஞ்சு எல்லா பொண்ணுங்களும் கிளாஸ் போனதுக்கப்புறம் நான் டாய்லெட்டுக்கு உள்ள போறேன்னு சொன்னா எல்லாப்பசங்களும் சிரிச்சாங்க பாருங்க ஒரு சிரிப்பு. எனக்கு டென்சனாயிட்டுது. என் அவசரம் அந்த நாதாரிங்களுக்கு எங்க புரியப் போகுது. எல்லாரும் ஒரு ஓரமா நின்னு கதை பேசுறா மாதிரி பேசிட்டு இருந்தாங்க. நான் எங்க பேசுறது. அவனுங்க இதுதான் சான்சுன்ன என்னய ஓட்ட ஆரம்பிச்சுட்டானுங்க.

பிரேக் முடிஞ்சதுன்னு பெல் அடிச்சது சொன்னது. எல்லாரும் உள்ள போனப்புறம் வராண்டா காலி. "டேய் மச்சான் இங்கயே இருங்க. யாராவது வந்தா நிப்பாட்டி பேச்சு கொடுங்க. ஒரே நிமிஷத்துல நான் வந்துடுறேன்"னு சொல்லிட்டு பூனை மாதிரி பம்மி பம்மி போய்கிட்டு இருந்தேன். கரெக்டா பாத்ரூம்குள்ள என்ட்ரி ஆகப் போற சமயம். திடீர்னு உள்ள இருந்து ஒரு பொண்ணு வெளிய வந்துச்சு. என்னய பாத்தவுடனே விட்டுச்சு பாருங்க ஒரு லுக்கு. யம்மாடி.... திரும்பிப் பாத்தா ஒரு பய புள்ளையையும் காணோம். ஆபத்துக்குப் பாவமில்லடா ராசான்னு "சாரிங்க. தப்பா நினைச்சுக்காதீங்க. அது வந்துங்க ரொம்ப அவசரம். ஜென்ஸ் டாய்லெட் எதுவுமே இங்க இல்லை. அதுதான். ப்ளீஸ். சாரிங்க.."

அப்புறமா அந்த தெய்வம் வெளிய காவலுக்கு இருக்க, நான் உள்ள போய்ட்டு வந்தேன். நான் வெளிய வந்த அடுத்த செகண்டு அது திரும்பிப் பாக்காமயே போயிடுச்சு. "சே ஒரு தேங்க்ஸ் சொல்லியிருக்கலாம்"னு தோணுச்சு.

எக்ஸாம் ஹாலுக்குள்ள போனப்புறம்தான் தெரிஞ்சது அந்த பொண்ணும் என் கிளாஸ்லதான் இருக்குன்னு. அப்பப்ப அந்தப் பொண்ணு திரும்பும்போது ஒரு தடவை தேங்க்ஸ்னு சைகைல சொன்னேன். அதுக்கு அவ சிரிக்க, பசங்க பாத்துவிட "பார்றா இங்க வந்தும் சும்மா இருக்க மாட்டேங்கிறான்"னு ஓட்டினான் ஒருத்தன். எக்ஸாம் முடிஞ்சு வெளிய வந்ததும் அவளத் தேடிப் போய் 'ரொம்ப தேங்க்ஸ்ங்க"ன்னேன். ஏதோ சொல்ல வந்தவளை இடைமறித்தது ஒரு குரல். "ப்ரியா! லதா மேடம் உன்ன கூப்பிடுறாங்க..." உடனே ஓடிப்போய் விட்டாள். "சே.. யாரா இருந்தாலும் அந்த லதா மேடம் விளங்காமப்போக.." மனசுக்குள்ள சபிச்சிட்டு கிளம்பினேன். பார்க்கிங்ல பைக் எடுக்கப்போற சமயம். பிரியா வேக வேகமா ஓடி வந்துகிட்டு இருந்தாள். ஆஹா... அவ ஓடி வர்றது எங்களை நோக்கித்தான். யாராலயுமே நம்ப முடியல.

"மச்சான் உண்மையச் சொல்லு என்ன மேட்டரு".

"டேய்... எனக்கு ஒன்னும் தெரியாதுடா"

"அப்ப அவ ஏன் உன்ன தேடி வர்றா"

அதுக்குள் பிரியா வந்துவிட்டாள்..

மூச்சு வாங்க ஒரு நிமிசம் நின்னுட்டு அப்புறமா வாய் திறந்தாள் "நீங்க உங்க ஹால் டிக்கட்ட அங்கயே மிஸ் பண்ணிட்டு வந்துட்டீங்க... இந்தாங்க அண்ணா..."

கிர்ர்ர்ர்ர்........ டமார்............ 


24 comments:

D.R.Ashok said...

//கிர்ர்ர்ர்ர்........ டமார்............//

ஐயோ பாவம்...சத்தம் இங்க கேட்டது .. better luck next time ;)

ஈரோடு கதிர் said...

//வெளிய குடிச்ச ஒரு லிட்டர் தண்ணியும்//

பரிட்சைக்கு போறபோதாவது சரக்கடிக்காம போக மாட்டியா!!!!

திருஞானசம்பத்.மா. said...

//.. இந்தாங்க அண்ணா..."

கிர்ர்ர்ர்ர்........ டமார்............ //

:-)))))))))

VELU.G said...

பல்ப் ப்யூஸ் போயிடுச்சா

க.பாலாசி said...

//என்னதான் ரூல்ச மணிமணியா பின்பற்றினாலும் லைசன்ஸ் வாங்காதது பெரிய தப்புத்தான்.//

யாருங்க பெரிய தப்புன்னு சொன்னது...வேணும்னா..கொஞ்சூண்டுன்னு சொல்லலாம்...இப்ப நானில்ல....

//இந்தாங்க அண்ணா..."
கிர்ர்ர்ர்ர்........ டமார்............ //

இந்த பல்ப்பு போதுமா....இன்னும் கொஞ்சம் வேணுமா....

இந்த பொண்ணுங்களே...இப்டித்தான் பாஸ்... விடுங்க... இன்னும் ரெண்டு மூணு எக்ஸாம் இருக்குல்ல... ஒவ்வொருமுறையும் ரெண்டு லிட்டர் தண்ணி குடிங்க.... மேட்டர் ஓவர்.............

க.பாலாசி said...

//ஆபத்துக்குப் பாவமில்லடா ராசான்னு //

என்ன ஆபத்துங்க ராசா...???

க.பாலாசி said...

//நான் வெளிய வந்த அடுத்த செகண்டு அது திரும்பிப் பாக்காமயே போயிடுச்சு//

நல்லவேள...

//எக்ஸாம் முடிஞ்சு வெளிய வந்ததும் அவளத் தேடிப் போய் 'ரொம்ப தேங்க்ஸ்ங்க"ன்னேன்//

ங்ங்ங்கொய்யால.... ஜொல்லு விடுறதுக்கு என்னாமா அலைய வேண்டியிருக்கு.....

Anonymous said...

//"சே.. யாரா இருந்தாலும் அந்த லதா மேடம் விளங்காமப்போக.." //
பிரியா லதா மேடமோட பொண்ணுங்க பார்த்து சாபவுடுங்க

ஜெட்லி said...

இதெல்லாம் சகஜம் பாஸ்.....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)))

Balavasakan said...

: )
டமார் டமார்

வால்பையன் said...

/யில்வே ஸ்டேஷன்ல அவர இறக்கி விட்டுட்டு ரொம்ப "நன்றிங்க சார்"னு சொன்னேன். "நீயேம்பா சொல்ற. அத நான்தான சொல்லோணும்..." ன்னாரு//

தவளை தன் வாயால் கெடும்!

வால்பையன் said...

//"நீங்க உங்க ஹால் டிக்கட்ட அங்கயே மிஸ் பண்ணிட்டு வந்துட்டீங்க... இந்தாங்க அண்ணா..."//


லாவண்யா மாதிரி, தங்கச்சிங்க ஒழிகன்னு ஒரு பதிவு எழுது மச்சான்!
ஆனா எல்லா தங்கச்சியையும் நான் காப்பாத்துவேன்!

:)

Anonymous said...

நல்லாவே வாங்கியிருக்கீங்க பல்பு..ஆமாம் பரீட்சையில் பாஸ் ஆயிடுவீங்க தானே?

வானம்பாடிகள் said...

:))

Chitra said...

palichnu eriyudhu. :-)

கனிமொழி said...

Hahaha.......

padma said...

ஆமாம் இந்த காலத்துல சின்ன பொண்ணுங்க எல்லாரையும் அண்ணான்னு கூப்புடுதுங்க .பாவம் பசங்க .அடுத்த பரிட்சையெல்லாம் ஒழுங்கா எழுதுங்க .மனச தளர விடாம :)

சசிகுமார் said...

//ரயில்வே ஸ்டேஷன்ல அவர இறக்கி விட்டுட்டு ரொம்ப "நன்றிங்க சார்"னு சொன்னேன். "நீயேம்பா சொல்ற. அத நான்தான சொல்லோணும்..." ன்னாரு அவரு. சிரிச்சிகிட்டே நான் வர்றேன் சார்னு கழண்டு வந்துட்டேன். யோசிச்சுப் பாத்தா உண்மையாவே யாரு யாருக்கு உதவி பண்ணிணா...//

மேட்ர மட்டும் அவர் கிட்ட சொல்லியிருந்தீங்க அவ்வளவு தான் அவரே வசூல் பண்ணியிருப்பார். நல்லா இருக்கு சார் . உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சி. கருணாகரசு said...

படிச்ச எனக்கே... கிர்ர்ர்ர்ருன்னு ஆகிபோச்சி....

மனச தேத்திக்கிங்க வேற என்ன சொல்ல....

மங்குனி அமைச்சர் said...

//இந்தாங்க அண்ணா..."//

என்னடா இது , மாமாட்ட தப்பிச்சாச்சு , இங்க எப்படியும் அப்பு இருக்கணும்னு நினைச்சேன் , வச்சுடாங்க ஹ ஹ ஹ

JAy said...
This comment has been removed by the author.
ரோகிணிசிவா said...

my god , eppudi ippdi , enamo exam la pass aana sari

velumani1 said...

ரொம்ம்ம்ம்ம்ம்ப தைரியம்தான்......அதான் பாத்தன் , இவர் னம்ம ஊரு.

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger