Thursday, May 20, 2010

தாழ்வாரத்தில் மறைந்த வீதியும், நின்று விட்ட மழையும்

தாழ்வாரத்தில் மறைந்த வீதி...

பூமியில் மிதக்கும் ஆகாயம்
அதனுள் உலவும் முகில்கூட்டம்
மண் நோக்கிப் பறக்கும் பறவைகள்
திருப்பி நடப்பட்ட தென்னை மரம்
தலையால் நடக்கும் சிறுவர்கள்
தலைகீழாய் உருளும் மிதிவண்டி
மிச்சமிருந்த மழையின் துளியொன்று
அனைத்தையும் கலைக்க,
அலையலையாய் சேர்ந்தன காட்சிகள்.
தாழ்வாரத்தில் மறைந்த வீதி
தலைகீழாய் தெரிகிறது,
வாசலில் தேங்கிய மழைநீர் மீது...நின்றுவிட்ட மழை...

தேங்கிய மழைநீரில் மேடுகள் தேடி
குதித்து நடக்கும் பள்ளிச்சிறுமிகள்.
நின்றுவிட்ட சாரல் கண்டு மெதுவாய்
குடைகள் இறக்கும் யுவதிகள்.
முழுகிக் குளித்த தலைமுடியாய் மழைநீர் 
தாங்கி சிலிர்த்து நிற்கும் மரங்கள்.
துணிகள் உலர்த்தும் பெண்ணைப்போல
சிறகுகள் உலர்த்தும் பறவை இனங்கள்.
தனிமையும், மெளனமும் சூழ
சன்னல் கம்பியில் உதிரும் துளிகள்.
காணும் யாவிலும் நின்றுவிட்ட மழை
நனைத்துச் கொண்டேயிருக்கிறது மனதை...
21 comments:

Srimathi said...

first poem super

sathama padikka padikka its amazing

:)

Chitra said...

அழகிய கவிதை மழையில், நாங்களும் நனைந்தோம்.

அண்ணாமலை..!! said...

எனக்கு முதல் வரியிலேயே தெரிந்து விட்டது சொல்ல வந்தது!

பூமியில் மிதக்கும் ஆகாயம்!

"மிதக்கும் "காட்டிக்கொடுத்து விட்டது!

ஒவ்வொன்றும் ரசிக்கும்படியான வரிகள்!
ரசிக்கும்படியான கற்பனை!
வாழ்த்துகள்!

க.பாலாசி said...

மழை சிந்திய நிலம் போல மனதும்... இக்கவிதையை வாசிக்கையில்....

//தாழ்வாரத்தில் மறைந்த வீதி
தலைகீழாய் தெரிகிறது,
வாசலில் தேங்கிய மழைநீர் மீது...//

அருமை...அருமை....

Discovery book palace said...

முதலாவது ஈரமான கவிதை, காட்சிகள் கண்முன் விரிகிறது.
இரண்டாவது கவிதையாய் பொழியும் பாடல். முணுமுணுக்க வைக்கிறது.

மஞ்சூர் ராசா said...

மிகவும் அழகாக மழையை ரசித்ததுடன் அருமையாக எழுதியும் இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

ஓட்டும் போட்டு விட்டேன்.

VELU.G said...

//காணும் யாவிலும் நின்றுவிட்ட மழை
நனைத்துச் கொண்டேயிருக்கிறது மனதை...
//

கவிதை மனதை நனைத்துக்கொண்டே இருக்கிறது

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

இரண்டு கவிதைகளும் அருமை . வார்த்தைகள் பசுமை மாறா ஈரத்துடன் இன்னும் என் இதயத்தில் !

ப்ரின்ஸ் said...

எங்க பார்த்தாலும் ஒரே மழை! கவிதை, கட்டுரை எதிலும் மழை பேசாம உங்க வலைசரத்துக்கு மழை சாரல் அல்லது மழைக்காதலன் இப்படி எதாவது ஒரு பெயர் வச்சுருங்களேன்....வார்த்தைகளின் வர்ணஜாலம் அழகு...!!!
சரியான ரசனைக்காரன் ..பாராட்டுக்கள்

புலவன் புலிகேசி said...

அடா அடா அடா இதுதான் சிச்சுவேசன் கவிதையோ..சூப்பர் தல...

யாதவன் said...

அருமை கவிதை பாராட்டுக்கள்

சசிகுமார் said...

மழையை வர்ணித்த விதம் சூப்பர் நண்பரே, பதிவு சூப்பரா இருக்கு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கனிமொழி said...

ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க ஜெய்...

மங்குனி அமைச்சர் said...

நல்ல கவிதை , போடோ அதைவிட அருமை

ஈரோடு கதிர் said...

இதமான கவிதை ராஜா

ஜெயந்தி said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html

அ. நம்பி said...

//துணிகள் உலர்த்தும் பெண்ணைப்போல
சிறகுகள் உலர்த்தும் பறவை இனங்கள்.//

நல்ல கற்பனை.

வாழ்க; வளர்க.

padma said...

ஆஹா மழையில் நனைந்து சிலிர்த்தேன் ...
கவிதையில் கொட்டும் மழையும் தேங்கிய நீரும்
அருமை

கண்மணி/kanmani said...

வயதைத் தாண்டிய இரசனை 'மழை' மட்டுமே

சி. கருணாகரசு said...

கவிதை இரண்டும் இதமான சாரல்... மனதை நனைத்தது. பாராட்டுக்கள்.

எப்பூடி ... said...

கவிதையும் புகைப்படமும் மனதை வருடுகின்றன, வாழ்த்துக்கள்.

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger