Wednesday, June 2, 2010

புத்தன் வாக்கு




இடர் வரும்போதும் - உள்ளம்
இரங்கிடும் போதும்
உடன்பிறந்தவர்போல் - மாந்தர்
உறவு கொள்வர் அப்பா!


ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவதுண்டோ அப்பா!


எவர் உடம்பினிலும் - சிவப்பே
இரத்த நிறமப்பா!
எவர் விழி நீர்க்கும் - உவர்ப்பே
இயற்கை குணமப்பா!


பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டுமப்பா!



11 comments:

சேட்டைக்காரன் said...

//ஓடும் உதிரத்தில் - வடிந்து
ஒழுகும் கண்ணீரில்
தேடிப் பார்த்தாலும் - சாதி
தெரிவதுண்டோ அப்பா!//

புத்தர் சொன்னதும் இது தான்
சித்தர் சொன்னதும் இது தான்!
பித்தர்கள் புரிந்து கொண்டால் சரிதான்!

சி. கருணாகரசு said...

சரியான நேரத்தில்.... சரியான கவிதை.....

சி. கருணாகரசு said...

ஆமாம் கவிதை உங்களுடையதுதானா?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டுமப்பா!//////

என்றும் புத்தர் வாக்குகள் புதுமையாகத்தான் இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

ஜில்தண்ணி said...

நல்லாயிருக்கு அகல்

// பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டுமெனில் - நல்ல
செய்கை வேண்டுமப்பா! //

ஆம் நண்பரே,எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் நல்ல செய்கை இருந்தால் மட்டுமே சிறப்பு

ஆறுமுகம் முருகேசன் said...

ம் :)

வானம்பாடிகள் said...

:)

VELU.G said...

நல்ல கவிதை

பெருமை பிறப்பினால் இல்லை

செய்கையில் தான்

மங்குனி அமைச்சர் said...

நைஸ் ஒன்

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க ராசா.... situation poem

அகல்விளக்கு said...

நன்றி...

**சேட்டைக்காரன்
**கருணாகரசு அண்ணா
(இது என்னுடையது இல்லை அண்ணா... ஆசிய ஜோதியில் புத்தர் கூறும் அறிவுரை கவிதை...)
** சங்கர்...
** ஜில் தண்ணி...
** ஆறுமுகம் முருகேசன்...
** வானம்பாடிகள் அய்யா...
** வேலு அண்ணா...
** மங்குனி அமைச்சர்...
** பாலாசி அண்ணா...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger