Thursday, June 3, 2010

தாண்டவக்கோனே

 
  
உச்சிவெயில் வேளையிலும் தாண்டவக்கோனே-நானும்
உடம்புருகப் பாடுபட்டேன் தாண்டவக்கோனே

வெள்ளாம விளைச்சலெல்லாம் தாண்டவக்கோனே-இப்ப
இல்லாம போச்சுதுங்க தாண்டவக்கோனே

நாலெழுத்துப் படிச்சதெல்லாம் தாண்டவக்கோனே-இங்கே
நாடாளப் போவதில்ல தாண்டவக்கோனே

பட்டமெல்லாம் வாங்குனதும் தாண்டவக்கோனே-பவுசா
பாரினுக்குப் போவுதுங்க தாண்டவக்கோனே

நல்ல தமிழ்ப்பேச்சு கூட தாண்டவக்கோனே-இப்ப
நாராசமா மாறிப்போச்சு தாண்டவக்கோனே

இட்டதெல்லாம் யார்கணக்கு தாண்டவக்கோனே-எங்க
இலவசங்களப் பாத்துக்கங்க தாண்டவக்கோனே

மக்களெல்லாம் மாறிட்டாங்க தாண்டவக்கோனே-நானும்
மாறும்படி விதிச்சுடாத தாண்டவக்கோனே

விடியவிடிய வேல செய்யுறேன் தாண்டவக்கோனே-வாழ்க்கை
விடிவதெப்போ தெரியவில்ல தாண்டவக்கோனே

மச்சுவீட்டு சனங்களெல்லாம் தாண்டவக்கோனே-இனிமே
மனசுமாறி உழைக்கவேணும் தாண்டவக்கோனே

எட்டுனத சொல்லிப்புட்டேன் தாண்டவக்கோனே-நீங்க
எல்லாரையும் ஏத்தவேணும் தாண்டவக்கோனே



21 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல முயற்சி ராஜா, வாழ்த்துக்கள்.....

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு ராஜா:)

Mugilan said...

அட! :-)

லவ்டேல் மேடி said...

பாதி வெளங்குது...
மீதி வெளங்குள...... தாண்டவகோனே...!!

Mugilan said...

Check out my தாண்டவக்கோனே

http://mugilankavithaigal.blogspot.com/2010/05/blog-post.html

தோழி said...

///எல்லாரையும் ஏத்தவேணும் தாண்டவக்கோனே ///

தாண்டவகோன் செய்வார்...

நன்றாக அமைந்திருக்கின்றது இருக்கின்றது... வாழ்த்துக்கள்...

ரோகிணிசிவா said...

//விடியவிடிய வேல செய்யுறேன் தாண்டவக்கோனே-வாழ்க்கை
விடிவதெப்போ தெரியவில்ல தாண்டவக்கோனே//
project season mudunjaa
sariyayurum .,

முகில் said...

அருமை தம்பி!

ப்ரின்ஸ் said...

/மக்களெல்லாம் மாறிட்டாங்க தாண்டவக்கோனே-நானும்
மாறும்படி விதிச்சுடாத தாண்டவக்கோனே //

அரைசான் வயுறு தாண்டவகோனே-என்னை மாறும் படி சொல்லுது தாண்டவகோனே..

கலிகாலம் கலங்கடிக்குது தாண்டவகோனே- என் கனவெல்லாம் நெசமாகனும் தாண்டவகோனே..


காடு வெளயலியே தாண்டவகோனே -என் கட்டையும் தான் வேகுமா தாண்டவகோனே?????

மாரி மழை பெய்யணும் தாண்டவகோனே- மனுசபய மனசெல்லாம் நிறையணும் தாண்டவகோனே ..

க.பாலாசி said...

இந்த பாட்டு எந்த மெட்டுக்கு ராசா....

எனிவே... ஆரூரன் சொன்னதையே நானும்...

சசிகுமார் said...

நல்ல வரிகள் நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

VELU.G said...

கவிதை எழுதுற எல்லாரும் தாண்டவக்கோனே நம்ம ராசகிட்ட கத்துக்கிடனும் தாண்டவக்கோனே

அருமை ராசா

பிரேமா மகள் said...

//பட்டமெல்லாம் வாங்குனதும் தாண்டவக்கோனே-பவுசா
பாரினுக்குப் போவுதுங்க தாண்டவக்கோனே//

ரெண்டு கேள்விகள்...

1.உள் குத்து எதுவும் இல்லையே?

2.என்னை எதுவும் சொல்லலையே?

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

மிகவும் புதுமையான முயற்சி நண்பரே . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

சிங்கம் said...

அருமையான அடிகள்.. தொடருங்கள்..

அண்ணாமலை..!! said...

நல்ல எசப்பாட்டு தான்!
தாண்டவக்கோனே!
நறுக்குன்னு இருக்குது
தாண்டவக்கோனே!

கனிமொழி said...

நல்லாருக்கு ஜெய்...

//விடியவிடிய வேல செய்யுறேன் தாண்டவக்கோனே-வாழ்க்கை
விடிவதெப்போ தெரியவில்ல தாண்டவக்கோனே//
கூடிய சீக்கிரமே... :-)

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...

சி. கருணாகரசு said...

சத்தியமா நல்ல பதிவு தாண்டகோனே_ வரும்
சந்ததிக்கும் சேர்த்திடனும் தாண்டவக்கொனே.

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

மேற்கொண்ட பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

அகல்விளக்கு said...

நன்றி..

**ஆரூரன் அண்ணா
**பாலா அய்யா
**முகிலன்
**லவ்டேல் மேடி
**தோழி
**ரோகிணி அக்கா
**முகில்
**ப்ரின்ஸ்
**பாலாசி அண்ணா
**சசிகுமார்
**வேலு அண்ணா
**பிரேமா அக்க்கா
**பனித்துளி சங்கர்
**சிங்கம்
**அண்ணாமலை
**கனிமொழி :)
**கமலேஷ்
**கருணாகரசு அண்ணா
**யுவராஜ்

அனைவருக்கும் நன்றி...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger