Monday, June 14, 2010

மஞ்சள் நதிக்கரை

மஞ்சள் நதிக்கரையில்
மவுனமாய்த் தீ வளர்க்கிறாள் ஒரு சீனச்சிறுமி...

நதிக்கரைக் காற்றில் நளினமாய் - நடனமிடும்
தணல்கீற்றுகளால் தனிமை எரிகிறது...

எங்கோ தொலைவில் எவர்க்கும் - எட்டாத்
தொனியில் ஒலிக்கின்றன ஃபுரின்கள்...

உச்சாடன ஒலிகளற்ற புதையுண்ட-புத்தவிகாரங்களின்
வெறுமை வெளியெங்கும் நிறைய...

மெளனம் பிறழ்ந்து சலனமாய்-சலசலத்துக்
கொண்டிருக்கிறது மஞ்சள்நதி...

மனிதம் தொடங்கியவிடத்து முடிகிறது
மறுபிறப்பில்லாத மக்களின் வாழ்க்கை...

புகையும் குளிரும் ஒருசேர அனைத்தும்
கடந்தவளாக உறவினர் உடல்கிடத்தி..,

மஞ்சள் நதிக்கரையில்
மவுனமாய்த் தீ வளர்க்கிறாள் ஒரு சீனச்சிறுமி...


Images : thanks to 'listsoplenty.com'

19 comments:

சி. கருணாகரசு said...

நான் தான் முதல்ல வந்தேன்

சி. கருணாகரசு said...

புதிய கோணம் பாராட்டுக்கள்.

கனிமொழி said...

புகையும் குளிரும் ஒருசேர அனைத்தும்
கடந்தவளாக உறவினர் உடல்கிடத்தி..,

இப்ப தான் புரியுது ஜெய்..
ஏன் மௌனம் என்று..

வானம்பாடிகள் said...

//மனிதம் தொடங்கியவிடத்து முடிகிறது
மறுபிறப்பில்லாத மக்களின் வாழ்க்கை...//

என்ன ஒரு சத்தியமான வார்த்தை. அருமை.

D.R.Ashok said...

ரொம்ப நல்லாயிருக்கு அகல்விளக்கு

dheva said...

ஒரு அநியாயத்திற்கு பிறகு..ஒரு கொடுமைக்குப் பிறகு....ஒரு வன்முறைக்குப் பிறகு ஏற்பட்ட அவலத்தை, இயலாமையை.....விரக்தியை....எப்படி ராஜா வார்த்தைகளுக்குள் அடைத்தீர்கள்...?


படித்து முடித்த பின்னும் மனதோடு ஒட்டி நிற்கிறாளே அந்த மஞ்சள் சிறுமி....என்ன வித்தை இது?

//மஞ்சள் நதிக்கரையில்
மவுனமாய்த் தீ வளர்க்கிறாள் ஒரு சீனச்சிறுமி...,,

எமது மனதிலும்...தோழரே....! அற்புதமான படைப்பு....வாழ்த்துக்கள்!

புலவன் புலிகேசி said...

நல்ல படைப்பு நண்பா..வாழ்த்துக்கள்

ரோகிணிசிவா said...

//
நதிக்கரைக் காற்றில் நளினமாய் - நடனமிடும்
தணல்கீற்றுகளால் தனிமை எரிகிறது...
//

//அனைத்தும்
கடந்தவளாக உறவினர் உடல்கிடத்தி..,//

என்னமா காட்சியை கண்முன்னே கொண்டுவரீங்க., வார்த்தை விளையாட்டு ., அழகா கோர்த்து ஒரு கவிதை இல்ல காவியம் படைச்சு இருக்கீங்க .

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///////மனிதம் தொடங்கியவிடத்து முடிகிறது
மறுபிறப்பில்லாத மக்களின் வாழ்க்கை...
///////

வார்த்தைகளில் புதுமையான சிந்தனைகள் கசிக்கிறது . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி

ப்ரின்ஸ் said...

/உச்சாடன ஒலிகளற்ற புதையுண்ட-புத்தவிகாரங்களின்
வெறுமை வெளியெங்கும் நிறைய...*/

தேர்ந்த படைப்பாளி!!

ஆறுமுகம் முருகேசன் said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நண்பர்

நிலாமதி said...

உங்கள் கவி வரிகளில் உங்கள் புலமை தெரிகிறது. பாராடுக்கள்.

கமலேஷ் said...

- - மஞ்சள் நதிக்கரை -
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..

தேவன் மாயம் said...

உண்ர்வுகளில் எரிகிறது கவிஞனின் வரிகள்!!!

ஷர்புதீன் said...

புதிய கோணம்

:)

முரளிகுமார் பத்மநாபன் said...

ராஜா அருமை, மென்சோகம் மனதில் ஒரு மெழுகுவர்த்த்டியின் ஒளியாய் பரவுகிறது, மஞ்சள் நதி- சீன சிறுமி....

க.பாலாசி said...

மறைத்து வைத்திருக்கும் வலியும் நெஞ்சில் தைக்கிறது...கவிதையினூடே...

VELU.G said...

சீனச்சிறுமி மனசுள் நிற்கிறாள்

அகல்விளக்கு said...

நன்றி

**கருணாகரசு அண்ணா...
**கனிமொழி...
**வானம்பாடிகள்...
**அசோக் அண்ணா...
**தேவா
**புலிகேசி
**ரோகிணிசிவா அக்கா
**பனித்துளி சங்கர்
**ப்ரின்ஸ்
**ஆறுமுகம் முருகேசன்
**நிலாமதி அக்கா
**கமலேஷ்
**தேவன் சார்...
**ஷர்புதீன்
**முரளிகுமார் பத்மநாபன்
**பாலாசி அண்ணா...
**வேலு அண்ணா...

அனைவருக்கும் நன்றி...

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger