Wednesday, June 30, 2010

வேண்டும் வரம்



"என்ன வேண்டும்..."
வரம் கொடுக்கும் கடவுள் போல தினம்தினம்
கேட்டுக்கொண்டிருப்பாள்...

எனது தேவை புதினா துவையலோ..
புதிய மொபைலோ.. எதுவாகவிருப்பினும்...
கொடுத்துச் சிவப்பாள்.

உறக்கத்திலொருநாள்
வரம் கேட்ட கடவுளிடம்
உளி ஒன்றை வாங்கிப் பத்திரப்படுத்தினேன்.

காலச்சக்கரத்தின் அச்சை முறித்து
அவள் மழலைக் காலமொன்றில்
நான் கேட்க வேண்டும்...

"என்ன வேண்டும்...?"


***********************************************************************************


நேசம்

தூக்கியெறியும்முன்
தாத்தாவின் டிரங்குப்பெட்டியை
திறந்து பார்த்தேன்...

உள்ளிருந்த பொருளொன்றைக் காட்டி
என்ன இது என்று கேட்க,

இது அவர் தாத்தாவின்
வெற்றிலைப்பெட்டி யென்று
சொன்னாள் பாட்டி.

30 comments:

சசிகுமார் said...

கவிதை அருமை நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

முதலுக்கு

காலச்சக்கரம் உடைஞ்சா சொல்லுங்க நானும் ஒரு உளிய அவரான்ட வாங்கணும்..

ரெண்டுக்கு

பரம்பர பரம்பரையா கட்டிக்காப்பாத்துனதா அது... பத்திரமா பாத்துக்கங்க ராசா ட்ரெங்குபெட்டிய....

க.பாலாசி said...

நல்ல கவிதைகள் ராசா...

VELU.G said...

இரண்டுமே அருமை அன்பை மென்மையாக வெளிப்படுத்துகிறது

ரொம்ப நல்லாயிருக்கு.

அப்புறம்
//
Blogger க.பாலாசி said...
முதலுக்கு
காலச்சக்கரம் உடைஞ்சா சொல்லுங்க நானும் ஒரு உளிய அவரான்ட வாங்கணும்..
//
அந்த உடைஞ்ச சக்கரம் எனக்கு அடுப்பெரிக்க வேனும்

Chitra said...

நேசம் கவிதை - அழகு.... மிகவும் ரசித்தேன்.

ஜெய் said...

நேசம் அழகு... குறைந்துவரும் பாசங்களையும் சொல்லுது...

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//காலச்சக்கரத்தின் அச்சை முறித்து
அவள் மழலைக் காலமொன்றில்
நான் கேட்க வேண்டும்... //

யப்பா,எப்புடி எல்லாம் யோசிக்கிறாயிங்க,நல்லாயிருக்கு

சூப்பர் அகல் தாத்தா வெத்தல பெட்டி

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

என்ன தான் வேணும்!

வெறும்பய said...

அருமை நண்பரே,
நல்ல கவிதைகள்..

ஆரூரன் விசுவநாதன் said...

கலக்கற ராசா......வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

வானம்பாடிகள் said...

நல்லாருக்கு ராஜா:)

இராமசாமி கண்ணண் said...

நல்லாருக்குங்க.

அமைதிச்சாரல் said...

ரெண்டு கவிதைகளும் நல்லாருக்கு.

முரளிகுமார் பத்மநாபன் said...

சொல்லாம சொல்லும் ரெண்டாவது கலக்கல்

Ananthi said...

//என்ன வேண்டும்..."
வரம் கொடுக்கும் கடவுள் போல தினம்தினம்
கேட்டுக்கொண்டிருப்பாள்...

எனது தேவை புதினா துவையலோ..
புதிய மொபைலோ.. எதுவாகவிருப்பினும்...
கொடுத்துச் சிவப்பாள்.//

ரொம்ப அருமையா எழுதறீங்க..
தொடருங்கள்.. வாழ்த்துக்கள் :)

கண்மணி/kanmani said...

முதல் அருமையென்றால் இரண்டாவது
அருமையோ அருமை
டிரங்கு பெட்டிகள் மட்டுமில்லை தாத்தா என்ற நினைவுகளையும் யாரும் பத்திரப்படுத்துவதில்லை இப்போதெல்லாம்

ஈரோடு கதிர் said...

வரம் கிட்டட்டும்

ஆறுமுகம் முருகேசன் said...

கலக்கல் கவிதைகள் நண்பரே.

யுக கோபிகா said...

வேண்டும் வரம் கவிதை அருமை...

முனியாண்டி said...

நல்ல கவிதைகள்.

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html

கலாநேசன் said...

கவிதை அருமை

அக்பர் said...

அருமைங்க.

Gracy said...

அழகான கவிதைகள். வாழ்த்துக்கள்!

அகல்விளக்கு said...
This comment has been removed by the author.
மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

பாராட்டுக்கள்...நண்பரே..
கவிதை இரண்டும் மிக அருமை...
தொடரட்டும் ...

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே...தொட்டது வித்தியாசமான இடம்

ஹேமா said...

"டிரங்குப்பெட்டி" யா அது.எங்க வீட்ல ஒன்னு இப்பிடிப் பாத்திருக்கேன் எங்க தாத்தாவினது.

இரண்டு கவிதைகளிலுமே பாசம் நிரம்பலாய்க் கிடக்கு.

அகல்விளக்கு said...

நன்றி ...

** சசிகுமார்
** பாலாசி அண்ணா
** வேலு அண்ணா
** சித்ரா அக்கா
** ஜெய்
** ஜில்லு யோகேஷ்
** வால்@தல
** வெறும்பய
** ஆரூரன் அண்ணா
** பாலா அண்ணா
** இராமசாமி கண்ணண்
** அமைதிச்சாரல்
** முரளிகுமார்
** ஆனந்தி அக்கா
** கண்மணி அக்கா
** கதிர் அண்ணா
** ஆறுமுகம் முருகேசன்
** யுக கோபிகா
** முனியாண்டி
** கலாநேசன்
** அக்பர்
** கிரேஸி
** மணி (ஆயிரத்தில் ஒருவன்)
** கமலேஷ்
** ஹேமா அக்கா

அனைவருக்கும் நன்றி...

மங்குனி அமைச்சர் said...

ஹலோ , யாராவது இருக்கிகளா ?

அகல்விளக்கு said...

அமைச்சரே...

நானிருக்கிறேன்... :-)

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger