Friday, August 6, 2010

பிரிவென்னும் வாழ்க்கை...

விளக்குகளில்லா இருண்ட வீதியில்
மெலிதாய் பரவிக் காற்றில் கலக்கும்
வர்ணங்களின் வெளிச்சம்
மனதில் மட்டும் இருளாய் நகரும்.

என்றாவதொருநாள் அரிதாய்த் தென்படும்
ரூபோஸ் முகங்களில் 
ஓசனிச்சிட்டுகள் சிறகடித்துப் பறந்து
நம் கிராமங்களை நினைவுறுத்திச் செல்கின்றன.

பச்சை அட்டையின் பகுதியில்
என்னை பிரித்துக் கொண்டாலும்
பசுமை நினைவுகளென்றும் பிரியாமல்
என் இரவை நகர்த்திக் செல்லும்.

அவ்வப்போது தோன்றும் அரூராக்களில்,
அரூபமாய் தெரிந்தது உன் முகம்.
நினைவுகள் மட்டும் மீதமாக
விரைவில் கலைந்தும் சென்றுவிடுகிறது.

மவுனத்தின் எல்லையைத் தீண்டவிடாமல்
குளிர்க்காற்று இசைக்கும் ஃபுரின்களும்
அசைவின்றி நிலைக்கும் விழிகளும்
இரவின் வெளியில் உறைந்து விடலாம்.

இங்கு காலம் மட்டும் உறையாமல்
நடந்து கொண்டே இருக்கிறது.

இருண்ட வாழ்வின் விளிம்புத்துருவத்தில் நான்
எனக்கான அரூராவாக நீ........ரூபோஸ்
ஓசனிச்சிட்டு
ஃபுரின்
பச்சை அட்டை
அரூரா பொலியரிஸ்

19 comments:

சசிகுமார் said...

பதிவு நல்லாயிருக்கு நண்பரே , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Srimathi said...

:)

ஜில்தண்ணி - யோகேஷ் said...

படித்த போது சிலது புரியல

லிங்குகளை ஆராய்ந்ததும் புரிய ஆரம்பித்திருக்கிறது வாழ்க்கை

அருமை :)

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////மவுனத்தின் எல்லையைத் தீண்டவிடாமல்
குளிர்க்காற்று இசைக்கும் ஃபுரின்களும்
அசைவின்றி நிலைக்கும் விழிகளும்
இரவின் வெளியில் உறைந்து விடலாம். /////////

அருமையான வார்த்தைகளின் தேர்ந்தெடுப்பு . கவிதை மிகவும் சிறப்புக உள்ளது . பகிர்வுக்கு நன்றி .

ஆரூரன் விசுவநாதன் said...

வர வர நீயும் பின்னூட்டப் புயலும் ஒரு மார்க்கமாத்தான் எழுதறீங்க ராசா.....

//இங்கு காலம் மட்டும் உறையாமல்
நடந்து கொண்டே இருக்கிறது.

இருண்ட வாழ்வின் விளிம்புத்துருவத்தில் நான்
எனக்கான அரூராவாக நீ........//

ம்ம்ம்ம்......

Anonymous said...

click and read


ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

..

க.பாலாசி said...

ராசா.... என்னத்த சொல்ல... விளக்கம் நேர்ல கேட்டுக்கிறேன்...

தேவன் மாயம் said...

பிரிவென்னும் வாழ்க்கை- தலைப்பே கவிதையாய் நிற்கிறது!

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

/வர வர நீயும் பின்னூட்டப் புயலும் ஒரு மார்க்கமாத்தான் எழுதறீங்க ராசா...../

ஆமாங்ணா. என்னமா எழுதுதுக பய புள்ளைய!

கனிமொழி said...

ம்ம்ம்ம்........ தாமதமா வந்தாலும் ரொம்ப நல்ல இருக்கு ஜெய்.....

ஃபுரின்னின் பயன்பாடு அருமை.. :)

ஆள் வெச்சு எழுதற மேட்டரை லீக் அவுட் பண்ணிடவா?? :D

கலகலப்ரியா said...

:)நல்லாருக்கு...

ஹேமா said...

தலைப்பே கவிதையைப் புரிய வைத்துவிட்டது.

கலாநேசன் said...

தலைப்பே கவிதை

முனியாண்டி said...

கவிதை மிகவும் நல்லாருக்கு :-)

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமை.....அருமையான கவிதை.நன்றி. வாழ்த்துக்கள்.

அகல்விளக்கு said...

கருத்தளித்த அனைவருக்கும் நன்றிகள்...

ப.செல்வக்குமார் said...

///அவ்வப்போது தோன்றும் அரூராக்களில்,
அரூபமாய் தெரிந்தது உன் முகம்.
நினைவுகள் மட்டும் மீதமாக
விரைவில் கலைந்தும் சென்றுவிடுகிறது.///
அருமையான வரிகள் ..
அரூரா பொலியரிஸ் இன்றுதான் கேள்விப்படுகிறேன்.
இதற்கு முன்னர் பார்த்திருந்தாலும் அதன் பெயரை பற்றித் தெரிந்துகொண்டேன்..!!

வால்பையன் said...

சயின்ஸ் பிக்‌ஷன் படம் பார்த்திருக்கேன், கவிதை இப்போ தான் படிக்கிறேன்!

எஸ்.கே said...

கவிதை மிக நன்றாக உள்ளது!

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger