Saturday, September 11, 2010

எத்தனைமுறைகள் எழுதித் தீர்த்தாலும், தீர்வதில்லை நின்புகழ்....


எமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்.


*******************************

கவிதை எழுதுபவன் கவியன்று. 
கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி....


*******************************

தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியரசாணை
பொழுதெலாம் நினது பேரருளின்
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்
குறிகுணமேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!
யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ற்தனன் மாயையே! உன்றன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்!. என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.


*******************************

- மகாகவி சுப்பிரமணிய பாரதி 


எண்பத்தொன்பது ஆண்டுகள் முன்பு நீ விடுத்த சுவாசம் இன்னும் தமிழில் மணத்துக்கிடக்கிறது. எத்தனைமுறைகள், எவ்வெத்தனை கவிமுனைகள் எழுதித் தீர்த்தாலும், தீரப்போவதில்லை நின்புகழ்....




9 comments:

வெறும்பய said...

காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்!. என்றன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்.

//

பள்ளிபருவத்திலையே என்னை மிகவும் ஈர்த்த வரிகள்...

ஆரூரன் விசுவநாதன் said...

செந்தமிழ்தேனி,சிந்துக்கு தந்தை,காடு கமழும் சொற்கோ, வை நினைவு கூர்ந்தமைக்கு பாராட்டுக்கள் ராசா

ஈரோடு கதிர் said...

எழுத எழுதப் பெருகும்

கனிமொழி said...

:) நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ஜெய்

velji said...

காலனை கவியால் வென்றவன்.எழுதித்தீர்வதில்லை அவன் புகழ்!

பகிர்விற்கு நன்றி!

சசிகுமார் said...

arumai nanbaa

ப.செல்வக்குமார் said...

//
"எத்தனைமுறைகள் எழுதித் தீர்த்தாலும், தீர்வதில்லை நின்புகழ்...."///
உண்மைதாங்க ..!!

ஸ்வர்ணரேக்கா said...

//இமைப்பொழுதும் சோராதிருத்தல் //

//காலா! என்றன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்//

- என்னே பாரதியின் தீரம்...

நினைவூட்டலுக்கு நன்றி...

தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.... இங்கே வந்து பார்க்கவும்...

http://swarnarekha-thegoldenline.blogspot.com/2010/09/blog-post.html

தியாவின் பேனா said...

பகிர்விற்கு நன்றி!

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger