Thursday, September 23, 2010

அவன் என்னும் உன்னதம்தேனீக்களாக மக்கள் மொய்க்கும் கடைவீதி அது. நாளை உலகமே அழிந்துபோகப் போவதுபோல் அவசரமாக அலையும் மக்கள் கூட்டம். மொட்டைமாடிவரை கண்ணாடி பதித்த பல்பொருள் விற்பனைக் கட்டிடங்கள். அனைத்தின் நடுவே அவன் நின்றிருந்தான்.

கண்ணாடி என்றால் மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதுவும் உள்ளே வரும் ஒவ்வொருக்காகவும் கதவைத்திறந்து மூடும் நபரைப்பார்த்தால் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவேளை ஏதாவது மனுசஉருவ மெசினாக இருக்குமோ என்று கூட நினைத்தான். கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தவனை விரட்டியது அந்த மனுச மெசினின் கோபமான பார்வை.

கூர்ந்து பார்த்தல்... அதுதான் அவன் பொழுதுபோக்கு. ஒவ்வொருவரையும், ஒவ்வொன்றையும் காரணமேயில்லாமல் மணிக்கணக்கில் அவனால் பார்க்க முடியும். ஏன் அப்படிப் பார்க்கிறாய் என்று கேட்டால் அவனுக்கு சொல்லத்தெரியவில்லை.

எதையே தேடிக்கொண்டிருக்கிறான் போலும்... எதையென்று கேட்டாலும் அனேகமாக அவனுக்குத் தெரியாமலிருக்கலாம்...

ஆனால் ஒவ்வொரு தேநீர்கடை வாசலிலும் அவன் நின்றுகொண்டிருக்கிறான். பெரும்பாலும் கடைமுதலாளிகளை விடுத்து, அவன் கண் எப்போதும் தேநீர் போடுபவனையே பார்த்துக்கொண்டிருக்கிறது. தேநீர் போடுபவன், என்றோ ஒருநாள் அதிகாலை ஒரு தம்ளர் தேநீர் தந்து குடிக்கச் சொன்னதாய் அவனுக்கு ஞாபகம். அவ்வப்போது முதலாளி இல்லாத அல்லது பார்க்காத சமயங்களில் தேநீர் போடுபவன் ஒரு சினேகப் பார்வை பார்ப்பான். அதைப் பார்ப்பதற்கேனும் அவன் அங்கு நின்றிருப்பான்.

சில நேரங்களில் அவன் சாலை ஓரம் அமர்ந்திருப்பான். வண்டியில் செல்வோரின் வழிவிடக்கெஞ்சும் ஹார்ன் சத்தங்களின் நடுவே அவன் மக்களைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பான். விலகிச் செல்லும் பெண்களின் அருகே வலிய நெருங்கிச் சென்று ஏதேதோ சொல்வான். ஆனால் எவர்க்கும் எதுவும் கேட்டதில்லை. அது அவனது சாமர்த்தியம் என்று கூடச் சொல்லலாம்.

அவ்வப்போது அவன் காணாமல்போய்விடுவான். வேறு எங்கும்அல்ல. அந்த ஆரவாரமான கடைவீதியின் அழகான மாடமாளிகைகளின் பின்புறத்திற்குத்தான் சென்று விடுவான். அது அவனுக்கான நகரம். அவனுக்காக அவனே உருவாக்கிக் கொண்ட ஒரு உலகம்.

நெருக்கியணைத்துக் கட்டப்பட்ட கட்டிடங்களின் கழிவேற்றும் பாதை மட்டும் வியாபாரப் போட்டியின்றி அங்கு ஒன்றாகக் கூடி இருக்கும். மலநெடியும், சிறுநீர் வாடையும் கலந்து வீச்சமடிக்கும் நீண்ட நெடிய சந்துகள் அவை. அங்குதான் அவன் அரசவை நடத்திக்கொண்டிருக்கிறான்.

என்றோ வீசியெறியப்பட்ட ரொட்டித்துண்டுகளைம், அவ்வப்போது எறியப்படும் துரித உணவுப்பொட்டலங்களின் மிச்சங்களையும் கூட அவன் அங்குதான் சேகரித்து வைத்திருக்கிறான்.

கொளுத்தும் வெயிலிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு மதியமும், அவன் இங்கு தஞ்சமடைந்து விடுவான். இங்கு அவன் படுத்துக்கொள்ள யாரையும் கேட்க வேண்டியதில்லை. மனிதர்களின் பார்வைகள் ஏதுமின்று அமரந்திருக்கும்போது அவன் தனது அரசவையை கூட்டுவான்.

நாய்கள் அவனுக்குத் தோழர்கள். அவன் உணவில் பெரும்பகுதியை தோழர்களுக்குக்கொடுத்து விடுவான். அதனால் தோழர்கள் என்றும் அவனிடம் சண்டையிட்டதில்லை.  

தொடுவதற்கு அருவெருக்கும் மக்களின் நடுவே, அவன் தொடும் பாக்கியம் பெற்றவை அந்த தோழர்கள் மட்டுமே. அங்கு சுற்றும் பெருச்சாளிகளும், எலிகளும்தான் அவன் அடிமைகள். அவன் எப்போது வேண்டுமானாலும் அவைகளைத் துரத்தலாம்.... அடிக்கலாம்.... அவை சிதறி ஓடும் அழகு அவனுக்கு எப்போதுமே பிடித்தமானது.

சில நேரங்களில் அவன் தனது கனவுக்காதலியை அருகில் அழைப்பான். வரமறுப்பவளை தர தரவென்று இழுத்து வந்து அமர்த்திக்கொள்வான். அவன் கட்டளைகளை அவள் ஏற்க வேண்டும். இல்லையென்றால் அவளுக்கும் அடிதான். அதற்காகவே ஒரு பாதி உடைந்த பிளாஸ்டிக் கதவொன்றின் நீளமான பட்டையை எடுத்து வைத்திருக்கின்றான்.

சுத்தமான சட்டையையும், நீளமாக பேண்டையும் போட்ட மனிதர்களை அவன் கைதிகளாகக் கொண்டுவந்து நிறுத்தி திட்டிக்கொண்டிருப்பான். இறுதியில் அவர்களுக்கு நூறு கசையடியும், மரண தண்டனையும் விதிக்கப்படும். பெண்கள் மட்டும் அங்கு விதிவிலக்கானவர்கள். அவன் அவர்களைப் பார்த்து, ஆடைகளை களையச் சொல்வான். மறுப்பவர்களுக்கு அங்கு கசையடிகள் இலவசம்.

அவ்வப்போது அவசரத்திற்கு ஒதுங்கும் மக்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்ததில்லை. ஒவ்வொரு முறையும் யாராவது வந்து விட்டால் அவன் காதலி மறைந்து விடுவாள். இவனின் அரசவையும் அத்துடன் மறைந்து விடும். அங்கு சிறுநீர் கழிக்கும் மக்களுக்கு அதைப்பற்றி என்ன கவலை...

அவனும் கூட என்றுமே கவலையில்லாமல்தான் இருக்கிறான். என்றாவதொருநாள் மட்டும் அழுகை வரும்... வானத்தைப் பார்த்துப்பார்த்து அழுதுகொண்டிருப்பான். அதையும் ஏன் என்று கேட்க முடியாது. அவனுக்குத்தான் தெரியாதே....

கழிவுநீர் கொட்டும் சத்தம் மட்டும் அவனுக்கு பழக்கமாகிப் போயிருந்தது. அதிசயமாக என்றாவதொருநாள் அக்குழாயின் வழியே சில பேச்சுச் சத்தங்கள் கூட கேட்கும். அவன் தன் காதுகளை இறுக்க மூடிக்கொள்வான்.

தொடர்ந்து வரும் கழிவு நீரால் பாசிபிடித்துப்போன சுவர்களில் சிலசமயம் சாய்ந்து அமர்ந்து கொள்வான். கடகடவென சத்தம் வரும் சமயம் பார்த்து எழுந்து கொண்டு, பின்பு சீறி விழும் கழிவு நீரைப் பார்த்து பழிப்பு காட்டுவான். தவறிப்போய் கழிவுநீர் முதுகை நனைத்துவிட்டால் அவ்வளவுதான் அவன் கையிலிருக்கும் பிளாஸ்டிக் சாட்டையால் அதனையும் அடி வெளுத்துவிடுவான்.

அவனின் சேகரிப்புப் பெட்டகமான, பயன்படாமல் காய்ந்து போன கழிவுநீர்க்குழாயில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பேப்பர்களும், காய்ந்துபோன ரொட்டிகளும் இருக்கும். இன்று மட்டும் புதிதாய், கழிவுநீரில் மிதந்து வந்து ஒதுங்கியிருந்த, உரித்தெரியப்பட்ட பிளாஸ்டிக் ஒன்றையும் ரொட்டிகளுக்கு நடுவே பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டான். அவ்வப்போது அங்கு மிதந்து வரும் உணவுப் பொட்டலக் கவர்களையும் கூட அவன் விட்டு வைத்ததில்லை.  

மாலை நெருங்க நெருங்க அரசருக்குப் பசிக்க ஆரம்பிக்கும், அரசரின் காதலி அவரை பத்திரமாக சென்றுவரும்படி சொல்லி வழியனுப்பி வைப்பாள்.

அரசர் நகர்வலம் வரும்போது முழுவதுமாக அவனாக மாறியிருப்பார். மக்கள் அவனைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிச் செல்வர். ஆனால் அவன் மட்டும் அனைவரையும் கூர்ந்து பார்த்து நகர்ந்துகொண்டிருப்பான்.

கறையேறிக் கறையேறிக் கருத்துப் போய் கிழிந்த கால்சட்டையுடனும், பரட்டைத்தலையுடனும், கழிவுநீர் வாடையுடனும் அவன் செல்லும் இடமெல்லாம் மக்கள் அவனை விரட்டுவர். அவன் அவர்களையெல்லாம் தனது அரசவையில் தண்டிப்பான்.

மீண்டும் தேநீர் கடை வாசல்....

எதைப்பற்றியும் சிந்திக்காமல் ஒருவன் அவன் அருகே தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தான். அவன் அருகாமை பற்றியோ, அவன் குறுகுறு பார்வை பற்றியோ தேநீர் உறிஞ்சுபவன் கவலைப்பட்டாதாகத் தெரியவில்லை. அவன் இன்னும் இன்னும் அவன் அருகே சென்று பார்த்தான். தேநீர்க்காரன் விலகவேயில்லை. இறுதியில் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றான் தேநீர்க்காரன்.

அரசனுக்கோ மகிழ்ச்சி தாளவில்லை. தன்னையும் ஒரு சாமானிய மனிதனாக ஒருவன் எண்ணிவிட்டான் என்ற மிதப்பு அவனுக்கு. நெஞ்சை நிமிர்த்தியபடியே அவனது அரசவை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.

தேநீர் உறிஞ்சியவன் தொலைவில் தன் நண்பனிடம் "திடீர்னு திட்டினோம், இல்ல அடிச்சோம்னு வைச்சுக்க... அந்த பைத்தியம் கடிச்சு கிடிச்சு தொலைஞ்சுட்டான்னா என்ன செய்றது..." என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் அரசவையில் அவனுக்கு ஒரு பாராட்டுவிழாவே நடந்து கொண்டிருந்தது. கண்ணீர் பொங்க, உணர்ச்சிவசப்பட்டு காற்றில் அவனைத்தழுவி அழுதுகொண்டிருந்தான் அரசன்.

20 comments:

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

நன்றி
தமிழ்10.காம் குழுவினர்

வானம்பாடிகள் said...

கடைசி பத்தி இல்லாம இன்னும் நச்னு இருக்கும் போல இருக்கு ராஜா. ப்ரமாதம்.

தியாவின் பேனா said...

அருமை

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

அருமைங்க.......நான் கூட பாதி படிக்கும் வரை நாயைத்தான் சொல்கிறீர்கள் என்று எண்ணினேன்........நல்ல suspense ஆக கொண்டு சென்றுள்ளீர்கள்....

ஸ்வர்ணரேக்கா said...

நேரில் அருவெறுப்பு தோன்றும் காட்சிகளை, உங்கள் நடையில் யதார்த்தமாக காட்டியிருக்கின்றீர்கள்....

நல்ல நடை.. எனக்கென்னமோ கடைசி பத்தி ரொம்ப பிடித்தது..

*இயற்கை ராஜி* said...

semma narration..super inga raja.

ரோகிணிசிவா said...

m , kannumunnadi paakara mathiriyae iruku , unga varnanai

VELU.G said...

நல்லாயிருக்கு ராஜா இந்த ராஜா பார்வை

தேவன் மாயம் said...

நல்ல நவீன உத்தியைக் கடைப்பிடித்து எழுதியிருக்கின்றீர்கள்!

க.பாலாசி said...

மிக அருமையான ஓட்டம் ராசா... அப்டியே இழுத்துகிட்டுப்போறீங்க...கவனிக்கப்படாத உலகம்...

ஈரோடு கதிர் said...

தொடர்ந்து மனதோடு பின்னிப்பிணையும் எழுத்து உன் மேலான நேசத்தை இன்னும் கூட்டுகிறது ராஜா!

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையா இருக்குப்பா.. லவ் யூ:-)))

ஸ்ரீ said...

நல்ல நடை.அருமை.

பாரத்... பாரதி... said...

ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...

Sukumar Swaminathan said...

வலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி... தங்களுக்கான பேனரை தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். கிடைக்கவில்லையெனில் தெரியப்படுத்தவும். நன்றி...

கமலேஷ் said...

அருமையா வளத்திருகீங்க...அகல்
"குடைக்குள் மழை" படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தது போன்றதொரு உணர்வு.
பிசகில்லாமல் நகர்கிறது நதி போல வரி.

///கண்ணாடி என்றால் மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. ///

போகிற போக்கில் எவ்வளவு எதார்த்தமாக இந்த வரிகளை எறிந்து விட்டு போகிறீர்கள்...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. பதிவு.

அகல்விளக்கு said...

நன்றி...

**வானம்பாடிகள் அய்யா...
**தியா...
**நித்திலம்...
**ஸ்வர்ணரேக்கா...
**ராஜி மேடம்..
**ரோகிணி அக்கா...
**வேலு அண்ணா...
**தேவன் அண்ணா..
**பாலாசி அண்ணா...
**கதிர் அண்ணா..
**கார்த்திகைபாண்டியன் அண்ணா...
**ஸ்ரீ அண்ணா...
**பாரத் பாரதி நண்பர்கள்...
**சுகுமார் அண்ணன்...
**நண்பர் கமலேஷ்...

:)

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty
click here to enjoy the life

Anonymous said...

வணக்கம் உங்களோடு கரம் கோர்க்கிறேன்.

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள் .. வாழ்த்துக்கள் ...! அப்புறம் .. ஜெயா டிவி - ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் .. கொஞ்சம் வந்து பாருங்கள்... ! http://erodethangadurai.blogspot.com/

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger