Friday, October 8, 2010

காதல் விதைகள் - 5

காற்று திசைகளைத் திறக்கிறது!
பனித்துளிகள் பியானோ இசைக்கின்றன!
பறவைகளும் அவள் பெயரை உச்சரிக்கின்றன!
உதிக்கும் சூரியனும் உறைந்து நிற்கிறான்!

பேனா முனைவழி,
கவிதைகள் உட்புகுந்து இதயம் சேர்கின்றன...
மழைத்துளிகள் விண்ணேறி முகில் புகுகின்றன...
காதல் அதன் வேலையைச் செய்கிறது...

அவளுக்காய் காத்திருக்கும் கணங்களில்,
காற்று காகிதமாகிறது!
சாரல் மைத்துளியாகிறது!
கணங்கள் கவிதைகளாகின்றன!
அவள் காதலாகிறாள்!
நானோ கவிதைக்காதலனாகிறேன்...!

வெண்பஞ்சில் நெய்த ஆடைகள்
அவளழகைக் குறைத்துக் காட்டுகின்றன போலும்...
சிறிது காலம் பொறுத்துக்கொள்ளட்டும்...
மேகம் திரித்துப் பெய்யும் மழைக்கோடுகளால்
ஆடை நெய்து பரிசளிக்கிறேன்...

ஆடைக்குப் பொருத்தமாக,
கூந்தலில் முடிக்க மலர் கேட்டால்
அவளிடம் எதனைத் தருவது...

அவளின் வியர்வை வாசத்தில்,
அவள் சூடிய மல்லிகைகள்
தோற்றுக்கொண்டிருக்கின்றன...
அவளின் கூந்தல் ஏறிய பின்பு,
ரோஜா கூட தலைகவிழ்ந்து நிற்கிறது...
கனகாம்பரங்கள் அவள் கூந்தல் முடிகளை
இழுத்து முகம் மூடிக்கொள்கின்றன...

நதியின் ஈரத்தைக் காற்றில் கிறுக்கும்
நாணல்போலக்
கவிதை கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...

வெண்திரள் விரல்களை விட,
அவை போடும் கோலம் அழகானதா?
இல்லை....
கோலத்தின் வளைவுகளுக்கேற்ப வளையும்
அவள் விழிகள்தான் அழகு...


25 comments:

VELU.G said...

அருமையான காதல் ராஜா

//
காற்று திசைகளைத் திறக்கிறது!
பனித்துளிகள் பியானோ இசைக்கின்றன!
பறவைகளும் அவள் பெயரை உச்சரிக்கின்றன!
உதிக்கும் சூரியனும் உறைந்து நிற்கிறான்
//
முதல்ல அப்படித்தான் இருக்கும்
என்ன பாத்தவது திருந்துங்கப்பா

ரோகிணிசிவா said...

//பேனா முனைவழி,
கவிதைகள் உட்புகுந்து இதயம் சேர்கின்றன...
மழைத்துளிகள் விண்ணேறி முகில் புகுகின்றன...
காதல் அதன் வேலையைச் செய்கிறது... //

mm , enagaoiyo poguthu , varthaikalil alaghu , merughu,polivu erikitae iruku mmmmm

♠ ராஜு ♠ said...

\\அவளின் வியர்வை வாசத்தில்,
அவள் சூடிய மல்லிகைகள்
தோற்றுக்கொண்டிருக்கின்றன...\\

ச்சே..! கிளாஸ்.

மணிஜீ...... said...

ரிப்பனா....அல்லது ரப்பர் பேண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...

திருநாவுக்கரசு பழனிசாமி said...

//கோலத்தின் வளைவுகளுக்கேற்ப வளையும் அவள் விழிகள்தான் அழகு//

கோல விழியாளோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோலத்தின் வளைவுகளுக்கேற்ப வளையும்
அவள் விழிகள்தான் அழகு//

nice

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

கவிதையல்ல.....காவியம். வாழ்த்துக்கள் உங்கள் நாயகிக்கும்......

கலாநேசன் said...

//ஆடைக்குப் பொருத்தமாக,
கூந்தலில் முடிக்க மலர் கேட்டால்
அவளிடம் எதனைத் தருவது...//
வெள்ளி நிலவைக்
கிள்ளித் தாருங்கள்.....

அழகான கவிதை.

ஈரோடு கதிர் said...

||மணிஜீ...... said...
ரிப்பனா....அல்லது ரப்பர் பேண்டா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்...
||

ஆஹா... அண்ணே செமையா இருப்பீங்க போல!


ராஜா...
கவிதை நல்லாயிருக்கு

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///அவளின் வியர்வை வாசத்தில்,
அவள் சூடிய மல்லிகைகள்
தோற்றுக்கொண்டிருக்கின்றன...
///////

கவிதையின் ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் ரசம் கசிகிறது . கவிதை அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

Chitra said...

அவளுக்காய் காத்திருக்கும் கணங்களில்,
காற்று காகிதமாகிறது!
சாரல் மைத்துளியாகிறது!
கணங்கள் கவிதைகளாகின்றன!
அவள் காதலாகிறாள்!
நானோ கவிதைக்காதலனாகிறேன்...!

.....மென்மையான காதல் கவிதை. அழகு.

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்

முரளிகுமார் பத்மநாபன் said...

ம்ம்ம் முரளி.... இன்னும் என்னடா பார்த்துட்டு இருக்க,, கிறுக்குடா கிறுக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சசிகுமார் said...

கவிதை அருமை நண்பரே. படம் செலேக்க்சன் அதை விட சூப்பர்

ப.செல்வக்குமார் said...

//பனித்துளிகள் பியானோ இசைக்கின்றன!
பறவைகளும் அவள் பெயரை உச்சரிக்கின்றன!
உதிக்கும் சூரியனும் உறைந்து நிற்கிறான்!/

உண்மைலேயே அழகா வர்ணிச்சிருக்கீங்க .,
காதல் வந்தா இப்படி எல்லாம் பண்ணுமா ..?

ப.செல்வக்குமார் said...

//கணங்கள் கவிதைகளாகின்றன!
அவள் காதலாகிறாள்!
நானோ கவிதைக்காதலனாகிறேன்...!//

நல்ல ரசனைங்க உங்களுக்கு .

ப.செல்வக்குமார் said...

//அவளின் வியர்வை வாசத்தில்,
அவள் சூடிய மல்லிகைகள்
தோற்றுக்கொண்டிருக்கின்றன...
அவளின் கூந்தல் ஏறிய பின்பு,
ரோஜா கூட தலைகவிழ்ந்து நிற்கிறது...
கனகாம்பரங்கள் அவள் கூந்தல் முடிகளை
இழுத்து முகம் மூடிக்கொள்கின்றன.//

உண்மைலேயே இந்த வரிகள் வாய்ப்பே இல்லை .,
அவ்வளவு அழகா இருக்கு ..!!

க.பாலாசி said...

//கனகாம்பரங்கள் அவள் கூந்தல் முடிகளை
இழுத்து முகம் மூடிக்கொள்கின்றன...//

ராசா... இது அழகான கற்பனை...ரொம்ப நல்லாயிருக்குங்க.

கமலேஷ் said...

அதிகாலை கவிதை..ரொம்ப நல்லா
இருக்கு நண்பரே..

வால்பையன் said...

கலக்குற சந்துரு

ஹேமா said...

//கோலத்தின் வளைவுகளுக்கேற்ப வளையும்
அவள் விழிகள்தான் அழகு//

அழகு...அழகு
காதல் எப்போதுமே அழகு.
காதலிக்கும்போது எல்லாமே அழகு !

அகல்விளக்கு said...

நன்றி...

** வேலு அண்ணா...
** ரோகிணி அக்கா...
** ராஜீ...
** மணிஜீ...
** திருநாவுக்கரசு பழனிசாமி...
** T.V.ராதாகிருஷ்ணன் ...
** நித்திலம்-சிப்பிக்குள் முத்து ...
** கலாநேசன் ...
** கதிர் அண்ணா...
** பனித்துளி சங்கர் ...
** சித்ரா அக்கா...
** ஆரூரன் அண்ணா...
** முரளிகுமார் பத்மநாபன் ...
** சசிகுமார் ...
** ப.செல்வக்குமார் ...
** பாலாசி அண்ணா...
** கமலேஷ் ....
** வால்பையன் ...
** ஹேமா ...

அனைவருக்கும் நன்றி...

இந்திரா said...

மென்மையான காதல் இலையோடுகிறது.
வாழ்த்துக்கள்

aasaisaravana said...

மிகவும் நன்றாக இருக்கிறது

Ananthi said...

///கணங்கள் கவிதைகளாகின்றன!
அவள் காதலாகிறாள்!
நானோ கவிதைக்காதலனாகிறேன்...! ////

அட அட அட... சூப்பர் வரிகள் போங்க..
ஹ்ம்ம்ம்.. ரசிச்சு எழுதிருக்கீங்க.. நல்லா இருக்குங்க. :-)))

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger