Friday, October 22, 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு லட்சத்து இருபதாயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர், கீழேகிடக்கும் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய்நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.


"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி."

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம் 


இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்


எழுதியவர் : மீனாட்சி நாச்சியார் 

நான் படித்ததில் இருந்து - உங்கள் சிந்தனைக்கு.

36 comments:

ப.செல்வக்குமார் said...

// ” நீ இவர்களைபார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னைபார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்தபோது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்கமுடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.//

உண்மையாவே எனக்கும் கண்களில் நீர் வருவதைத் தடுக்கு முடியவில்லை ..!

ப.செல்வக்குமார் said...

இதோ இப்பொழுதே எனது வாக்கினை அளிக்கின்றேன் ..!!

Anonymous said...

http://nkshajamydeen.blogspot.com/2010/10/blog-post.html

ரஹீம் கஸாலி said...

உண்மையில் இது மிகப்பெரிய தியாகம் தான். நீங்கள் சொன்ன இடத்தில் வோட்டும் போட்டாச்சு

நாஞ்சில் பிரதாப் said...

நன்றி அகல்...பகிர்வுக்கு நன்றி....

Saravana kumar said...

ஓட்டும் போட்டாச்சு. என் பதிவில் மீள் பதிவும் போட்டாச்சு.நல்ல பதிவு

பதிவுலகில் பாபு said...

நல்ல பகிர்வுங்க.. ஓட்டு போட்டாச்சு..

subra said...

இவருதானைய உண்மையான கடவுள் ,அப்போ
வரும் இப்போ வரும் என்று நம்புற அந்த (இல்லாத )
கடவுள விட கருணையே வாழ்கை என்று வாழும்இவருதான்
கடவுள் .

ராஜவம்சம் said...

போட்டாச்சி.

முடிந்தால் மதுரை செல்லும் போது சந்திக்க ஆவலாக உள்ளேன் உங்களைப்போலவே

Thangaraju said...

போட்டாச்சு. போட்டாச்சு...
நல்ல பதிவு

க.பாலாசி said...

நன்றிங்க ராசா.. அவர் தளத்தில் இதை பார்த்தால் இன்னும் கொஞ்சம் அவரது சேவையை உணரலாம் http://www.akshayatrust.org/visuals.php

எஸ்.கே said...

நெகிழ்ச்சியான பதிவு! அவருக்கு வாழ்த்துக்கள்!

Arunram said...

Thank you for the post and the information.

A small glitch in your post:

தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

------------------------

CNN site says 1.2 million meals have been distributed, which translates to 12 lakhs (and not 1 crore and 20 lakhs).

-----------------------------------

மங்குனி அமைசர் said...

கடைசில வெளிநாட்டுக்காரன் தான் முதல்ல நமக்கு அவர அவர் செய்யும் வேலைகளை அறிமுகம் செய்து வைத்து இருக்கான் .

thamizhan said...

mmm innum naattila manitha thanmai ullavarkal irukkiranga enru kelvippadumbothu makizhchchiyaaga irukkirathu.

ஸ்ரீ said...

ஓட்டுப் போட்டாச்சு,உங்களுக்கும் அவருக்கும்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

என் வோட்டும் போட்டாச்சுங்க.......

வார்த்தை said...

no doubt this post is for a reason, but still credit the original contributor with name and link to the blog page bearing this article.

with no offense....

SENTHIL said...

good

♠ ராஜு ♠ said...

Hats Off to Narayanan!

Anonymous said...

The Great Salute to Mr.Narayanan!

Anitha said...

Hats off The Real Hero!

Anonymous said...

நாராயணன் காக்கும் கடவுள்

அறிவில்லாதவன் said...

மீனாட்சி நாச்சியார் போட்ட பதிவை நீங்கள் போட்டு உங்கள் பதிவு போல காட்டுவது என்ன நியாயம். ஒரு நல்ல விஷயத்தை பரப்புவது சரி தான். ஆனால் அந்த credit அவருக்கும் போக வேண்டும் அல்லவா. அவருடைய லிங்க்-ஐ நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். அல்லது அவருக்கு நன்றியாவது சொல்லிருக்க வேண்டும்

நந்தா ஆண்டாள்மகன் said...

பகிர்வுக்கு நன்றி

அகல்விளக்கு said...

//அறிவில்லாதவன் said...
மீனாட்சி நாச்சியார் போட்ட பதிவை நீங்கள் போட்டு உங்கள் பதிவு போல காட்டுவது என்ன நியாயம். ஒரு நல்ல விஷயத்தை பரப்புவது சரி தான். ஆனால் அந்த credit அவருக்கும் போக வேண்டும் அல்லவா. அவருடைய லிங்க்-ஐ நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். அல்லது அவருக்கு நன்றியாவது சொல்லிருக்க வேண்டும்//

சாரிங்க அறிவு...
இந்த பதிவை நான் எடுத்த இடம் http://blog.sachinsoft.com/2010/10/2010.html
இதுதான்.
இதை எழுதியவருக்கான லிங்க்கை அவரும் கொடுக்கவில்லை...

இணையத்தில் தேடினால் இக்கட்டுரையை நீங்கள் நிறைய இடங்களில் காணலாம்...

http://www.google.co.in/#sclient=psy&hl=en&site=&source=hp&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87.+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D.+&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=&pbx=1&fp=9e2cd84664e48592

என்னைப் பொறுத்தவரை இது ஒரு பகிர்வு மட்டுமே.. படைப்பு அல்ல... (இறுதி வாசகத்தைப் பாருங்கள் நண்பா...)

இதை எழுதியது மீனாட்சி என்பது நீங்கள் சொல்லித்தான் இப்போது எனக்குத் தெரியும்...

மீனாட்சி அவர்கள் இதை எழுதியிருக்கும் பட்சத்தில், அவர் அதிருப்தி தெரிவித்தால் நிச்சயம் இப்பதிவை நீக்கி விடுகிறேன்...

எப்படியோ...
ஒரு ஆயிரம் பேரிடமாவது இதை நான் கொண்டு சென்று விட்டேன்...

அது போதும்...

மீனாட்சி அவர்களின் லிங்க் சேர்க்கப்பட்டுவிட்டது நண்பா... :)

மயாதி said...

happy to read!!!!!!!!!!!! very good work

Anonymous said...

கோடிகளை குவிப்பவர்களை விலக்கி விட்டு நம்மைப் போன்றவர்கள் நமக்குள் கை கோர்த்தால் எல்லோரும் முன்னேறலாம்.நாம் எல்லோரும் நம்மால் முடிந்த உதவிகளை அடுத்தவர்களுக்கு செய்ய விரும்பும் நல்லவர்களே.ஒன்று சேர்க்க யாராவது வர வேண்டும்.பழக்கம் அப்படி.எல்லோரும் சேர்ந்து தானே சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள்.

jabeer said...

நல்ல பகிர்வுங்க.. ஓட்டு போட்டாச்சு.

மதுரை சரவணன் said...

nalla pathivu. enka madurai kaarar parri perumaiyaaka eluthi avarin muyarchchi marrum sevaikku oru okkam koduththamaikku vaalththukkal.

dineshkumar said...

இமை மூடியும் நீர் சுரந்தது
இமை திறக்க முயல்கையில்
தலையணை தண்ணீரில்
மூழ்கியது நண்பா..........

dineshkumar said...

பெருமைப்படுகிறேன் நானும் தமிழன் என்று..........

dineshkumar said...

ஒட்டு போட்டுவிட்டேன் நண்பரே.....

Anonymous said...

marai usa thanks voted

நாஞ்சில் மனோ said...

மிகவும் பாராட்டப் பட வேண்டியவர் இவர்தான்,
ம்ஹூம் நமக்குதான் எந்திரன் காய்ச்சல் இன்னும் தீரவில்லையே!!!!

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger