Monday, November 22, 2010

நகரமும், அழுத்தமும்...

.


வேறுபாடு

வெறுப்பாய் பார்க்கிறாள்
எஜமானியின் மகள்!!

ஆவலாய் பார்க்கிறாள்
வேலைக்காரியின் மகள்!!

அமைதியாய் பார்க்கிறது
உடைந்துபோன பொம்மை, குப்பைக்கூடையில்!!

********************

நகரம்

இரைச்சல் நிறைந்த
நகரப்பேருந்து நிலையம்!!

இதமாய்க் கேட்கிறது
குயிலின் சோககீதமொன்று!!

அழைப்பை எடுக்கத் தாமதிக்கிறது
அருகிலிருப்பவனின் மனம்!!

********************

இனிய இல்லம்

வீட்டிலிருந்த பொருட்களை
கீழேபோட்டு உடைத்துக்கொண்டிருந்தான்.
தலைக்கேறிய கோபத்துடன் கணவன்!

காதுகூசும் வசைவார்த்தைகள் வேறு
அவ்வப்போது வந்து கொண்டிருந்தன!!

அழுது வீங்கிய முகத்துடன்
கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் அவள்.
தொலைக்காட்சித் தொடர் முன்பு!!

********************

அழுத்தம்

வியாபார இலக்கு,
மேலாளர் வசைப்பேச்சு,
முடிக்கப்படாத அலுவல்கள்,
தாமதமான கணக்குச் சேர்ப்புகள்,
சோம்பல் முறிக்கும் காப்பித்தண்ணிகள்,
மாலைத் தலைவலிக்கு சாரிடான்,

இரவில்...

கசங்கிய மனதை மேலும் கசக்குகிறது,
வாங்கிவர மறந்துவிட்ட 'பென்சில் பாக்ஸ்'.
 .

17 comments:

VELU.G said...

//இரவில்...

கசங்கிய மனதை மேலும் கசக்குகிறது,
வாங்கிவர மறந்துவிட்ட 'பென்சில் பாக்ஸ்'.
//

ரொம்ப நல்லாயிருந்துச்சு ராஜா

நமக்கு எப்பவுமே நடக்கறதுதான்

VELU.G said...

//அழுது வீங்கிய முகத்துடன்
கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் அவள்.
தொலைக்காட்சித் தொடர் முன்பு!!
//

அருமை

ஸ்வர்ணரேக்கா said...

குயிலின் சோககீதமும், பென்சில் பாக்ஸ்ம் அருமை...

ரோகிணிசிவா said...

//கண்ணீர் வழிய அமர்ந்திருந்தாள் அவள்.
தொலைக்காட்சித் தொடர் முன்பு!!
//

pongavudmaa niruthithiyaa rasaa

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அனைத்தும் அருமை நண்பரே அதிலும் இனிய இல்லம் என்ற தலைப்பில் சொல்லி இருக்கும் நிலை இன்றைய எதார்த்தத்தை அழகாய் காட்டி இருக்கிறது . பகிர்வுக்கு நன்றி

வெறும்பய said...

அனைத்தும் அருமை..

ammu said...

கசங்கிய மனதை மேலும் கசக்குகிறது,
வாங்கிவர மறந்துவிட்ட
'பென்சில் பாக்ஸ்'.

ரொம்ப நல்லா இருக்கு ராஜா

சத்ரியன் said...

இனிய இல்லம் - வேற்பாடு - நகர அழுத்தம்.... எல்லாம் நல்ல கவிதைகளாகவே இருக்கே சாமீ!

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு ராஜா.. ஏதாவது புத்தகத்துக்கு அனுப்பியிருந்தீங்களா?

அகல்விளக்கு said...

@கார்த்திகைப் பாண்டியன்...

புத்தகத்திற்கெல்லாம் அனுப்பவில்லை அண்ணா...

ஈரோடு கதிர் said...

தம்பி எல்லாமே அருமை

அதிலும் அந்த பென்சில் பாக்ஸ் மனதிற்குள் படம் வரைந்து கொண்டேயிருக்கிறது

க.பாலாசி said...

ரொம்ப நல்ல கவிதைகள் ராசா.. ஒவ்வொரு கவிதையும் அழுத்தமும் ரசனையும் கூட்டிச்செல்கிறது...

கும்க்கி said...

க்ளாஸ்...

வானம்பாடிகள் said...

ம்ம்ம்ம்அருமை..ஏன் அடிக்கடி எழுதறதில்லை:)

ப.செல்வக்குமார் said...

//அமைதியாய் பார்க்கிறது
உடைந்துபோன பொம்மை, குப்பைக்கூடையில்!!//

கலக்கிட்டீங்க ., எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .!!

ப.செல்வக்குமார் said...

//கசங்கிய மனதை மேலும் கசக்குகிறது,
வாங்கிவர மறந்துவிட்ட 'பென்சில் பாக்ஸ்'.
.//

இதுவும் ரொம்ப அருமையா இருக்கு ..!!

நந்தலாலா said...

பொம்மைக் கவிதை... மாறுபட்டப் பார்வை! அருமை!! வாழ்த்துக்கள்!!

"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger