Friday, December 10, 2010

நிஜத்தில் ஸ்பரிசிக்கலாம்நனைந்த சிறகுகளின் ஈரம் காயும்வரை
மழைநின்ற வானத்தை வெறிக்கும்
சிறுபறவையாக உணர்கிறேன்....

இருநாட்கள் இல்லாவிடில்
ஏனிந்த இடைவெளியென்று
விவரனை கேட்கும் உள்ளங்கள்...

மென்பொருள் மூலகமும்
வன்பொருள் மூலகமும்
சேர்த்துப்பிடித்து அழுத்தும்போதும்
சன்னமாய் சிரித்திருப்போம்...

"மதியம் தயிர்சாதம்டா.... :-( " 
என்று மும்பையில் அழும் நண்பனும்,
"மச்சினனுக்கு ஆண்குழந்தை..."
என்று இலங்கையில் சிரிக்கும் தோழியும்,
முகமறியா நட்பில் பூத்தவர்கள்....

தூங்கிவிழுந்து கொண்டிருக்கும் இரவில்
"குட்மார்னிங்" என ஆரம்பிக்கும் ஒருவர்....
"டெவில் ட்ரீம்ஸ்" என முடிக்கும் ஒருவர்...
அலுவலக அழுத்தங்களிடையே 
அனைவரும் சேர்ந்து 
ஒருமுறையேனும் சிரித்திருப்போம் 
நம் சிரிப்பான்களோடு...

இறுகிய முகத்தில் புன்னகை மலரும்போது
எதைப்பார்க்கிறான் என்று எட்டிப்பார்க்கும்
சக நண்பர்களுக்கும் கொட்டு வைத்திருப்போம்...

ஊன்றிப் படித்து அருமை என்று
தட்டிக் கொடுத்தவர்களையும்
களைகள் பிடுங்கி இன்னும்செய் என்று
கொட்டிக் கொடுத்தவர்களையும்
நேரில் சந்திக்க ஒரு அழைப்பு....

"அடடே
அவரா நீங்கள்.." என்று ஆச்சர்யப்படுவதற்கும்
"அதப்படிச்சு அழுதுட்டேன் சார்..."
என்று அடைப்புக்குறி இடுவதற்கும்
வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்....

டிசம்பர் 26 - ஈரோடு - சங்கமம் 2010இணையத்தில் வருடிய விரல்களை 
நிஜத்தில் ஸ்பரிசிக்கலாம் வாருங்கள்.....


22 comments:

ஈரோடு கதிர் said...

அடடா!

அசத்தல்..

Chitra said...

வாழ்த்துக்கள்!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கவிதை வடிவில் ஒரு அழைப்பு.

அழகு.

வானம்பாடிகள் said...

அருமையான மடல்:)

க.பாலாசி said...

அவ்வண்ணமே கோரும்
‘க.பாலாசி’யும்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

இந்த கவிதைக்காகவே, கூட்டம் வந்து அலைமோதப் போகுது பாருங்க அகல்விளக்கு. சூப்பர், வரவேற்பு.....அதான்...அதான்...அதேதான்...நம்ம கொங்கு மணம்.....இல்லையா?

லவ்டேல் மேடி said...

சிங் இஸ் கிங்.....

# டவுட்டு : உக்காந்து யோசிப்பீங்களோ...??!!

செல்வா = வடை வ(வா)ங்கி said...

//நனைந்த சிறகுகளின் ஈரம் காயும்வரை
மழைநின்ற வானத்தை வெறிக்கும்
சிறுபறவையாக உணர்கிறேன்....
///

கலக்கல்ங்க ., அதே மாதிரி எங்க தினம் ஒரு மொக்கை பற்றி சொல்லவே இல்ல ..!!

cheena (சீனா) said...

அன்பின் அகல் விளக்கு - அருமை அருமை - கவிதை அருமை - தேர்ந்தெடுத்த சொற்கள் - நல்ல சிந்தனை - வாழ்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஸ்ரீ said...

வருகிறேன்.:-))))))

இராமசாமி said...

Arumai.. azhagu.. asathal...

(Excuse me no tamil font in office).

மாதேவி said...

அருமை. வாழ்த்துக்கள்.

தாராபுரத்தான் said...

சுகம்ங்க...பொடிநடையா கிளம்பிட்டோம்ல்ல..

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அழைப்பிதழில் ஒரு புதுமை புகுத்தி அசத்தி இருக்கீங்க . வாழ்த்துக்கள் நண்பரே . பகிர்வுக்கு நன்றி

கனிமொழி said...

அஹா, அருமையான அழைப்பு ஜெய்!! ம்ம்ம்ம்... Enjoyyyyyyyyyyyyyyyy!!!!!!
:)

ஹேமா said...

அழகான தேர்ந்தெடுத்து அடுக்கிய சொற்களில் கவிதை அற்புதம் !

சி. கருணாகரசு said...

கவிதை மிக இயல்பாய் கதை சொல்லுதுங்க ..... காலம் கடந்து படித்தாலும் சூழலுக்கு ஏற்ப வடித்துள்ளீர்கள்.... பாராட்டுக்கள்.

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

அருமை. சந்திப்பு நடந்ததா ?

அகல்விளக்கு said...

@ சிவகுமாரன்

சந்திப்பு மிக மிக அருமையாக நடந்து முடிந்தது நண்பரே....

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Late வாழ்த்துக்கள்..!

Part Time Jobs said...

Nice Info Keep it up!

Home Based new online jobs 2011

Latest Google Adsense Approval Tricks 2011

Just Pay Rs.1000 & Get Google Adsense Approval Tricks.

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

New google adsense , google adsense tricks , approval adsense accounts,

latest adsense accounts , how to get approval adsense tricks, 2011 adsense tricks ,

Quick adsense accounts ...

More info Call - 9994251082

Contact My Mail ID- Bharathidasan88@gmail.com

சி.கருணாகரசு said...

அகல் விளக்கு ஏன் ஆளையே காணோம்...... வாங்க களத்துக்கு.

Post a Comment

கருத்துக்களை பதிவு செய்யுங்கள்...

Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger