Friday, July 20, 2012

எப்போது...

துருப்பிடித்த சைக்கிளுடன், கைகள் நடுங்க
சாலை கடக்கத் தடுமாறும் முதியவரை
புயலென நாம் கடந்து வந்த பின்னும்
'ஒரு நிமிஷம் வண்டியை நிறுத்து!'
எனச் சொல்லி அவர் பாதுகாப்பாக சாலை கடந்ததை
பார்த்துப் பின் போலாம் என்று சொன்னாயே...

அந்த கணத்தில் தோன்றியிருக்கலாம்
உன்மீதான என் காதல்...




Share

Bookmark and Share
 

அகல்விளக்கு Copyright © 2011 -- Template created by O Pregador -- Powered by Blogger